Header Ads



மகிந்தவின் வீட்டின் முன், வாசுவின் அறிவிப்பு

ஜனாதிபதி வேட்பாளராக வருவதற்கு கூட்டு எதிர்க் கட்சியில் மிகவும் தகுதியானவர் சமல் ராஜபக்ஷதான் என கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

எல்லா சமூகத்தினருடையவும் வரவேற்பைப் பெற்ற, ஊழல் குற்றச்சாட்டுக்கள் அற்ற ஒருவர் சமல் ராஜபக்ஷ என்பதை நாம் அறிவோம். சமல் ராஜபக்ஷதான் தகுதியானவர் என டிலான் பெரேரா, குமார வெல்கம போன்றோரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் இன்று(10) மாலை 6.00 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் கலந்துகொள்ள வருகை தந்தபோது ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

கூட்டு எதிரணியிலுள்ள சகல கட்சிகளும் கூட்டு பொதுஜன முன்னணி எனும் பெயரில் மலர் மொட்டு சின்னத்தில் எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் இன்றைய கூட்டத்தில் கலந்துரையாடவுள்ளதாகவும் வாசுதேவ நாணயக்கார மேலும் கூறினார்.   

1 comment:

  1. முகீரா இப்னு ஷுஅபா (ரலி) அறிவித்தார்:

    ''வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர எவருமில்லை.

    அவன் ஏகன், அவனுக்கு நிகராக எவருமில்லை.

    ஆட்சி அவனுக்கு உரியது. புகழும் அவனுக்கு உரியது.

    அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுள்ளவன்.

    இறைவா! நீ கொடுப்பதைத் தடுப்பவன் இல்லை. நீ தடுத்தலைக் கொடுப்பவன் இல்லை.

    எந்த மதிப்புடையவனும் உன்னிடம் எந்த பயனுமளிக்க முடியாது''

    என்று நபி(ஸல்) அவர்கள் ஒவ்வொரு கடமையான தொழுகைக்குப் பின்பும் கூறக்கூடியவர்களாக இருந்தனர்.

    (ஸஹீஹ் புகாரி ஹதீஸ் எண் 844)
    www.tamililquran.com/hadhees

    ReplyDelete

Powered by Blogger.