Header Ads



இலங்கையின் தேசிய கீதத்தை பாடிய, பின்னணி பாடகி ராணி காலமானார்


தமிழ், சிங்களம், தெலுங்கில் ஏராளமான படங்களில் பாடியதுடன், இசை முரசு நாகூர் ஹனீபாவுடன் இணைந்து பாடல்களை பாடிய பழம்பெரும் பின்னணி பாடகி ராணி காலமானார். 

இறக்கும் போது அவருக்கு வயது 75. 

1951 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான ரூபவாஹினி திரைப்படத்தில் தனது எட்டாவது வயதில் பாட தொடங்கியவர் ராணி. 

மேலும் இலங்கை நாட்டின் தேசிய கீதமும் இவரால் பாடப்பட்டதாகும். தனது கம்பீரக் குரலால் இஸ்லாமிய கீதங்கள் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆரம்ப கட்ட பிரசார பாடல்களை பாடிய ´இசைமுரசு´ நாகூர் ஹனீபாவுடன் இணைந்து சில பாடல்களை ராணி பாடியுள்ளார். 

சமீபகாலமாக உடல்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பாடகி ராணி தனது 75 ஆம் வயதில் ஐதராபாத் நகரில் காலமானார். 

அவரது மறைவுக்கு திரையுலகம் மற்றும் இசைத்துறையை சேர்ந்த பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

(அரசாங்க தகவல் திணைக்களம்)

1 comment:

  1. Who could forget her classic song “Ellam mayai thana” from the old movie “Devadas”?

    ReplyDelete

Powered by Blogger.