Header Ads



பைசரின் பிடிவாதம் நாசமானது - பழைய முறையிலான தேர்தலுக்கு ஜனாதிபதி உத்தரவு

பழைய தேர்தல் முறையில், மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் ஆராய்வதற்காக கூடிய போதே ஜனாதிபதி இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.

புதிய முறைமைக்கு அமைய மாகாண சபைத் தேர்தலை நடத்துவது சாத்தியமாகாத விடயம் என ஜனாதிபதி தெரிவித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

ஐக்கிய தேசிய முன்னணியின் அனைத்து பங்காளிக் கட்சிகளும் மாகாண சபைத் தேர்தலை பழைய தேர்தல் முறையில் நடத்துவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

எவ்வாறெனினும், சப்ரகமுவ, வட மத்திய, வடக்கு, மத்திய மற்றும் வடமேற்கு மாகாண சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் டிசம்பர் மாதம் நடைபெறுமென அரசாங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம்களுக்கு மிகப் பாதகமான புதிய தேர்தல் முறைக்கு பைசர் முஸ்தபா வலியுறுத்தியமையும், அதுதொடர்பில் முஸ்லிம் சமூகத்திடமிருந்து அவர் எதிர்ப்புகளை சந்தித்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

4 comments:

  1. he will make U turn now and will change the story .... after president informed it.

    Also there will be some from Muslims to support his talk.

    leave him in his way....Allah will teach him a good lesson for his selfish talks

    ReplyDelete
  2. SL Muslim community must not give any opportunity in the future for these kind of politicians who please their masters by selling the community. Every Tom, Dick and hurry got law degree in Sri Lanka

    ReplyDelete
  3. முஸ்லிம் தலைவர்கள் மட்டுமன்றி மலையக தமிழ் தலைவர்களும் புதிய தேர்தல் முறை வேண்ட்டாம் என கடுமையாக என்கிறார்கள். எனினும் இணைந்து செயல்படவில்லையே. மலையக தமிழ் தலைவர்கள் இந்தியா ஊடாக அழுத்தம் கொடுக்கவும் முனைவதாகத்
    தெரிகிறது. இணைந்து செயல்படவேண்டிய தருணம்

    ReplyDelete
  4. தேசிய பட்டியலிலிருந்து, பாராளுமன்றம் செல்பவர்களுக்கு அரசியல் அனுபவம் போதாது.

    பைசர் முஸ்தபா ஒரு நல்ல மனிதர்.

    ஆனால், அரசியலில் அவர் ஒரு கத்துக்குட்டி.

    ReplyDelete

Powered by Blogger.