Header Ads



"ஜனாதிபதி வேட்பாளராக, நாமல் நிறுத்தப்படுவார்"

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு அல்லாது ராஜபக்ஷ குடும்பத்தில் வேறு எவருக்கும் கூட்டு எதிர்க் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் பதவி வழங்கப்படுவதில்லையென ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்தார்.

பதுளை பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

ராஜபக்ஷ குடும்பத்தில் நாமலுக்கு அன்றி வேறு எவருக்கும் இந்த வேட்பாளர் பதவி வழங்கப்பட மாட்டாது. ராஜபக்ஷ சகோதரர்கள் எவருக்கும் இந்தப் பதவி வழங்கப்பட மாட்டாது என நான் இன்று கூறியதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.

இது நடைபெறாது என்பதனால் தான் கூட்டு எதிர்க் கட்சியிலுள்ள ஒவ்வொருவரும் ஜனாதிபதி அபேட்சகர்கள் யார் என்பதைத் தெரியாது ஒவ்வொருவரையும் கூறிக் கொள்கின்றனர் எனவும் முதலமைச்சர் மேலும் குறிப்பிட்டார். 

1 comment:

  1. ​மேல் கூறப்பட்டவை உண்மையானால் இலங்கை மற்றுமொரு சிரியாவாக மாறும் நிலைமை வெகுதூரத்தில் இல்லை என்பதையும் எழுதிவைத்துக் கொள்ளுங்கள். எந்தவிதமான படிப்பறிவும் அற்ற அகங்காரமும் ஆணவமும் திமிரும் பெருமையும் தலையில் ஊன்றிய பதவிக்கு நியமனம் செய்யும்போது 27வயதாக இருந்த பஷ்ஷார் அஸதை சனாதிபதியாக நியமிக்க அந்த நாட்டின் சட்டத்தை இரவோடு இரவாக மாற்றி தனது மகனை சனாதிபாதியாக்கிவிட்டு ஜனாதிபதி ஹாபிஸ் அஸத் செத்துப் போய்விட்டான். பஷ்ஷாரின் கர்வமும் ஆணவமும் காரணமாக அந்த நாடு அழிந்து சிரழிந்து அந்த நாட்டு அப்பாவி மக்கள்,குழந்தைகள், பெண்கள், வயோதிபர்களை அந்த நாட்டு சனாதிபதி குண்டு போட்டு அழித்துக் கொண்டே இருக்கின்றான். அவன் இப்போது பெரும்பாலும் பிணக்காட்டு நிலையில் இருக்கும் சிரியாவுக்கு சனாதிபதியாக இருக்கின்றான். மேலே கூறப்பட்ட ஆரூடம் உண்மையானால் அந்த நிலைமை இலங்கைக்கும் வரும் காலம் வெகுதூரத்தில் இல்லை.

    ReplyDelete

Powered by Blogger.