July 07, 2018

காலிறுதி போட்டிக்கு, இங்கிலாந்து அணி

உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டியில் சுவீடன் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற காலிறுதி போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று அரை இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது. 

இன்று இடம்பெற்ற இரண்டு அணிகளுக்கும் இடையிலான போட்டியில் இங்கிலாந்து அணி 2 - 0 என்ற அடிப்படையில் வெற்றி பெற்றுள்ளது. 

இங்கிலாந்து அணி 1966 ஆம் ஆண்டு உலக கிண்ண கால்பந்து சாம்பியன் என்பது குறிப்பிடத்தக்கது. 

சுவீடன் - இங்கிலாந்து அணிகளும் மோதிய போட்டிகளில் இதுவரை இங்கிலாந்து அணி 8 போட்டிகளிலும், சுவீடன் 7 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. 9 போட்டிகள் சமநிலையில் நிறைவடைந்துள்ளது. 

இதேவேளை, இன்று மற்றுமொரு காலிறுதி போட்டியும் நடைபெறுகிறது. இப்போட்டி ரஷ்யா - குரோஷிய அணிகளுக்கு இடையே நடைபெறுகின்றது.

0 கருத்துரைகள்:

Post a Comment