Header Ads



பெனால்டி ஷூட்டில் ரஷியாவை வீழ்த்தி, அரையிறுதியில் நுழைந்தது குரோஷியா


உலகக் கோப்பை கால்பந்து தொடரின் நான்காவது காலிறுதி ஆட்டத்தில் பெனால்டி ஷூட் முறையில் ரஷியாவை 4-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய குரோஷியா அரையிறுதிக்குள் நுழைந்தது. 

உலக கோப்பை கால்பந்து - பெனால்டி ஷூட்டில் ரஷியாவை 4-3 என வீழ்த்தி அரையிறுதியில் நுழைந்தது குரோஷியா
உலகக் கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நடைபெற்று வருகிறது. லீக், நாக்அவுட் சுற்றுகள் முடிந்து நேற்று முன்தினம் காலிறுதி ஆட்டங்கள் தொடங்கின.

இந்திய நேரப்படி இரவு 11.30 மணிக்கு தொடங்கிய நான்காவது காலிறுதி ஆட்டத்தில் ரஷியா - குரோஷியா அணிகள் மோதின.

தொடக்கம் முதலே இரு அணி வீரர்களும் தங்களது ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆட்டத்தின் 31-வது நிமிடத்தில் ரஷியா வீரர் டெனிஸ் செரிஷேவ் ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார். இதனால் ரஷியா அணி 1-0 என முன்னிலை வகித்தது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆட்டத்தின் 39-வது நிமிடத்தில் குரோஷியா வீரர் ஆண்ட்ரே கிரிமெரிக் ஒரு கோல் அடித்தார். இதையடுத்து, ஆட்டத்தின் முதல் பாதியில் ரஷியா, குரோஷியா அணிகள் 1-1 என சமனிலை வகித்தன.

ஆட்டத்தின் இரண்டாவது பாதியிலும் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதையடுத்து, கூடுதல் நேரம் வழ்ங்கப்பட்டது.

இதை பயன்படுத்தி ஆட்டத்தின் 100-வது நிமிடத்தில் குரோஷியா வீரர் டொமகோஜ் விஜே ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார். முதலாவதாக வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தில் குரோஷியா 2-1 என முன்னிலை பெற்றது.

தொடர்ந்து, இரண்டாவது முறையாக வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தில் 115வது நிமிடத்தில் ரஷியா அணியின் பெர்னாண்டஸ் ஒரு கோல் அடித்தார். இதனால் இரு அணிகளும் சமனிலை வகித்தன. இறுதியில் பெனால்டி ஷூட் அவுட் முறை வழங்கப்பட்டது.

முதலில் ரஷியாவின் வாய்ப்பை குரோஷியா கோல்கீப்பர் தடுத்துவிட்டார். ஆனால் குரோஷியா அணி முதல் வாய்ப்பில்   கோல் போட்டது.

இர்ண்டாவது வாய்ப்பை ரஷிய கோலாக்கியது. ஆனால் குரோஷியாவின் வாய்ப்பை ரஷியா கோல் கீப்பர் தடுத்துவிட்டார்.
இதனால் மீண்டும் 1 - 1 என சமனானது.

மூன்றாவது வாய்ப்பை ரஷியா வீணாக்கியது. குரோஷியா மீண்டும் கோலாக்கியது. இதனால் 1-2 என முன்னிலை பெற்றது.

நான்காவது வாய்ப்பை ரஷியா கோலாக்கியது. குரோஷியாவும் கோல் அடித்ததால் 2-3 என முன்னிலை பெற்றது.

இறுதியாக, ஐந்தாவது வாய்ப்பை ரஷியா கோல் போட்டதால் 3-3 என சமனானது. குரோஷியா மீண்டும் ஒரு கோல் அடித்து 4-3 என  வெற்றி பெற்றதுடன் அரையிறுதிக்குள் நுழைந்தது.

No comments

Powered by Blogger.