Header Ads



தாஜூடீன் கொலை வழக்கு, இன்று நீதிமன்றத்திற்கு வந்தபோது..!

பிரபல றக்பி விளையாட்டு வீரர் வசீம் மொஹமட் தாஜூடீன் கொலை நடந்த ஹெக்லோக் வீதியில் வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த சீ.சீ.டி கெமராக்களின் பதிவான காட்சிகள் அடங்கிய இரண்டு டி.வீடிகளை கணனி அவசர பதில் அமைப்பின் நிறைவேற்று அதிகாரி லால் டயஸிடம் சமர்பித்து அறிக்கை ஒன்றை பெற்றுக்கொள்ளுமாறு கொழும்பு மேலதிக நீதவான் இசுரு நெத்திகுமார, குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு இன்று உத்தரவிட்டுள்ளார்.

தாஜூடீனின் சகோதரியான பாத்திமா அயேஷா தாஜூடீன் கடந்த வருடம் ஜூலை மாதம் 8 ஆம் திகதி வழங்கிய டி.வீ.டிக்களை கணனி அவசர பதில் அமைப்பிடம் வழங்கி, அறிக்கை ஒன்றை பெற வேண்டிய தேவை இருப்பதாக, குற்றப் புலனாய்வு திணைக்களம் விடுத்த கோரிக்கையை ஏற்று நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

4 comments:

  1. Very fast action......They can take another 10 years to give this instruction.

    ReplyDelete
  2. இந்த நல்லாட்சி ஆட்சிக்கு வரும்போது கையில் தோண்டி எடுத்த பழைய வழக்கு சம்பவம் இன்னும் அதே நிலையில்தான் மந்த கதியில் நகர்கிறது. நல்லாட்சி வந்தும் இரண்டரை வருடங்களை தாண்டி, இன்னும் இந்த ஆட்சி முடியும் வரைக்கும் இந்த வழக்கு முடியாது. அப்புரம் முடியாத இந்த மீதி வழக்கை முடித்து தருகிறோம் மீண்டும் எங்களுக்கு வாக்கழியுங்கள் என்று பிச்சை கேட்பார்கள்.அரசுக்கும் நீதிமன்றத்திற்கும் சம்பந்தம் இல்லைதான் ஆனால் இருக்கு. அல்லது இருக்குதான் ஆனால் இல்லை என்ற குதர்க்கமான முடிவுகளூக்கே வரவேண்டியுள்ளது, அந்தளவுக்கு நாட்டின் இறையான்மையென்பது, சட்டமென்பது, நம்பிக்கையென்பதெல்லாம் விலை மாதுவின் வெற்றிலை படிக்கதிற்கு சமனானது.

    ReplyDelete

Powered by Blogger.