Header Ads



அலுகோசு பதவிக்கு விண்ணப்பிப்பார்களா..?

மரணதண்டனை நிறைவேற்றப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தூக்கிலிடுபவர் (அலுகோசு) பதவிக்கான இரண்டு வெற்றிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்படவுள்ளது.

அடுத்தவாரம் இதற்கான விண்ணப்பங்கள் கோரப்படும் என்று, சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

மேல் நீதிமன்றங்களும், உச்சநீதிமன்றமும், கொலை மற்றும் பொதைப்பொருள் கடத்தல் குற்றவாளிகளுக்கு மரணதண்டனை விதித்து வந்த போதிலும், 1976ஆம் ஆண்டு ஜூன் 23ஆம் நாளுக்குப் பின்னர் யாருக்கும் மரணதண்டனை நிறைவேற்றப்படவில்லை.

இதனால் மரணதண்டனையை நிறைவேற்றுபவர் பதவிக்கு யாரும் நியமிக்கப்படாமல் இருந்தனர்.

முன்னதாக, போகம்பரை மற்றும் வெலிக்கடைச் சிறைச்சாலைகளில் மாத்திரம், தூக்கு மேடைகள் இருந்தன.

போகம்பரை சிறைச்சாலை பல்லேகலவுக்கு மாற்றப்பட்ட பின்னர், போகம்பரை தூக்கு மேடையும் அகற்றப்பட்டது.

2015ஆம் ஆண்டு, சிறைச்சாலைகள் திணைக்களத்தினால், இரண்டு தூக்கிலிடுபவர்கள் ஆட்சேர்ப்புச் செய்யப்பட்டனர். எனினும், பின்னர் அவர்கள் தமது பதவியை விட்டு விலகி விட்டனர்.

இந்தநிலையில், மீண்டும் தூக்கிலிடுபவர்களுக்கான இரண்டு வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

எனினும், கடுமையான அழுத்தத்தை கொடுக்கும் என்பதால், தூக்கிலிடுபவர் பதவிக்கு யாரையும் ஆட்சேர்ப்புச் செய்வது இலகுவானது அல்ல என்று சிறைச்சாலைகள் திணைக்கள பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய ஆட்சிக்காலத்தில், 1812ஆம் ஆண்டில் இருந்து-  சிறிலங்காவில் முறைப்படியான மரணதண்டனை  நிறைவேற்றும் நடைமுறை இருந்து வந்ததமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.