Header Ads



ஷரீஅத்தோடு விளையாடுவதை, முஸ்லிம் பெண் சட்டத்தரணிகள் நிறுத்த வேண்டும்

இன்று -23- பகல் கொழும்பில் மேற் குறிப்பிட்ட அமைப்புக்களின் பிரதி நிதிகள் என கூறிக்கொள்ளும் சுமார் ஒரு டசினுக்குற்பட்ட பெண்கள் கூடியிருந்தனர்.

அங்கு பத்திரிகையாளர்களும் சமூகமளித்திருந்தனர். அக் கூட்டத்தில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவை குற்றம் சுமத்தி பலர் கருத்து வெளியிட்டனர். தாம் பெண்கள் விவகாரமாக நீண்ட காலம் சம்பந்தப்பட்டிருந்ததாக கருத்து வெளியிட்ட அவர்கள் தமக்கு முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டம் சம்பந்தமாக உலமாக்களை அடக்கிய குழு சமர்பித்த அறிக்கையில் திருப்தி காணாமையினால் உலமா சபையை மிகவும் மோசமாக விமர்சித்தனர். 

முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டம் என்பது முஸ்லிம்களுக்கென்றே ஏற்படுத்தப்பட்ட ஒன்று என்பதை புரியாத அவர்கள் மற்ற சமூகத்தவர்களுக்கு உள்ளது போல் பெண்களுக்கான வயதெல்லை பதினெட்டாக அமைய வேண்டும் என்று கூறியதோடு அவர்கள் வெளியிட்ட கூட்டறிக்கையிலும் குறிப்பிட்டுள்ளனர். 

இஸ்லாத்தில் மாத்திரமே பருவமடைந்த பெண் பிள்ளைக்கு திருமணம் பேசலாம் என்ற அணுமதியுள்ளது. இந்த ஒழுங்கு இல்லாதததனால் பருவமடைய முன்பே காதலில் ஈடுபடும் சிறுவர்கள் பிள்ளை பெற்றெடுத்தவர்கள் என்று காணப்படுவதை இந்த அமைப்புக்கள் மறுக்க முடியுமா! 

பெண் மக்களின் ஒழுக்கத்தைப் பற்றி பேச வேண்டிய இவ்வமைப்புக்கள் அதைப் பற்றி எக் கரிசணையும் கொள்ளாது, எமக்கென்று உள்ள திருமண ஒழுங்கு முறைகளில் கையை விட்டு இருப்பது மிகவும் கவலை அளிக்கிறது. உரிய போது மணம் புரிந்து வைக்காத எத்தனை கன்னியர்கள் வீடுகளில் முடங்கிக் கிடக்கின்றார்கள் என்பதை இவர்கள் இன்னும் புரியவில்லையா! 

உலமா சபையின் அறிக்கையை முழுப் பூசனிக்காயையும் சோற்றில் புதைத்தது போன்று பேசுவது பாவம் என்று இவர்களுக்கு தெரியாதா? உலமா சபையின் அறிக்கையில் பெண்களின் திருமண வயதெல்லையை பதினாரு என்றும் ஆண்களின் வயதெல்லையை பதிணெட்டு என்றும் சிபாரிசு செய்திருப்பதை ஏன் பொய்ப்படுத்த வேண்டும். 

அவ்வாறே பெண்கள் காழியாக வரவேண்டும் என்று ஆசைப்படும் அவர்கள் ஷரீஅத்தை மாற்ற வேண்டும் என விரும்புகிறார்களா? குத்பாக்கள் தொழுகைகள் போன்றவற்றை ஆண்களே செய்ய வேண்டும் என்பது ஷரீஅத் விதியாகும். இதனை மீறி அழகிய குரல் வளம் உள்ளவர், திடகாத்திரமானவர் என்பதற்காக அந்த வேலைகளைச் செய்ய இவ்வமைப்புக்கள் துணிகரம் கொள்ளுமா? இவர்களுக்கு ஆலோசனை விடுப்போரும் எப்போதாவது சிந்தித்துப் பார்த்திருப்பார்களா? 

காழி என்பது இஸ்லாத்தின் பார்வையில் ஷரீஅத்தோடு சம்பந்தப்பட்டதாகும். வலியில்லாதவருக்கு வலியாக நின்று திருமணம் நடாத்தும் உரிமையை ஷரீஅத் வழங்கியுள்ளது. இந் நிலையில் பெண்கள் காழியாக வரவேண்டும் என அடம் பிடிப்போர் ஷரீஅத் சட்டத்தை மீற வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறார்களா? திருமணப் பதிவை கட்டாயமாக்கப்படல் வேண்டும் என்று இந்த அமைப்புக்கள் கூறும் முன்பே எமது மூதாதையர்கள் அதற்கான ஒழுங்கை வகுத்துத்தந்துள்ளனர். 

இது இப்படி இருக்கையில் இவர்கள் புதிய ஒரு கண்டு பிடிப்புப் போல் பேசியிருப்பது ஆச்சரியமல்லவா!!

பெண்கள் நலனில் அக்கறை கொண்டவர்களாக கூறிக் கொள்ளும் இவ்வமைப்புக்கள் அல்லாஹ்வை பயந்து கொள்ள வேண்டும். 

ஷரீஅத்தோடு விளையாடாமல் தம்மை திருத்திக் கொண்டு சன்மார்க்கம் கூறும் ஒழுக்கங்களை பேணும் மாதர்களாக வாழ அல்லாஹ் அருள் புரிய வேண்டும் என பிரர்திக்கின்றேன்.

தல்துவை பவாஸ்

21 comments:

  1. Muslim women lawyers do not know what is Shariah.

    ReplyDelete
  2. Muslim community in Sri Lanka needs a lady wing of ACJU..
    So that they can discuss all their problems among themselves ..
    What about it Muslim lady judge; lawyers; and qadis..
    Not yet lady imams in Sri Lanka to lead jummah too...
    All this will take place in Sri Lanka too

    ReplyDelete
  3. தல்வதுவை பவாஸ் அவர்களுக்கு,
    பெண்கள் அமைப்பு வலியுறுத்துவது நீதியரசர் ஸலீம் மர்ஸூப் அவர்களின் அறிக்கையை பாராளுமன்றத்தில் சட்டமாக நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கைதான். அவ்வாறு கேட்பதற்கு பெண்களுக்கு உரிமையில்லையா. அது தவிர மார்க்கத்தில் உங்களுக்கு விளங்கிய ஓரிரண்டு விடயங்களைப் பெரிதுபடுத்தி பெண்களை விமர்சிக்கவும் அவர்கள் மனதைப்புண்படுத்தவும் முயற்சி செய்வது சரியான விடயமா? இதுவும் குருடன் யானை பார்த்த கதைதான். ஆண்களைப் போலவே பெண்களுக்கும் சரிசமமான உரிமைகள் இஸ்லாத்தில் இருப்பதாக அல்குர்ஆன் வலியுறுத்தும் உண்மையை ஏன் மறைக்க முயற்சி செய்கிறீர்கள்?

    ReplyDelete
  4. In the case of sharia law muslims can treat it in one of the following ways.
    1.obedience
    2.disobedience
    3.abuse
    I think abuse is much worse than disobedience.
    In the case of individual law, the Muslim males have abused it a lot for centuries and created enough harm to female community.
    Now some of sharia experts say that our individual laws don't represent real Islamic law. If it it is so why should we struggle to protect it here. Copied from a forum.

    ReplyDelete
  5. Dear Admin you don't have to mention "Dozen" Have you ever mentioned this way to other gathering like this? This shoudn't be the way how you publish, may be it's the way how you talk.

    Indeed we have to respect women but not some women who doesn't reflect the way how they supposed to.

    ReplyDelete
  6. The heading itself shows how intolerant our males are

    ReplyDelete
  7. To: Professional Translation Services

    நீதியரசாரான ஸலீம் மர்ஸூபின் அறிக்கையை சட்டமாக நிறைவேற்ற கோரிக்கை விடுக்க அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால் அது எந்தளவூக்கு மார்கத்தோடு ஒத்துப்போகுது என்று தேடிப்பார்க்க வேண்டாமா!!!

    மார்க்க அறிவற்ற பெண்கள் குழுவினால் உருவாக்கிக் கொடுத்ததைத்தான் அவர்கள் முன்வைப்பது போல் உள்ளது. அல்லாஹ் அவர்களுக்கு அருள் புரிவானாக!

    பெண்களை அடக்கியூம் ஒதுக்கியூம் வாழவைத்துக் கொண்டிருந்த அந்த யூகத்தில் இஸ்லாம் தான் அவர்களை கண்ணியப்படுத்தினர்கள் என்பதை இஸ்லாமிய வரலாறு சான்று பகிறுகின்றது.

    ஆண்களுக்கும் பெண்களுக்கும் சரிசமமான உரிமை வழங்கப்பட்டுள்ளது என்ற விடயம் புத்திக்கு படாத ஒன்று. முடியூமென்றால் ஆதாரபூர்வமாக நிரூபித்துக் காட்டுங்கள்.

    ReplyDelete
  8. Iwaluhaluku Islam enraal ennandu teriyadadu tan pirachchina...

    ReplyDelete
  9. Those who are in authority should consider the comments from the ladies. There's no denying that the worst affected are Muslim women. We should think about their situation in their shoes.

    ReplyDelete
  10. Peace - What do you mean by individual law?

    ReplyDelete
  11. most of the man not ready to follow the sharia on marriage but need sharia on divorce.

    This is the high time to do some changes in law. if someone gone out from sharia at there marriage, He/She can not come under sharia law for divorce.

    ReplyDelete
  12. இஸ்லாமிய பெண் சட்டத்தரணிகளுக்கு நன்றி. காதியாக கட்டாயம் ஒருபெண் நியமிக்ப்பகப்படல் வேண்டும். அந்த நீதி வழங்கும் இடத்தில் பெண்களின் அந்தரங்க விடயங்களை ஒரு ஆண் விசாரிக்கும் போது பெண் ஒருவர் மிகவும் சங்கடப்படுகின்றாள்.சில நேரங்களில் அந்தரங்க விடயங்களில் ஆண் செய்யும் அட்டூழியங்களை சொல்ல முடியாமல் அவள் பழியேற்றுக்கொள்கின்றாள். தன் தாயை தன் சகோதரியை நேசிக்கும் ஒரு ஆண் இப்பெண்களின் முயற்சியை ஏற்றுக்கொள்வர். உலகம் புரியாதவர்களால் கஷ்டம் தான்.

    ReplyDelete
  13. Age limit is not against sharia, most of the Islamic countries have age limit laws to protect child marriage. (Malaysia, Egypt, Iraq and etc).

    without l girls permission marriage is not permitted under sharia, there no proper process to confirm the permission of a girl.

    our community is doing everything outside the sharia at marriage (ex: Dawry, Big party, reception, dress and etc) but fighting for sharia law for divorce.

    There should be changes on current process, if someone follow something out from sharia at marriage, he/she can not come under sharia law at the time of divorce.

    ReplyDelete
  14. We Muslims should encourage ladies participation in all activities .We should not deny their rights .All those who concerned problems facing our communities must have some arrangement to hear their views it should be respected .

    ReplyDelete
  15. காதி நீதிமன்றங்களுக்கு கட்டாயம் ஆண்களுடன் பெண்களும் நியமிக்கப்படல் வேண்டும். ஆண்கள் அந்தரங்க விடயங்களில் பெண்களிடம் காட்டுமிராண்டித்தனமாக நடந்துகொள்ளும் விடயங்ளை ஒரு ஆண் காதியிடம் கூற முடியாமல் போகும் சந்தர்ப்பங்களில் உண்மையான காரணங்ளைக் கூற முடியாமல் ஒரு பெண் குற்றவாழியாக பழி சுமக்கும் நிலை ஏற்படும். போதை வஷ்து வியாபாரிகளுக்கு மரண தண்டனை விதிப்பது சரியா? தவறா? என்பதை அறிவிப்பதற்கு கூட்டம் போடவேண்டும் என்பவர்கள் மற்றும் கண்ட பிறையை பொய்யாக்கியவர்களுக் கெல்லாம் இது எங்கே புரியப்போகின்றது

    ReplyDelete
  16. காதி நீதிமன்றங்களுக்கு கட்டாயம் ஆண்களுடன் பெண்களும் நியமிக்கப்படல் வேண்டும். ஆண்கள் அந்தரங்க விடயங்களில் பெண்களிடம் காட்டுமிராண்டித்தனமாக நடந்துகொள்ளும் விடயங்ளை ஒரு ஆண் காதியிடம் கூற முடியாமல் போகும் சந்தர்ப்பங்களில் உண்மையான காரணங்ளைக் கூற முடியாமல் ஒரு பெண் குற்றவாழியாக பழி சுமக்கும் நிலை ஏற்படும். போதை வஷ்து வியாபாரிகளுக்கு மரண தண்டனை விதிப்பது சரியா? தவறா? என்பதை அறிவிப்பதற்கு கூட்டம் போடவேண்டும் என்பவர்கள் மற்றும் கண்ட பிறையை பொய்யாக்கியவர்களுக் கெல்லாம் இது எங்கே புரியப்போகின்றது

    ReplyDelete
  17. All brothers and sisters search solution for this problem in the light of Quran and Sunna of our prophat.

    Please avoid following kuffar way to reach justice.
    Avoid irrespecting each other
    Look for True Islamic teachings but not village customs

    May Allah blessall of us

    ReplyDelete
  18. இஸ்லாத்தினை அதன் தூய வடிவில் அறிந்து கொள்ள இலங்கை உலமாக்கள் தவரியதும்...மார்க்கம் என்று ஊர் வழமைகளை பித்அத்துகளை மிம்பர் மேடைகளில் தூக்கிப் பிடித்ததன் விளைவுகளே இவை.

    ReplyDelete
  19. Mr. Rasheed said very cleatly.

    ReplyDelete
  20. பிடித்திருக்கிறது என்று புத்தியினைமுன்னுக்கும் இஸ்லாத்தை பின்னுக்கும் தல்லுகிறது பிடித்திருக்கிறது என்று பக்கத்துக்கு மார்க்கத்தை குத்தகைக்கு எடுக்காமல். அரசாங்க degree அரசாங்க மார்க்கம் என்றாமல். நீங்கள் பாதிக்கப்பட்டால ் எங்கள் மார்க்கம் பொறுப்பல்ல இந்த தந்திர குணத்தை கணவனிடம் காட்டியிருப்பாள் போலும் இப்போது மார்க்கத்தை குறை கான்கிறாள்.மார்க்கத்தை பின்னுக்கும் பகுத்தறிவை முன்னுக்கும் என்று கூவுகிறாள் மரணத்தை நினைவில் வைக்கவும்

    ReplyDelete
  21. மாஷா அல்லா. நபி வழிவந்த வீரப்பெண்மணிகளுக்கு எங்கள் வாழ்த்துகள். முட்டாள்தனமான அடிமை விலங்கை உடைத்து சுகந்திர வாழ்வை வாழுங்கள். சில கழிசடைகள் வந்து குலைக்கும். கல்லெடுத்து எறிந்துவிட்டு தீர பயணத்தினை தொடருங்கள்.

    ReplyDelete

Powered by Blogger.