July 25, 2018

முஸ்லிம் நாடுகளின் உதவிகள் இருட்டடிப்பு - சவூதியும், குவைத்தும் வேதனை

இலங்கையின் அபிவிருத்தி முயற்சிகளுக்கு முஸ்லிம் நாடுகள் பாரியளவில் உதவிகளை வழங்கிய போதும் அவற்றை நாட்டு மக்களுக்கு தெரிவிப்பதில் அரசாங்கமும் ஊடகங்களும் அக்கறை காட்டுவதில்லை என தூதுரக வட்டாரங்களில் கவலை தெரிவிக்கப்படுகின்றது. 

இரு தினங்களுக்கு முன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்பட்ட மொரகஹகந்த களுகங்கை அபிவிருத்தித் திட்டத்துக்குத் தேவையான நிதியில் பெருந்தொகையை சவூதி நிதியமும், குவைத் நிதியமும் வழங்கியிருந்த போது திறப்பு விழாவின் போதோ, திறப்பு விழா தொடர்பான செதிகளிலோ, உதவி வழங்கிய சவூதி நிதியம் பற்றியோ, குவைத் தூதரகம் பற்றியோ எதுவும் குறிப்பிடப்படவில்லை.

இந்தத் திறப்பு விழாவில் சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதுவர் அப்துல் நாஸர் அல் - ஹார்தி கலந்து கொண்டிருந்த போதும் எந்த ஊடகத்திலும் அவரது பெயரைக் கூட குறிப்பிட்டிருக்கவில்லை என ராஜதந்திர வட்டாரங்களில் நேற்று சுட்டிக் காட்டப்பட்டது. 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனதுரையில் கூட உதவி வழங்கிய நாடுகளது பெயர்களைக் கூட குறிப்பிடவில்லை. முஸ்லிம் நாடுகளது உதவிகளைப் பெற முடியும். ஆனால் அதனை பகிரங்கமாக குறிப்பிடத் தயங்குவதேன் எனப் பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.

களுகங்கை அபிவிருத்தித் திட்டம் அபிவிருத்திக்கான சவூதி நிதியம்(SFD), குவைத் நிதியம்(KFAED), மற்றும் ஒபேக் நிதியம்(OFID) என்பனவே நிதியினை வழங்கியிருந்தது. 

இத்திட்டத்தை பூரணப்படுத்த முடியாத நிலையில் கடைசியில் 16 பில்லியன் அமெரிக்க டொலரை வழங்கியதாக நிதி அமைச்சு வெளியிட்டிருந்த ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்ட இத்திட்டத்தின் மூலம் களுகங்கையிலிருந்து வருடாந்த நூறு பில்லியன் மீட்டர் நீர் திருப்பப்படும் மொரகஹகந்த நீர்த்தேக்கம் 265 மில்லியன் மீட்டர் நீர் கொள்ளளவினைக் கொண்டது. இதன் மூலம் களுகங்கை, படுக்கையில் 3000 ஏக்கர் புதிதாக அபிவிருத்தி செயப்படவுள்ளது.

மொரகஹகந்த அபிவிருத்தி திட்டத்துக்கு செலவான 48 பில்லியன் டொலரில் 27.5 சதவீதம் சவூதி நிதியம் மூலமும் 22 சதவீதம் குவைத் நிதியமும் வழங்கப்பட்டுள்ளது. 

இது தவிர நிதி போதாத நிலையிலும் சவூதி அரேபியா 16 மில்லியன் அமெரிக்க டொலரை 60 பில்லியன் சவூதி ரியாலை வழங்கியது. இதற்கான ஒப்பந்தம் கடந்த ஜுலை 18ஆம் திகதி நிதி அமைச்சில் கைச்சாத்திடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்பு சவூதி அரேபியா கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நிர்மாணித்த நரம்பியல் வைத்தியசாலைக்குத் தேவையான நிதியில் 85 சதவீதம் வழங்கியிருந்தது. அப்படியிருந்தும் இலங்கை அரசு செலவு செத வெளிநாட்டு உதவி ஒன்றில் கட்டாயம் சேர்க்கப்பட வேண்டிய 15 சதவீதம் பணம் பற்றியே முக்கியமாகப் குறிப்பிடப்பட்டதாகவும் ராஜதந்திர வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

மொரகஹகந்த களுகங்கை அபிவிருத்தித் திட்டம், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நிர்மாணித்த நரம்பியல் வைத்தியசாலை உள்ளிட்ட Nதுசிய வைபவங்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே கலந்து கொண்டிருந்தார் என்பதும், முஸ்லிம் நாடுகளுடன் மைத்திரிபாலவுக்கு அவ்வளவு பெரிய இணக்கப்பாடு இல்லை என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

12 கருத்துரைகள்:

Then why stupid muslim countries still helping these clowns.

this article should reach other community as well. it should translate in to Sinhala and English language. also need to share among other community as much as possible.

This is sri lanka ungrateful country.

Muslim countries help other poor countries only for the sake allah . They don't expect any return from those countries like western Christians Hindus expect.

தமிழ் செய்தி ஒன்றில் ஜனாதிபதி சொல்லக்ேகட்டேன்

This simply implies the racial attitude towards Muslims specially Saudi Arabia and Middle East Countries. These two countries should wage a diplomatic revenge against Sri Lanka. This could be done by the Foreign Ministry of Saudi Arabia and Foreign Ministry of Kuwait.
In the mean time Govt. of Sri Lanka must understand the stance of both Saudi Arabia and Kuwait are predominately Muslim Countries. Both of them believe in Islam, beloved Prophet Mohammed (Sal) says: Let Not Your Left Hand Know What Your Right Is Doing, means we Muslims give away arms and charity only for the sake of Allah and do not expect any appreciation or returns from them. As such country like Saudi Arabia and Kuwait expected all the returns from Allah in the day of judgment. Govt. of Sri Lanka and all other non-Muslim countries should know that the reality of this truth is that we do not expect anything from your in returns. Allah knows everything.

If it were China they would have sung the Chinese Anthem. I think KSA and Kuwait embassies should convey their displeasure over this thing.

This comment has been removed by the author.

இனி வரும் காலங்களில் எமது நாட்டுக்கு இஸ்லாமிய நாடுகளின் நிதி மூலம் கிடைக்கும் அபிவிருத்திகளை இலங்கை மக்களுக்கு தெரியப்படுத்தும் கடமையை இஸ்லாமிய செய்தியாளர் கண்கானித்து கொள்ள வேண்டும்

It is unfair criticizing President and the government.Muslim countries are funding to all muslim parties and muslim ministers without any account. First of all they must reveal the amount they received from gulf countries. What they funded for these irrigation project is peanut comparing with these unaccounted funds to the ministers. Do not blame government.

சவுதியின் 500 நுரைச்சோலை சுனாமி  வீடுகளையும் ஏழு வருடங்களாகியும் இன்னும் உரியவர்களுக்கு வழங்காது வீண் விரயம் செய்தோரைத் தட்டிக்கேட்காது அல்லது ரோசமின்றி அதனை அனுமதித்து மேலதிக உதவிகளும் செய்ததற்கான தண்டனையாக இதனைக்கொள்ள வேண்டும்.

Post a Comment