Header Ads



இலங்கை பற்றி, பிரித்தானியா வெளியிட்ட அறிக்கை

மனித உரிமை நிலவரம் குறித்து பிரித்தானியா ஆழ்ந்த கவலை கொண்டுள்ள 30 நாடுகளில் இலங்கையும் ஒன்று என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மனித உரிமை முன்னுரிமை நாடுகளின் பட்டியலிலேயே இலங்கையை தொடர்ந்தும் வைத்துள்ளதாக பிரித்தானியா வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் 2017ம் ஆண்டுக்கான வருடாந்த மனித உரிமைகள் அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“இலங்கையில் நிலவும் மனித உரிமைகள் நிலவரங்கள் குறித்து பிரித்தானியா முக்கியமாக அவதானம் செலுத்தும். அத்துடன், மனித உரிமை விருத்திக்கான சாதகமான ஒத்துழைப்புகளையும் வழங்கும்.

இலங்கையில்  மனித உரிமை நிலவரங்களில் குறிப்பிட்டளவு முன்னேற்றமே ஏற்பட்டுள்ளது.

எனினும், சிறுபான்மை சமூகத்தினர் மீதான தாக்குதல்கள் மற்றும் மனித உரிமை மற்றும் நல்லிணக்கம் தொடர்பான அர்ப்பணிப்புகளில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

எவ்வாறாயினும், மனித உரிமைகள் மற்றும் மறுசீரமைப்பு சார்ந்த பல்வேறு முக்கிய உறுதிமொழிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை” என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.