Header Ads



பிக்குமாரை சிறையில் அடைத்து, ஜம்பர் அணிவிக்கும் யுகம் நாட்டில் காணப்படுகிறது - கோத்தபாய

இலங்கையில் போரை முடிவுக்கு கொண்டு வந்து மூன்று வருடங்களுக்குள் மகிந்த ராஜபக்ச அரசாங்கம் ஜனநாயகத்தை ஏற்படுத்தியதாகவும், புதிய அரசாங்கம் பதவிக்கு மூன்று ஆண்டுகளில் ஜனநாயகம் மட்டுமல்லாது நாட்டை அழித்து விட்டதாகவும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கோத்தபாய தலைமையிலான எளிய என்ற அமைப்பு மாத்தளையில் இன்று நடத்திய கருத்தரங்கொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

“முப்பது வருடங்களாக நடைபெற்ற போரை முடிவுக்கு கொண்டு வந்து, ஜனநாயகத்தை ஏற்படுத்தி, வடக்கு கிழக்கு பிரதேசங்களில் மக்கள் சுதந்திரமாக வாழும் உரிமை பெற்றுக்கொடுக்கப்பட்டது.

எனினும் தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்ட சுதந்திரத்தை பயன்படுத்தி அரசியல் எதிரிகளை வேட்டையாடி வருகிறது.

நாட்டில் தினமும் குற்றச் செயல்கள் அதிகரித்து வருகின்றன. தினமும் பல கொலைகள் நடப்பதை கேட்க முடிகிறது. பிக்குமார், அரசியல்வாதிகள் மற்றும் நாட்டுமக்களை சிறையில் அடைத்து ஜம்பர் அணிவிக்கும் யுகம் நாட்டில் காணப்படுகிறது.

அரசாங்கம் ஜம்பர் ஜனநாயகத்தை நாட்டிற்குள் அமுல்படுத்தி வருகிறது. அன்று பட்டலந்த சித்திரவதைக் கூடம் மற்றும் வெள்ளை வான் கலாசாரத்தை உருவாக்கியவர்கள் தற்போது மற்றவர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர்.

முஸ்லிம் மக்கள் மற்றும் சாதாரண மக்கள் மத்தியில் பொய்யான பரப்புரைகளை செய்து மகிந்த ராஜபக்ச மீது அவநம்பிக்கையை ஏற்படுத்தியதாகவும்” கோத்தபாய ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

5 comments:

  1. But recently he met Muslims and said he has no connection to BBS monk.... But in these speech he is worrying for jumper case.

    Dear Muslim Brothers be aware of him... know who he is .. by above jumper case.

    There are many other Buddhist monks in jail with jumpers from the past... But he did not worry about them..only for this monk he is opening his mouth.

    May Allah guide our brother and protect us from all evils

    Our situation is such that..." accept the smaller evil instead of bigger one.

    ReplyDelete
  2. பிக்குமார் தவறு தப்பு செய்தாலும் தண்டணைகுட்படுத்த முடியாது என்றா இவர் சொல்லவருகின்றார்.

    ReplyDelete
  3. என்னைப் பொறுத்தமட்டில் மகிந்த ஒரு இனவாதியல்ல - மைத்திரியைப்போல்.

    இவன் கோத்த்தாதான் மகிந்தவை இனவாதக் கூண்டுக்குள் சிக்கவைத்தவன். சுரக்கமாகச் சொன்னால் கோ்த்தா தஜ்ஜாலின் ஒரு வடிவம்.

    ReplyDelete
  4. என்னைப் பொறுத்தமட்டில் மகிந்த ஒரு இனவாதியல்ல - மைத்திரியைப்போல்.

    இவன் கோத்த்தாதான் மகிந்தவை இனவாதக் கூண்டுக்குள் சிக்கவைத்தவன். சுரக்கமாகச் சொன்னால் கோ்த்தா தஜ்ஜாலின் ஒரு வடிவம்.

    ReplyDelete
  5. He can be good Soldier in the army but he cannot be a head of a state. If so Sri Lanka became a big joke in the world.

    ReplyDelete

Powered by Blogger.