Header Ads



பைத்தியம் என ஒதுக்கப்பட்ட நடேசனுக்கு, சிங்களவர்கள் செய்த நற்காரியம்


மாத்தளையில் மனநோயினால் பாதிக்கப்பட்டு வீதியில் விடப்பட்ட நபருக்கு, பெரும்பான்மையின இளைஞர்கள் செய்த மகத்தான செயற்பாடு தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது.

நடேசன் என அழைக்கப்படும் இந்த நபர் மாத்தளை பிரதேசத்தில் வாழ்ந்து வருகின்றார். இவர் பல வருடங்களாக அசுத்தமான வாழ்க்கை ஒன்றை வாழ்ந்து வந்துள்ளார்.

அவர் அசுத்தமாக உள்ளமையினால் மக்கள் அவரை நெருங்குவதில்லை. அத்துடன் அவரை பைத்தியம் என கூறி அந்தப் பகுதி மக்கள் ஒதுக்கி வைத்துள்ளனர்.

இந்நிலையில் பொறியியலாளரான சமரநாயக்க என்பவரும் அந்தப் பகுதி இளைஞர்கள் சிலரும் இணைந்து இந்த நபரை மீளவும் பழைய நிலைக்கு கொண்டு வரும் நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்.

நடேசனின் தலைமுடியை வெட்டி அவரை குளிப்பாட்டியுள்ளனர். பின்னர் சுத்தமான ஆடைகளை அணிவித்து மனிதனாக மாற்றியுள்ளனர்.

தென்னிலங்கையை சேர்ந்த இளைஞர்களின் செயற்பாடு காரணமாக, நடேசன் பழைய வாழ்க்கை திரும்பியுள்ளார். இது குறித்து அந்தப் பகுதி மக்கள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர்.

பைத்தியம் எனக் கூறி பலராலும் ஒதுக்கப்பட்ட நடேசனை, எந்தவித பாரபட்சமும் இன்றி சிங்கள இளைஞர்கள் செய்த செயற்பாடு பலரையும் கண் கலங்க வைத்துள்ளது. இது குறித்து சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருவருடன் பாராட்டுங்களும் குவிந்து வருகின்றன.


2 comments:

  1. When Matale moved to South Srilanka?

    ReplyDelete
  2. இப்படி சிங்களவர் ஒருவர் யாழில் இருந்தால், யாழ் தமிழன் திரும்பியும் பார்க்க மாட்டான்.



    ReplyDelete

Powered by Blogger.