Header Ads



மருமகனை நிதி மந்திரி, ஆக்கினார் எர்டோகன்

துருக்கி நாட்டில் 2016-ம் ஆண்டு ராணுவத்தின் ஒரு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட ஆட்சி கவிழ்ப்பு முயற்சியை அதிபர் எர்டோகன் மக்கள் ஆதரவுடன் வெற்றிகரமாக முறியடித்தார்.

அதன்பின்னர் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் அவர் அமோக வெற்றி பெற்ற பிறகு, நாட்டின் நிர்வாகத்தில் அதிபருக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட்டன. இதன்மூலம் அந்த நாடு 95 ஆண்டு கால நாடாளுமன்ற ஜனநாயக முறையில் இருந்து அதிபர் ஆட்சி முறைக்கு மாறி உள்ளது. இதன் காரணமாக எர்டோகன் எதிர்ப்பாளர்கள், துருக்கியின் ஜனநாயகம் அழிவுப்பாதையில் சென்றுவிடும் என அச்சம் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் அதிபர் பதவியை மீண்டும் ஏற்றுக்கொண்ட எர்டோகனுக்கு மந்திரிகளை நியமிக்கும் அதிகாரம் வந்துவிட்டது.

உடனே அவர் தனது மருமகன் பேரட் அல்பேராக்கை நாட்டின் நிதி மந்திரியாக நியமனம் செய்து உள்ளார். இதே போன்று ராணுவ தளபதியாக இருந்து வந்த ஜெனரல் ஹூலுசி அகாரை ராணுவ மந்திரியாக நியமித்தார். மெவ்லுட் கவுசொக்லு வெளியுறவு மந்திரியாக தொடர்கிறார்.


10 comments:

  1. எர்டோகனின் ஊழல் ஆட்சி தொடர்கிறது.
    “துருக்கி ஐரோப்பிபாவின் ஏழை” என கூறப்படுவதில் ஆச்சரியம் இல்லை

    ReplyDelete
  2. ஒரு காலத்தில் என்னால் பலபேரிடம் கிலாபத்தை நோக்கிய பயணத்தில் துருக்கி இருக்கிறது என்று சொல்லப்பட்ட செய்தியை கடந்த மூன்று வருடங்களாக அவ்வாறு நடக்க வாய்ப்பில்லை என்று கூறி வருகிறேன் காரணம் ஒரு நாள் ஒரு ஜும்மாஹ் பயானில் ரசூல் ஸல் அவர்கள் கூறிச்சென்ற ஹதீஸை புத்தளத்தை சேர்ந்த பர்சான் மௌலவி சொல்லக்கேட்டேன் அதாவது "மதீனாவில் இருந்து செல்லும் ஒரு படை ரோமர்களிடமிருந்து இஸ்தான்புல்லை மீட்டெடுக்கும்" ஆகவே இஸ்தான்புல் ரோமர்களின் கைக்கு போகப்போகிறது அதனை நோக்கிய ஆட்சிகள் தான் துருக்கியில் ஏற்படுதப்படும், நாம் எமது நாவுகளை ஹதீசுக்கு எதிராக கதைக்காது பாதுகாத்துகொள்வோம். அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்பதை அறியக்கூடிய ஆற்றல் அல்லாஹ் ஒருவனுக்குத்தான் உண்டு.அல்லாஹ் அறிந்தவன்

    ReplyDelete
  3. His son in law has been a Minister of energy before he was appointed as a finance minister.

    ReplyDelete
  4. குடும்ப ஆட்சிக்கு வித்திடப்படுகின்றதா?.

    ReplyDelete
  5. While hundreds of Saudi royals live with public money .it is not AGAINST Islamic teaching to appoint a suitable person to any post...Prophet Jusuf asked for it

    ReplyDelete
  6. உஸ்மான் ( ரழி) தமது உறவுக்காரர்களுக்கு பதிவி வழங்கினார் என்று குறைகண்டவர்கள் இதன்பிறகு தமது தவறை உணர்வார்கள் என நிநைக்கின்றேன்.

    ஸஹானபாக்களை குறை கண்டவர்கள் தமது ஆதரவாளர்களை குறைகாணமாட்டர்கள் என்பதைக் காண்பார்கள். இதுவே இயக்கத்தின் மீதான தக்லீது எனப்படும்.

    யா அல்லாஹ் இஸ்லாத்தினை முண்ணிலைப்படுத்தும் எமது தைலவர்களப் பாதுகாப்பாயாக.

    ReplyDelete
  7. துர்கி உலக வங்கிக்கு கடனே இல்லாத நாடாக மாற்றியவர் இந்த உத்தம மனிதன் . சும்மா தெரியாமல் உலர வேண்டாம், இந்தியா தான் அழிவு பாதையில் சென்று கொன்று இருக்கறது மோடியின் ஆட்சியில்

    ReplyDelete
  8. As usual and no difference.

    ReplyDelete
  9. மஹதிர் விட்ட தவறை இந்த தள்ளாத வயதிலும் பதவிக்கு வந்துதான் சரி செய்ய வேண்டி இருந்தது.

    ஏர்தோகான் அவரிடம் பாடம் படித்தவர்!

    ReplyDelete
  10. Brother Erdukan is a great leader of Muslim Ummah.

    ReplyDelete

Powered by Blogger.