Header Ads



அரசியல்வாதிகளின் வாகனங்கள்தான், போதைப் பொருள் விற்பனைக்கு பயன்படுத்தப்படுகின்றது

சிறு பிள்ளைக்காவது வீதியில் இறங்கி நடமாட முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இந்நிலைமையை மாற்ற வேண்டிய காலம் உருவாகியுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

நாரஹேன்பிட்டி அபயராம விகாரையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

இன்று சமூகத்தில் போதைப் பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக அரசியல்வாதிகள் சமூகத்தை குற்றம்சாட்டுகின்றனர். ஆனால், அரசியல்வாதிகளின் வாகனங்கள் தான் போதைப் பொருள் விற்பனைக்கு பயன்படுத்தப்படுகின்றது என சிவில் சமூகத்திலுள்ளவர்கள் அரசியல்வாதிகளைக் குற்றம் சாட்டுகின்றனர்.

இன்று போதைப் பொருள் நிரம்பியுள்ள ஒரு சமூகத்தில் நாம் வாழ்கின்றோம். இந்நிலை மாற்றப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

  1. மனிதனுக்கு முன்னாலும், பின்னாலும் தொடர்ந்து வரக்கூடிய (மலக்குகள்) இருக்கிறார்கள்.

    அல்லாஹ்வின் கட்டளையால் அவர்கள் அவனைப் பாதுகாக்கிறார்கள்;

    எந்த ஒரு சமூதாயத்தவரும், தம் நிலையயைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை;

    இன்னும் அல்லாஹ் ஒரு சமுதாயத்தாருக்குத் தீவினையை நாடினால், அதைத்தடுப்பவர் எவருமில்லை - அவர்களுக்கு அவனைத்தவிர துணை செய்வோர் எவரும் இல்லை.
    (அல்குர்ஆன் : 13:11)
    www.tamililquran.com

    ReplyDelete
  2. WHAT HAPPENED TO THE SATHOSA LORRY DRUGS BUST. HOW DID IT GET COVERED/SWEPT UNDER THE CARPET?
    Noor Nizam - "The Muslim Voice".

    ReplyDelete

Powered by Blogger.