July 04, 2018

ஊனமில்லாத உடலையும், மனதையும் கொண்டவர்களுக்கு


என்றாவது நீங்கள் இறைவன் எனக்கு, எதனை தந்தான் என்று சிந்தித்து உள்ளீர்களா?

அவ்வாறெனில் இதனை முழுமையாக வாசியுங்கள்.

நம்மில் பலர் இறைவன் எனக்கு எதனை தந்து இருக்கின்றான் என்று துன்பம் வரும்போது அல்லது பொருளாதார நெருக்கடியில் இருக்கும் போது நினைப்பதுண்டு.

ஆனாலும் நமக்கு இறைவன் எல்லாவற்றையுமே தந்திருக்கின்றான் என்பதை நாம் அந்த நேரத்தில் உணர்வதில்லை.

நம்மை சோதிப்பதற்காக கஷ்டங்களை தந்த இறைவன் நமக்கு உடலியல் ரீதியான எந்தத் துன்பத்தையும் அனுபவிக்க கொடுக்கவில்லை ஏனெனில் இங்கு சுதந்திரமாக நடமாட முடியாது பேசமுடியாது கேட்க முடியாத இவர்களோடு ஒப்பிடுகையில் எனக்கு எல்லாம் கிடைத்திருக்கிறது என்ற மகிழ்ச்சியோடுவாசியுங்கள்.

இலங்கையின் வவுனியா மாவட்டம் செட்டிகுளம் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கிராமம் ஒன்றில் வசித்து வரும் 27 வயதையுடைய சுமையாவின் கதையே இது.

பிறப்பு முதலே பேச முடியாமலும் கைகள் மற்றும் கால்கள் என்பன ஊனமுற்ற நிலையிலும் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை வைத்தியசாலைக்கும் வீட்டின் முற்றமும் அறைக்குள்ளும் அவளது வாழ்க்கைப் பயணம் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

மிகுந்த வறுமைக்கோட்டின் கீழ் வாழும் சுமையாவின் குடும்பத்தில் அவளது தந்தை மூச்சுவிடுவதற்கு அவதிப்படும் நிலையில் நோயாளியாக புத்தளம் மாவட்டத்திலுள்ள அவரது உறவினர் ஒருவரின் வீட்டில் வசித்து வருகின்றார்.

வயது முதிர்ந்த அவளது தாயும் சுமையா வை விட்டு எங்கும் செல்ல முடியாததால் அவளை முழு நேரமாக பராமரித்துக் கொண்டு நோன்பு மாதத்தில் கிடைக்கப்பெற்ற உலர் உணவுப் பொருட்களை வைத்து அந்த கிராமத்தில் வீட்டுத் திட்டத்தில் வழங்கப்பட்ட வீடொன்றில் உரிமையாளரின் அனுமதியோடு இலவசமாக வசித்து வருகின்றனர்.

ஆனாலும் அவர்கள் இருக்கும் வீட்டில் தண்ணீர் வசதி இல்லாத காரணத்தால் அவர்கள் வசிக்கும் வீட்டுக்கு முன்னால் உள்ள பிரதான வீதியை கடந்து சுமையாவை நீராட்டுவதற்கு கொண்டு செல்வதுடன் ஏனைய இதர தேவைகளுக்கும் தண்ணீர் எடுத்து உடல் முழுவதும் வலி ஏற்பட்டு விட்டதாக அவளது தாயார் மிகுந்த வேதனையுடன் தெரிவித்தார்.

அதுமாத்திரமன்றி சுமையா வை இந்தத் தேவைகளை நிறைவேற்ற பக்கத்து வீட்டுக்கு அழைத்துச் செல்ல ஒரு சக்கர நாற்காலி இல்லாத காரணத்தால் சில வேளைகளில் அவள் வீதியிலே விழுந்து கை கால்களில் காயம் ஏற்பட்டதையும் வேதனையுடன் காண்பித்தார்.
ஆனாலும் அவளது உடலில் காயங்கள் ஆறாமல் இருந்தாலும் நாங்கள் என்ன பேசிக் கொள்கிறோம் என்பதை அறியாத அவள் என்னை பார்த்து புன்னகைத்துக் கொண்டே இருந்தாள்.

அன்பான நண்பர்களே முதலில் சுமையாவை உங்களது குடும்பத்தில் ஒரு உறுப்பினராக எண்ணிக் கொள்ளுங்கள்.

நம்மால் பெரிதாக ஒன்றும் செய்ய முடியாது ஆனாலும் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த இரு ஜீவன்களையும் இன்னும் சில காலம் வாழ்வதற்கு வழி சமைக்க முடியும்

கள்ளமில்லாத  இந்தப் புன்னகை அவள் உயிர் மூச்சு இருக்கும் வரை அவ்வாறே இருக்கச் செய்வது நம் கடமை அல்லவா.

சுமையாவால் கட்டிலில் தூங்க முடியாது ஆனாலும் இரவில் தூங்குவதற்கு ஓர் (single mattress) அவளை நுளம்பு கடிக்காமல் பாதுகாத்துக்கொள்ள ஒரு நுளம்பு வலையும்
அவளது உடலில் இனிமேல் காயங்கள் ஏற்படாமல் இருக்க சக்கர நாட்காலி ஒன்றும்
சுமையாவின் தேவைகளுக்காக நீர் வசதி செய்து கொள்வதற்கு one inch அளவிலான மின்பம்பி காணப்பட்டாலும் பக்கத்து வீட்டு கிணற்றிலிருந்து நீரை கொண்டு கொண்டுவருவதற்கான 250 மீட்டர் அளவிலான நீர் குழாய்கள் என்பனவற்றோடு அந்த தாயும் மகளும் அன்றாடம் உண்பதற்கும் ஏனைய செலவுகளுக்கும் மாதாந்தம் ஒரு 3000 ரூபாய் பணமும் இருந்தால் நமது சகோதரி சுமையா நமது தோழி சுமையா நமது மகள் சுமையா புன்னகைத்துக் கொண்டே இருக்க உதவும் என்பது அந்தத் தாயின் எதிர்பார்ப்பும் கோரிக்கையும் ஆகும்.
நண்பர்களே உங்களது குடும்ப உறுப்பினர் சுமையா உங்களை எதிர்பார்த்துக் காத்திருக்கிறாள். நீங்களே நேரில் சென்று உங்களால் முடிந்த உதவிகளை அவர்களுக்குசெய்ய முடியும். 

அல்லது உங்களால் வழங்கப்படும் சின்ன சின்ன உதவிகளை ஒன்றுசேர்த்து நம் சகோதரி சுமையாவுடையதும் அந்தத் தாயின் தேவைகளையும் இறைவனின் பொருத்தத்தை மட்டும் எதிர்பார்த்து என்னால் சரியாக செய்து  முடியும்.

(தகவல் பதிவு செய்யப்படும் திகதி04.07.2018)

மேலதிக தகவல்களை தெரிந்து கொள்ளவும் சம்பவத்தை உறுதிப்படுத்திக் கொள்ளவும் அழையுங்கள்.  சர்ஜான் 0774828281.

நண்பர்களே உங்களால் உதவ முடியாவிட்டாலும் பரவாயில்லை இந்த தகவலை உதவக்கூடிய உங்களது நண்பர்களுக்கு அனுப்பி வைத்து ஒரு குடும்பத்தை வாழ வைக்க உதவி செய்யுங்கள் 

ஒரு நாள் நீங்கள் செய்த இந்த உதவி உங்களை காப்பாற்றும்.

நன்றி

1 கருத்துரைகள்:

சிறந்த தகவல்

மர்சூக் மன்சூர்
தோப்பூர் -07
அபுதாபி
+971561763766

Post a Comment