Header Ads



விஜயகலாவுக்கு எதிராக, சிங்கள ராவய பொலிஸில் முறைப்பாடு

விடுதலை புலிகள் அமைப்பு தொடர்பில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் நேற்று வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் சிங்கள ராவய அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

அமைச்சருக்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

விடுதலை புலிகள் மீண்டும் கட்டியெழுப்பப்பட வேண்டும். விடுதலை புலிகள் இருந்த காலத்தில் அதிக சுதந்திரமான வாழ முடிந்ததாக அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.

அமைச்சரின் இந்த கருத்து தொடர்பில் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளதாக சிங்கள ராவய அமைப்பின் செயலாளர் மாகல்கந்த சுகந்த தேரர் தெரிவித்துள்ளார்.


1 comment:

  1. அமைச்சர் விஜயகலா கூறியதில் என்ன தவறுள்ளது?
    அவர் உண்மையைதான் கூறியுள்ளார், பொருக்க முடியாத சிங்கள பேய்கள் ஆடித்திறிகின்றன.
    புலிகள் இருக்கும்வரைக்கும் வடக்கு கிழக்கு நின்மதியிலும் ஜனனாயகத்திலும் இருப்பதை புலிகள் உருதி செய்தார்கள், ஆனால் சட்டப்புத்தகங்களின் ஆக்கக்காரர்களான நீங்கள் கையில் அதிகாரங்களும் சட்டங்க்களும் இருந்தும் இப்படியான குற்றங்க்களை தடுப்பதிலும் மக்களை நின்மதியாக வாழவிடுவதிலும் மறந்துவிட்டீர்கள்.
    புலிகள் இருக்கும் வரைக்கும் நாட்டின் பின்தங்கள்கலுக்கு புலிகளையும் அவர்களுக்கு எதிரான யுத்தங்களையும் காரணம் சொல்லி தப்பித்தீர்கள், புலிகள் ஒழிந்து ஏறத்தால 10 வருடங்களாகியும் இன்னாட்டை நீங்கள் எல்லாம் சேர்ந்து மீண்டும் பாதல குழிக்குள் தள்ளியே போகிறீர்கள், இன்னும் நாடு பொருளாதரத்தில் முன்னேறியதாகவோ, மக்களின் வாழ்வாதார, விலைவாசிப்பிரச்சினைகள் தீர்ந்ததாகவோ இல்லை.
    நாட்டில் யுத்தமில்லை என்றால் நாடு பொருளாதாரத்தில் முன்னேறி, மக்களின் பொருளாதார கஸ்டங்க்கள் நீங்கி விலைவாசிகளும் குறைந்திருக்க வேண்டும், ஆனாலோ நடப்பது தலைகீழாக? அப்போ என்னத்துக்கு புலிகளை ஒழிக்க பாடுபட்டீர்கள்?

    ReplyDelete

Powered by Blogger.