Header Ads



முஸ்லிம்களை மீண்டும் முட்டாளாக்கலாம், என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர் - கோத்தபாய

நாட்டை தற்போது ஆளும் அரசைக் கவிழ்ப்பது குறித்து மட்டுமன்றி, எதிர்காலத்தில் உதயமாகும் அரசு எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பிலும் ஆழமாக சிந்திக்க வேண்டும் என்று பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மாத்தளையில் எலிய அமைப்பு ஏற்பாடு செய்திருந்த கூட்டமொன்றில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் ஆகியவற்றை விடுத்து சீனாவிடம் நாம் கடன்வாங்கியதாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

மேற்படி இரு நிறுவனங்களும் கடன்களை வழங்குவதற்காக முன்வைத்த நிபந்தனைகளை ஏற்றதால் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்களால் இன்று நாட்டுக்கு என்ன நடந்துள்ளது?

நாட்டில் 27 வருடங்கள் நிலவிய யுத்தத்தை ஆட்சிக்குவந்து மூன்றே ஆண்டுகளில் மஹிந்த ராஜபக்ஷ முடிவுக்குக் கொண்டுவந்தார். ஆனால், இந்த அரசோ மூன்றாண்டுகளில் முழுநாட்டையும் அழித்துள்ளது.

மஹிந்த ஆட்சி மீண்டும் உதயமானால் நல்லாட்சியால் ஏற்படுத்தப்பட்ட ஜனநாயகம் இல்லாமல் செய்யப்படும் எனச் சிலர் கூறுகின்றனர்.

பயங்கரவாதம், பாதாளகோஷ்டி மீள தலைதூக்கினால் ஜனநாயகத்தை பாதுகாக்கமுடியுமா? ஏதேனுமொரு மரணச்செய்தியுடனேயே இன்று பொழுது விடிகின்றது.

அதுமட்டுமல்ல, எவரை சிறையில் அடைக்க வேண்டும், எவருக்கு ஜம்பர் (அரைக்காற்சட்டை) அணிவிக்க வேண்டும் என்பது குறித்தே அமைச்சர்களும் குரோத மனப்பான்மையுடன் உரையாற்றுகின்றனர்.

ஜம்பர் ஜனநாயகத்தையே இவர்கள் உறுதிப்படுத்த முற்படுகின்றனர். அரச சார்பற்ற நிறுவனங்களில் நிகழ்ச்சி நிரலுக்கமையவே வழக்குகள் தொடுக்கப்படுகின்றன. இதுவா ஜனநாயகம்?

அதேவேளை, நாட்டில் பல பிரச்சினைகள் தலைவிரித்தாடும் நிலையில், அனுநாயக்க தேரரொருவர் நிகழ்த்திய அனுசாசன உரையையே ஆட்சியாளர்கள் பெரிய பிரச்சினையாகக் கருதினர்.

அவ்வுரையை திரிபுபடுத்தி பல நாட்கள் அது பற்றியே நாட்டின் தலைவர்கள் கதைத்தனர். முஸ்லிம் மக்களை திசைதிருப்பினர்.

உண்மை என்னவென்பது இன்று அவர்களுக்குத் தெரியும். முஸ்லிம் மக்களை மீண்டும் முட்டாள்களாக்கலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.

எனவே, இந்த ஆட்சியைக் கவிழ்ப்பது குறித்து மட்டுமன்றி, எதிர்காலத்தில் மலரும் அரசு எவ்வாறு நாட்டை ஆளவேண்டும் என்பது குறிதும் ஆழமாக நினைத்துப்பார்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

5 comments:

  1. Yes your true.we dont vote your family.
    We dont vote ranil my3.
    Allah will bring young and honesty ruler jn the future. Like canada.
    May allah driven over 50years ministers and mp.s from parliment.in the future

    ReplyDelete
  2. அரசியல் விடயங்களையும் சமூகத்தின் விவகாரங்களையும் எந்த ஒரு முஸ்லிமும் இவருடன் உரையாடவோ, அதுபற்றி எந்தவகையான உதவியையும் கேட்பது எதிர்காலத்தில் அது நிச்சியம் சமூகத்தின் நலத்துக்கு பாதிப்பாக அமையும் என்பது எமது பணிவான கருத்து.

    ReplyDelete
  3. அடுத்த ஆட்சி எங்கள் ஆட்சி தான். முஸ்லிம்களை இனியும் முட்டாளாக முடியாது. உங்கள் பக்கம் பொது வேட்பாளராக ஞானசாரர் அல்லது சுமணரத்ன தேரர் இறங்கினாலும் முஸ்லிம்களின் வாக்கு அன்னன் உங்களுக்கு தான். ஏனெனில் இனியும் முஸ்லிம்களை கூழ் முட்டை ஆக்க முடியாது.

    ReplyDelete
  4. According to his speech I hope all Muslims will vote for him and he will be the next president. Before vote for him all Muslims must think about Gothas companions and his relationship with Sinhala extremists. Otherwise.....

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete

Powered by Blogger.