Header Ads



முஸ்லிம் விவாக, விவாகரத்து தொடர்பில் முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு விளக்கமளிப்பு


முஸ்லிம் தனியார் சட்டத்தில் விவாக, விவாகரத்து சரத்தில் திருத்தம் கொண்டுவருவது தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் தலைவர் முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் சலீம் மர்சூப், தனது அறிக்கை குறித்து இன்று (19) முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமளித்தார்.

பாராளுமன்ற குழு அறையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், அமைச்சர் றிஷாத் பதியுதீன், இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி, பிரதியமைச்சர்களான அலிசாஹிர் மௌலானா, எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, காதர் மஸ்தான், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ். தௌபீக், முஜிபுர் ரஹ்மான், எஸ்.எம்.எம். இஸ்மாயில் ஆகியோர் கலந்துகொண்டனர்.

எதிர்வரும் 24ஆம் திகதி நடைபெறவுள்ள இதன் இரண்டாம்கட்ட சந்திப்பில், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா, நீதி அமைச்சின் பிரதிநிதிகள், முஸ்லிம் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத் திருத்தம் வேண்டுமென ஒருசில தரப்புகள் போராடி வருகின்ற நிலையில், இஸ்லாமிய ஷரீஆ சட்டத்துக்கு முரணாகாத வகையில் அவற்றைக்; கையாள்வதற்கு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவும் முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகளும் பல முன்னனெடுப்புகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.


5 comments:

  1. நல்லிணக்கத்துடன் தீர்மானிக்க வேண்டிய விடயங்களைப் பேசுவதற்கு SLTJ யைச் சேர்த்தால் முடிவெடுப்பது மேலும் கஷ்டமாகிவிடும். இருப்பவர்களே பல வருடங்களை எடுத்து விட்டார்கள்.

    ReplyDelete
  2. எதற்கு சட்ட மாற்றம நாம மாற்றுமத சட்டத்தின படியே செய்வோமே அதைத்தானே இஸ்லாமிய சட்டமென்று சொல்லப்பார்க்கிரோம் யஹூதி பேர்வழியினரா இதை பெரிதாக சித்தரிக்கிறார்கள கள்ளக்கூட்டம் WE NEED TO INCLUDE SLTJ

    ReplyDelete
  3. 10 பேர் சட்டத்தை மாற்ற சொன்னால் மாற்றுவார்களாம். 10,00000 பேரை 10 பெயர் தாங்கிகள் தீர்மானிக்கிறார்கள். இஸ்லாம் எங்கே போகிறது பக்க பலமா MINISTERS வேறு DIVORCE வராமல் பாதுகாக்க தெரியாதா நாய்கள் சட்டத்தை மாற்ற சொல்லுதா ???? இதுக்கு MEDIA துனை வேறு. இஸ்லாத்தை மட்டும் ROAD இல் உள்ளவர்கள் தீர்மானிக்கிறார்கள் அனைவரும் படிக்காத மடையர்கள் என்பதாலோ ???

    ReplyDelete
  4. christian marriage course ( before get married ) உள்ளது அதை கொஞ்சம் சிந்திக்கலாமே பெயர் christian உள்ளதால் உதறாமல் விஷயத்தை பற்றி சிந்திக்கலாமே ?இஸ்லாத்தை சரியாக அறியாதவர்களிடம் அதை தெளிவாக சொல்லுங்கள் அதைவிற்று சட்டத்ததை மாற்றுவோம் quran ஐ மாற்றுவோம் என்றாமல் - donkeys

    ReplyDelete

Powered by Blogger.