Header Ads



இந்த சமூகத்தை, பூமியில் புதைத்து விடாதீர்கள் - டாக்டர் ரயீஸ், நுஸ்ரான் பின்னூரிக்கு பதிலடி

– Dr. ரயீஸ் முஸ்தபா -

தடுப்பூசி கூடாதென்றும், பிரசவம் பார்க்க மருத்துவமனைக்கு செல்லக்கூடாதென்றும் சிலர் அறிவுபூர்வமற்ற கருத்துக்களை சொல்லி வருகின்றார்கள். எமது சமூகத்தில் பெரும்பாலானவர்கள் அறியாமையில் மூழ்கிக் கிடக்கிறார்கள். தடுப்பூசிக்கும் யூதர்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. 50 வருடங்களுக்கு முன்பு இலங்கையில் ஒவ்வொரு வீட்டிலும் போலியோவால் பாதிக்கப்பட்ட முடமான பிள்ளைகள் காணப்பட்டார்கள். தடுப்பூசி மருந்துகள் ஏற்றப்பட்டமையினாலேயே போலியோ இல்லாமல் போனது. நியுமோகொகைல் என்றொரு தடுப்பூசி உள்ளது. இந்தத் தடுப்பூசி ஏற்றப்படுவதன் மூலம் மூளைக் காய்ச்சல் வருவது குறைவு. ஒரு முறை ஒரு பிள்ளைக்கு மூளைக் காய்ச்சல் வந்து அதனால் அப்பிள்ளையின் காது செவிடாகியது. அந்தப் பிள்ளை என்னிடம் அழைத்து வரப்பட்டது. அப்பிள்ளையை பரிசோதித்த போது நியுமோ கொகைல் பிள்ளையின் உடம்பில் சென்றிருப்பதை அறிந்து கொண்டேன். நீங்கள் இந்தப் பிள்ளைக்கு தடுப்பூசி ஏற்றவில்லையா? தடுப்பூசி ஏற்றியிருந்தால் இப்படி வந்திருக்காதே என்று நான் பிள்ளையின் பெற்றோரிடம் கூறினேன். அப்போது அவர்கள், தடுப்பூசி போடக்கூடாதென்று ஒரு கூட்டத்தில் சொன்னார்கள் அதனால் நாம் போட வில்லை என்றார்கள்.

தற்போது இந்தப் பிள்ளைக்கு கொக்லியோ இன்பிளான்ட் (காதில் உள்ள கொக்லியரை மாற்ற வேண்டும்) செய்ய வேண்டும் என்றும், இலங்கையில் இதைச் செய்வதென்றால் 37 லட்சம் செலவாகும் என்றும் கூறினேன். 37 லட்சம் செலவு செய்து கொக்லியோ இன்பிளான்ட் செய்ய வேண்டும், அப்படிச் செய்தாலும் 10 வீதமே முன்னேற்றம் வரும் என்றேன். பள்ளிவாயல்களிலும் கூட்டங்களிலும் தடுப்பூசி கூடாதென குறிப்பிடுபவர்கள் சிகிச்சை நிலையங்களில் இவ்வாறான சம்பவத்தை காண்பதில்லை. அந்தப் பெற்றோர் என் முன்னால் அழுத அழுகை என் கண்ணுக்குள் அப்படியே பதிந்திருக்கிறது. தடுப்பூசி தேவையில்லை எனக் கூறுபவர்கள் எந்த விதமான அறிவுப் பின்னணியும் இன்றி சமூகத்திற்கு மிகப்பெரும் பாதிப்பை செய்து வருகின்றனர்.

இலங்கையில் தற்பொழுது போலியோ நோய் முற்றாக ஒழிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இன்னும் போலியோ நோய் காணப்படுகிறது. பாகிஸ்தானில் போலி யோ மருந்து கொடுக்கச் சென்ற வைத்தியர்கள் மீது தலிபான் கள் துப்பாக்கிச் சூடு நடாதியுள்ளனர். நைஜீரியாவில் போலியோ நோய் முற்றாக இல்லாமல் இருந்தது. ஆனால் அறிவில்லாத சிலர் போலியோ ஹராம், தடுப்பூசி கூடாதென்ற கருத்துக்களை மக்களிடம் கூறியமையினால் அங்கு போலியோ தடுப்பு மருந்து நிறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து 10 வருடங்களாக போலியோ மருந்தின்றி பிள்ளைகள் முடமாகத் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து நைஜீரிய ஜம்மிய்யத்துல் உலமா முன்வந்து இது ஹராமில்லை, இந்தத் தடுப்பூசியை போடுங்கள் என மிகப்பெரும் பிரசாரத்தை மேற்கொண்டார்கள். அதன் பின்னரே அங்கு  சுகமான நிலை வந்துள்ளது.

அறிவற்ற சமூகமே அறிவிலிகளின் கருத்துக்களை கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். கலீபா உமர் (ரலி) அவர்கள் மிம்பர் மேடையில் பேசிக்கொண்டிருக்கும் போது ஒரு பெண் எழுந்து நின்று கேள்வியொன்றை கேட்டுள்ளார். அந்தப் பரம்பரையில் வந்தவர்களே நாங்கள். கதைப்பவர்கள் மோட்டுத்தனமான முறையில் கதைப்பார்கள். ஆனால் நாம் அவற்றை வெறுமனே கேட்டுக்கொண்டிருக்க கூடாது. எழுந்து நின்று கேள்வியெழுப்ப வேண்டும். அப்படியானதொரு சமூகமே உருவாக வேண்டும். தடுப்பூசி, தடுப்பு மருந்துகளில் எந்த விதமான பிரச்சினைகளும் இல்லை. அவற்றை கட்டாயம் போடுங்கள். கொழும்பு கண்டி வீதியில் எத்தனையோ விபத்துக்கள் இடம்பெறுகின்றன. அதற்காக வேண்டி நான் கொழும்புக்கு போகாமல் இருக்க முடியாது. ஆபத்துக்கள் இடம்பெறத் தான் செய்யும். இது போன்று தான் எல்லா விடயங்களும். தலைவலிக்கு பெனடோல் குடிக்கிறோம். அதிகம் பணடோல் அருந்தினால் ஈரல் பழுதடைந்துவிடும். இதிலும் ஆபத்து இருக்கிறது.

ஆபத்தில்லாத வாழ்வில்லை. இந்தச் சமூகத்தை மீண்டும் குட்டிச்சுவராக்கும் கூட்டமொன்று உள்ளது. அவர்களே இந்த மடத்தனமான பிரச்சாரங்களை முன்னெடுக் கின்றனர். ஏற்கனவே நாம் அரசியல், பொருளாதார, சுகாதார, அறிவுத்துறைகளில் பின்தங் கியவர்களாக இருக்கிறோம்.

இலங்கையில் உள்ள 10 வீத முஸ்லிம்களுள் 23 வீதமானவர்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 43 வீதமான முஸ்லிம்களுக்கு ஏதாவது நோயிருக்கிறது. சிங்களவர்களுள் 22 வீதமானவர்களுக்கே நோயுள்ளது. தமிழர்களில் 20 வீதமானவர்களுக்கே நோயுள்ளது. ஆனால் முஸ்லிம்களில் 43 வீதமானவர்களுக்கு நோயுள்ளது. எனவே இப்படிப் பின்தங்கிய நிலையில் அடிமட்டத்தில் உள்ள சமூகத்தை இன்னும் பூமியில் புதைக்கும் நடவடிக்கைகளையே இவர்கள் மேற்கொள்கிறார்கள். இதற்கு நீங்கள் இடமளிக்க வேண்டாம்.

18 comments:

  1. எல்லா தடுப்பூசிகளும் அமேரிக்க, மேற்குலக நாடுகள், இஸ்ரேல் ஆகியவற்றின் கண்டுபிடிப்புக்கள் மட்டுமே

    ReplyDelete
  2. விசர் நாய் ஒன்று கடித்தால் தடுப்பூசி ஏற்றாமல் எந்த வழியில் Hydrophobia எனும் நோயை இவர்களால் தடுக்க முடியும்.
    விசப்பாம்புகள் கடித்தால் அதற்குரிய தடுப்பு மருந்களை பாவியாமல் எவ்வாறு குணப்படுத்த முடியும்.

    ReplyDelete
  3. This is not an issue for the Muslim community in Sri Lanka .
    It is an issue for Sri Lankan government to deal with it.
    Health ministry must file a case against this stupid and lock him up for endangering life of people in Srilanka ..
    Why lawyers are sleeping .?
    Why health officials are sleeping ?
    Where is police to investigate such allegations?
    Let him and others learn a lesson ...
    Sri Lanka is not Pakistan to play around with health of people ..
    Stupids do this in there but we can not allow this here

    ReplyDelete
  4. Ateek. - Of course, Pakistan is not Sri Lanka.

    Pakistan is far greater than Sri Lanka.

    Like Binnoori, there are lots of people who preach against western medicines and vaccinations.

    Like Binnoori, there are many Hindus also preach against western medicines in India.

    Even in China also you can find like these people.

    Muslims should ignore brother Binnoori’s statements and should forget about him.

    This is not a big issue.

    ReplyDelete
  5. Antony,We,the Muslim society do not need advice the people of your kind.We have our own scholars and experts here and all over the World to teach us.

    ReplyDelete
  6. அறிவியல் ரீதியாக தர்கித்து எக்காலத்துக்கும் உகந்த மார்க்கம் இஸ்லாம் என நிரூபிக்க முடியுமாக இருக்கும் போது பின்னூரிகளினால் அடிப்படைவாதம் பாதிக்கப்படுவது மனவருத்தத்தை அளிக்கின்றது.

    ReplyDelete
  7. Antonraj,

    Dont just poke your nose into something that you dont understand. its like we talk about football and you are talking about spectators.

    ReplyDelete
  8. Binnouri: Is there any evidence in Shariah not to take this vaccine??. Though some bad side effects exist, the benefits are much higher, I quess??

    ReplyDelete
  9. Antony, why do not you read newspapers like tamilwin and come forward to comment on behalf of your own community in their pathatic situation during and after LTTE terrorism. Be useful to your own people first.

    ReplyDelete
  10. Some people want to mislead the community. Do these kind of people think that there is none to guide the society? This campaign is very very dangerous.It can lead to unnecessary problems and our community will be misunderstood. Medical experts and scholars representing the Muslim community should act immediately to educate people on issues of this kind.

    ReplyDelete
  11. Abdul M உங்களுடைய மத போதகர்கள் எப்படி பிள்ளைகளை பெறுவதென்றும் எப்படி சாப்பிடுவதென்றும்தான் சொல்லி தருவார்கள் ஒழிய அறிவு பூர்வமாக எதையும் சொல்லி தர மாட்டார்கள் ஏனென்றால் உங்கள் சமூகம் இது இரண்டையும்தான் செய்கிறார்கள். நீங்கள் வளர்க்கும் தடியை தவிர மற்றயது எல்லாவற்றையும் கண்டு பிடித்தவர்கள் காபீர்கள் உங்களுக்கு வெட்கம் மானம் ரோசம் இருந்தால் தாடியை மட்டும் வளர்த்து கொண்டு இருங்கள்.

    ReplyDelete
  12. சில நேரம் பின்னூரி என்பவர் மனதளவில் பாதிப்புக்குள்ளானவராக இருப்பாரோ? அவ்வாறான நிலையில்தான் அனேகர் தனிவழி சென்று தங்களைப் பிரபல்யப்படுத்த விரும்புவார்கள். வேண்டுமென்று வீட்டில் வைத்து பிள்ளை பெற முயற்சிக்கும் போது தாய் சேய் இறப்பு ஏற்பட்டால் செய்தி தெரிந்தால் பொலிஸில் முறைப்பாடு செய்வது சமூகக்கடைமையாகும்.

    ReplyDelete
  13. 20276: Ruling on childhood immunizations and vaccinations
    What is the Islamic perspective on childhood immunizations or vaccinations? There is evidence to prove that they can be harmful to the body, but they are required in many countries. This is a very important topic that many do not have an adequate understanding of.
    Published Date: 2003-03-11
    Praise be to Allaah.
    Shaykh ‘Abd al-‘Azeez ibn Baaz (may Allaah have mercy on him) was asked:

    What is the ruling on giving treatment before sickness occurs, such as vaccinations?

    He replied:

    There is nothing wrong with giving treatment if there is the fear that the disease may occur because of the presence of an epidemic or other factors which may cause disease. There is nothing wrong with giving medicine to ward off the feared disease, because the Prophet (peace and blessings of Allaah be upon him) said, according to the saheeh hadeeth, “Whoever eats seven dates of Madeenah in the morning will not be harmed by witchcraft or poison.” This is a kind of warding off a problem before it happens. So if there is the fear of sickness and a person is vaccinated against an infection that is present in the land or elsewhere, there is nothing wrong with that, because it is a kind of protection. But it is not permissible to wear or hang up amulets etc against sickness, the jinn or the evil eye, because the Prophet (peace and blessings of Allaah be upon him) forbade that, and explained that this is a kind of minor shirk [associating others in worship with Allaah], so it must be avoided.

    Fataawa al-Shaykh Ibn Baaz, 6/21

    With regard to the harm suffered by those who are given some vaccinations, namely a short-lived fever or other side-efects, these drawbacks may be overlooked when compared with the great harm that is warded off, namely the diseases that may kill or cause great harm to a person’s health.

    This is similar to the case of circumcising boys by cutting off a piece of skin and the intense pain that is caused to the infant; this is outweighed by the great benefits that are served by this action, serving the religious interest of purity (tahaarah) and numerous worldly benefits.

    The general shar’i principle with regard to this matter is that the lesser of two evils may be done in order to ward off the greater evil, if it is necessary to do one of them. Al-Ashbaah wa’l-Nazaa’ir by al-Subki, 1/45.

    But if it is medically proven that a specific vaccine causes harm to the body or that its harmful effects outweigh its effects of warding off disease, then it is not permissible to use it in that case, because the Prophet (peace and blessings of Allaah be upon him) said, “There should be neither harm nor reciprocating harm.”

    And Allaah knows best.

    ReplyDelete
  14. Well said Pahuththarivalan.

    ReplyDelete
  15. Your name is PAHUTHTHARIWALAN... but there seems no link between your name and thoughts.. We know very well why racists of your type act against us,the Muslim community. Get to know..your anger on Muslims is baseless and meaningless. We do not care about the nonsense of people your kind. We know who people like you, Antonyraj are? You are all the remains of the LTTE terrorism. Get to know one thing very clearly. We,the muslim Community, will never allow or support your ealam agenda. We will stand ferever with this nation and people for its solidarity and unity and peace. Why are you jealous of us? You have had to kick the dust entirely because your leaders and their blindful guidance. You have to take your own responsibility for your own destruction.. This is the guidence you have had from your leaders. We as Muslims never believe in terrorism and waepons... Our leaders have the fullest potential to guide us to live peacefully in our own mother land. We are the ones who introduced the KNOWLEDGE to the world. So, we have the best guidance in everything.That is what saved us all from the cruel terrorism abolished from sri Lanka.

    ReplyDelete
  16. மத்தியகால ஐரோப்பாவில் வாழ்ந்த முஸ்லிம்களையும், காபிர்களையும் ஆராய்ந்து பார் பகுத்தறிவாளா..?

    ReplyDelete
  17. Every coin has two sides. Vaccination is debatable topic. Many high qualified doctors are speaking against it. Don't just brand anti vaxxers as fools. They too have valid reasons for not vaccinating their kids.

    ReplyDelete
  18. மனிதனுக்கு கடவுள் மூளை எனும் அள‌ப்பரிய பொக்கிசத்தை கொடுத்தான் சிலர் அதை பாவிக்காமலே வைத்துக்கொள்கின்ரனர்,

    ReplyDelete

Powered by Blogger.