July 15, 2018

"முஸ்லீம் மாணவிகள், முகத்தினை மூடுவதினால் தனிமைப்படுத்தப்படுகின்றனர்"

(அஷ்ரப் ஏ சமத்)

முஸ்லீம் சமய விவகார அமைச்சும் (ஏஎப்சி) தேசிய நல்லிணக்க கவுன்சிலும் இணைந்து  நாடு முழுவதிலும் உள்ள 154 பள்ளிவாசால்களின் நம்பிக்கையாளா் சபைக்குழுவை அழைத்து சிறந்த 20 பளள்ளிவாசல்களுக்கு  விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந் நிகழ்வு நேற்று(14) அலரிமாளிகையில்  நடைபெற்றது.

இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக சபாநாயகா் கருஜயசூரிய கலந்து கொண்டாா். அத்துடன் அமைச்சா்களான  ஏ. ஹலீம், றிசாத் ்பதியுத்தீன், மனோ கனேசன், ஏ.எச்.எம். பௌசி பிரதியமைச்சா்  அலி சாஹிா் மொலனா, பாராளுமன்ற உறுப்பிணா்களான முஜிபு ரஹ்மான், எஸ்.எம் மரிக்காரும் மற்றும் அரபு நாடுகளின் துாதுவராலய பிரநிதிகளும் கலந்து சிறப்பித்தனா்.

ஜெயவா்த்தன பல்கலைக்கழக  சிரேஸ்ட விரிவுரையாளா் அமலத் தேரோ அங்கு உரையாற்றுகையில்

பள்ளிவாசல்கள் மத விடயங்கள்  மட்டுமல்லாது  இனங்களையும் நல்லிணக்கப்படுத்துகின்றது.  பள்ளிவாசல்களை பௌத்தா்கள், ஹி்ந்து  கிரிஸ்த்தவா்கள் ஆண், பெண் என்ற வா்க்க  வித்தியாசம் இல்லாமால் சகலரும் அங்கு சென்று தமது மத கலை கலாச்சார  மற்றும் சமுக பொருளாதார விடயங்களில் நாம் அறிந்து கொள்ளல் ்வேண்டும்.  நாம் சகல இனமும்  ஒன்றினைந்து  முன்சென்றால்  இந்த நாட்டினை எவரும் பிரிக்கவோ, குழுப்பவோ முடியாது.  இந்த உலகில் ஒரு சிறந்த நாடாாக இலங்கை விளங்குகின்றது. இலங்கை போன்றதொரு நாடு உலகில் எங்கும் காணமுடியாது 4 இனங்கள் 3 மொழிகள் பேசும் ஒரு நாடு இந்த மேடையில் உள்ள  பூக் கொத்தினைப் பாருங்கள் இந்தப் பூவில் பல வா்ணப் பூக்கள் இணைந்து பல வா்ணத்தில் இருக்கும்போது மிகவும் அழகாக உள்ளது. இது போன்று தான் எமது நாடும் நமது நாட்டில் வாழும் சகல இனங்களும்.  

  இந்த நாட்டில்  70 வீதம் பௌத்தா்கள் 12 வீதம் தமிழா்கள் 10 வீத முஸ்லீம்கள் 6 வீத கிரிஸ்த்தவாக்ள வாழ்கின்ற  சக வாழ்வு கொண்டதொரு அழகான நாடாகும். இந்த நாட்டில்  வாழும் சகல சமுகங்களும் ஒன்றினைந்தால் இந்த நாட்டில் எவரும் போதைவஸ்த்து கொண்டுவருதல், வெளிநாட்டவா் எமது  பிரச்சினைக்குள்  உற்படுதல்  போன்ற எந்தப் பிரச்சினையும் நாம் தடுக்க முடியும்

நாம் சிங்களவா் தமிழா் முஸ்லீம் என்ற பாகுபாடு. மலையகம் மட்டக்களப்பு தெற்கு, கண்டி என்ற பாகுபாடுகள் நமக்குள் வேண்டாம். இந்த பள்ளிவாசல்கள் செய்யும்  முறைகளை இங்கு திறையில் அவதானித்தோம். இது போன்று  ஏனைய பௌத்த மத ஸ்தாணங்களிலும் பின்பற்றப்படல் வேண்டும். பள்ளிவாசல்கள் தொழுகையை மட்டும் நடாத்தாமல் இரத்ததாணம், வீடு கட்டிக் கொடுத்தல் ஏழைகளுக்கு சுயதொழில், தாய் தந்தையா் இல்லாத அனாதைகளுக்கு கல்விக்கு உதவுதல் நோன்பு திறப்பதற்கு ஏனைய சமுகங்களை இணைத்து நோன்பு திறத்தல்  போன்ற்  நல்ல சமுக வாழ்வாதார விடயங்களில் ்ஏனைய சமுக மத ஸ்தாபணங்களும் பின்பற்றுதல் வேண்டும்.
எனது பல்கலைக்கழகத்தில்  கூடுதலான முஸ்லீம் மாணவிகள் பட்டப்படிப்பினை பயிலுகின்றனா்.  அவா்கள் முகத்தினை மூடுவதை தவிா்த்துக் கொண்டால் நல்லது. இதனால் ஏனைய  இன மாணவா்கள் அன்டி பழகமுடியாமல் முஸ்லீம் மாணவிகள்  தனிமைப்படுத்தப்படுகின்றனா்.  இதனால் ஏனைய சமுகங்களோடு பழகி அவா்களது நல்லிணக்கம் கலை கலாச்சார விடய்ங்களில் இம் மாணவிகள் தணிமைப்படுத்தப்படுகினற்னா் எனவும் அமல தேரோ் அங்கு உரையாற்றினாா்.  

10 கருத்துரைகள்:

Cover face is not from ISLAM. Its other country culture Sir.

Exactly, thats what we are insisting from Habaya issue in Trinco.
Anyway now only some tube lights are realizing the seriousness of this.

Hello Amalia Thera,

You better leave from Buddhism and embrace Islam.

Not only Muslims, even other faith female students too should be separated from males.

This is not so-called isolation.

Hello Amalia Thera,

You better leave from Buddhism and embrace Islam.

Not only Muslims, even other faith female students too should be separated from males.

This is not so-called isolation.

தாம் விரும்பாத ஒருவர் தம்மைப் பார்க்கும்போது அல்லது  தமக்குப் பாதுகாப்பில்லை எனக்  கருதக்கூடிய நேரங்களில் மாத்திரம்  மறைக்க வேண்டிய முகத்தை எப்போதும் எல்லோருக்கும் மறைத்து வைக்கும் பெண்களின் செயலுக்கான காரணம் யாதோ? பாவம் எனக்கருதுகிறார்களா?
அல்லது தமது செயலை நியாயப் படுத்தும்  ஆதாரங்களையாவது முன் வைப்பார்களா?

தம்மை எதிர்நோக்கும் பெண்களிடமாவது இன்முகம் காட்டுவது, புன்னகை புரிவது, முகமன் கூறுவது  இன்னும் விசேஷமாக சிறுவர் மீது அன்புனர்வை வெளிப்படுத்துவது அவர்களை அச்சமற்ற சூழலில் வைப்பது போன்ற இஸ்லாமியக் பண்புகளை இவர்கள் எவ்வாறு வெளிப்படுத்துவர்?

இவையும் சிறு தர்மங்கள்தானே?  தர்மங்கள் உள்ளத்திலுள்ள கசடுகளை இல்லாதொழிக்கும் என்றார்களே  நபியவர்கள்.  தாம் செய்வது நபி வழிக்கு மாற்றம் இல்லையா?

தம்மை நோக்கி ஏனையவர்கள் புன்னகைக்கும்போது தாம்   மகிழ்ச்சியுறுவது போன்றே, அவர்கள் சுயமாக எதிர்பார்க்கும் உங்கள் பதில்   புன்னகையை உங்களால் கொடுக்க முடியாததற்கு இஸ்லாத்தையா குறை கூற வைக்கிறீர்கள்?

நல்லிணக்கம் என்பது அகத்தில் இருந்து வெளிப்பட்டு முகத்தின் ஊடாகத்தானே வெளிவர முடியும்?

எதிர்கால சமுதாயத்தைக் கட்டி எழுப்பவுள்ள மாணவர்கள் மத்தியிலும் ஏனையோரிடத்திலும் இஸ்லாத்தைப்  பற்றிய ஓர் நல்ல புரிந்துணர்வை எவ்வாறு ஏற்படுத்திக் கொள்ள முடியும்?

பகுத்தறிவு மதமான இஸ்லாத்தை பல்துறைகளிலும் ஆராய்ந்துவிட்டு தமக்குச் தட்டுப்படாததை நம்மிடம் அபிப்பிராயப்படுகிறார் தேரர் இங்கு.

முகத்திரை, இதர மதத்தினரோடான நமது  நல்லிணக்கத்துக்கான திரையா என்று நாமும் நம்மைக் கேட்டுக் கொள்ளவேண்டிய ஓர் சூழலில் வாழ்கிறோம்.  நம்மைச் சுற்றி நடந்து கொண்டிருப்பவை அவ்வாறு நம்மையும் கேட்க வைக்கிறது.

பெண்களுக்குப் பொறுப்பாளர்கள் ஆண்கள் என்ற வகையில் அவர்களும் இவற்றுக்குப் பதில் சொல்ல வேண்டியவர்களே.

Quran doesn't advocates face covering. It asks females to cove their body. It asks males and females to lower their look when they see opposite sex. Prof.Mohamed too had not asked his wives to cove their face. After seeing the face of his son' wife Zainab , he wanted to marry. Govt. should enact laws to abolish this practice.Muslim females transport drugs under this dress which was not won before 1990.

எமது சமூகத்தில் சம்பந்தப்பட்டவர்கள் நடுநிலைமையாக இருந்து சிந்தனை செய்தால் இந்த தேரோ அவர்களின் கருத்தை சரியாகப் புரிந்து கொள்வார்கள். இந்த நாட்டில் நாம் அடிப்படை தவிர்ந்த ஏனைய விவகாரங்களில் விட்டுக் கொடுப்புடனும் சகிப்புத் தன்மையுடனும் நடந்து கொண்டால் அவர்கள் கூறியது போல் பலநிறமான பூக்கள் நமது கண்களுக்கு எவ்வளவு அழகாக இருக்கின்றதோ அது போல் நம் அனைவரும் கொண்ட எமது நாடு மிகவும் அழகாகவும் ரம்மியமாகவும் இருக்கும்.அதற்காக நாம் அனைவரும் ஒன்றுபட முயற்சி செய்வோம்.

Why no comments ? . Rizvi Mufti is there in the photo.😅

THIS JAHILIYAHTUL ULAMA ALWAYS LIKE THIS

DONT TRY TO ADJUST THE ISLAM FOR THE SHAKE OF THIS WORLD, IF YOU ARE MUSLIM OBEY ALLAH RULES AND LEGISLATION, DONT TRY TO ADJUST

Post a Comment