Header Ads



பைசர் முஸ்­தபா எம்­முடன், விளை­யா­டலாம் என எத்­த­னிக்க கூடாது - மனோ கணேசன்

மாகாண சபை தேர்­தலை தாம­தப்­ப­டுத்­தாமல் உடன் நடத்த வேண்டும். மாகாண சபை உறுப்­பி­னர்­களின் எண்­ணிக்­கையை அதி­க­ரிக்கக் கூடாது. மேலும் சிறு­பான்மை இனங்­க­ளுக்கு அநீதி ஏற்­பட்­டுள்­ள­மை­யினால் எல்லை நிர்­ணயம் மீள திருத்தம் செய்­யப்­படல் வேண்டும் என்­பதால் அதற்கு அதிக காலம் தேவை­யாகும். ஆகவே பழைய முறை­மையின்  பிர­காரம் உடன் தேர்­தலை நடத்த வேண்டும் என  சிறு­பான்மை கட்­சிகள் ஒன்றுகூடி நேற்று தீர்­மானம் எடுத்­த­துள்­ளன.

அத்­துடன் இந்த தீர்­மா­னத்தை வியா­ழக்­கி­ழமை கூட­வுள்ள பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான விசேட கட்சி தலை­வர்கள் கூட்­டத்தில் எடுத்­து­ரைக்­கவும் முடிவு செய்­யப்­பட்­டது.

மாகாண சபை தேர்தல் முறைமை தொடர்­பான  சிறு­பான்மை கட்­சி­க­ளுக்­கி­டை­யி­லான முக்­கிய கூட்டம் நேற்று திங்­கட்­கி­ழமை தேசிய நல்­லி­ணக்க, சக­வாழ்வு மற்றும் அர­ச­க­ரும மொழிகள் அமைச்சில் நடை­பெற்­றது. இந்த கூட்­டத்தில்  தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான மனோகணேசன், ஈழ மக்கள் ஜன­நா­யக கட்­சியின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான டகள்ஸ் தேவா­னந்தா, அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் பொதுச்­செ­ய­லாளர் ஸூபைர்தீன் ஆகியோர் கலந்து கொண்­டனர். இதன்­போதே இந்த தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த சந்­திப்பின் போது மாகாண சபையின் புதிய தேர்தல் முறை­மையின் பாத­க­மான தன்மை குறித்து விரி­வாக ஆரா­யப்­பட்­டது. அத்­துடன் இதன்­போது வியா­ழக்­கி­ழமை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் தலை­மையில் நடை­பெ­ற­வுள்ள விசேட கட்சி தலை­வர்கள் கூட்­டத்தில்  எடுத்­து­ரைக்க வேண்­டிய விவ­கா­ரங்கள் குறித்தும் பேசப்­பட்­டன.

 புதிய தேர்தல் முறை­மை­யினை ஏற்க முடி­யாது. குறித்த முறைமை சிறு­பான்மை இனத்­த­வர்­க­ளுக்கு சாத­க­மா­ன­தில்லை. தற்­போது நிர்­ணயம் செய்­யப்­பட்­டுள்ள எல்லை நிர்­ணயம் ஏற்க முடி­யா­தது. ஆகவே எல்லை நிர்­ணயம் மீள செய்­யப்­பட வேண்டும். அதற்கு அதி­க­ளவில் காலம் தேவை­யாகும். ஆகவே அது­வரை ஜன­நா­யக உரி­மை­யான தேர்­தலை பிற்­போட முடி­யாது. இத­ன­டிப்­ப­டையில் பழைய முறை­மையின் பிர­காரம் உடன் தேர்­தலை நடத்த வேண்டும்  என்றும் இந்த கூட்­டத்தில் தீர்­மானம் எடுக்­கப்­பட்­டது.

அதே­போன்று புதிய முறை­மையின் பிர­காரம் தேர்­தலை நடத்­தினால் உள்­ளூ­ராட்சி மன்­றங்­களை போன்று  மாகாண சபை உறுப்­பி­னர்­களின் எண்­ணிக்கை இரு மடங்­காக அதி­க­ரிக்கும். அவ்­வாறு செய்தால் மக்கள் மத்­தியில் அதீத பாரத்தை சுமத்­து­வ­து­போன்று   ஆகி­விடும். ஆகவே மாகாண சபை உறுப்­பி­னர்­களின் எண்­ணிக்கை அதி­க­ரிக்­கப்­படக் கூடாது எனவும் குறித்த சந்­திப்பில் தீர்­மானம் எடுக்­கப்­பட்­டது. 

ஆகவே பழைய முறை­மையின் பிர­காரம் தேர்­தலை நடத்த வேண்டும் என்ற தீர்­மா­னத்தை  வியா­ழக்­கி­ழமை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் கூட­வுள்ள விசேட கட்சி தலை­வர்கள் கூட்­டத்தில் எடுத்­து­ரைக்­கவும் இந்த கூட்­டத்தில் முடிவு செய்­யப்­பட்­டது. 

இந்த சந்­திப்பின் பின்னர் அமைச்சர் மனோ கணேசன் ஊட­கங்­க­ளுக்கு குறிப்­பி­டு­கையில்,

மாகாண சபை தேர்­தலை பழைய முறை­மையின் பிர­காரம் நடத்த வேண்டும் என நாம் ஏற்­க­னவே ஜனா­தி­ப­தி­யி­டமும் பிர­த­ம­ரி­டமும் அறி­வித்து விட்டோம். தற்­போ­தைக்கு அனைத்து கட்­சி­களும் பழைய முறை­மையின் பிர­காரம் தேர்­தலை நடத்த இணக்கம் தெரி­வித்­துள்­ளன. எனினும் அமைச்சர் பைசர் முஸ்­தபா புதிய முறை­மையின் பிர­காரம் தேர்­தலை நடத்த வேண்டும் என்­பதில் உறு­தி­யாக உள்ளார். அது சுதந்­திரக் கட்­சியின் தீர்­மா­னமா என்­பது எமக்கு தெரி­யாது. சுதந்­திரக் கட்சி கூட பழைய முறை­மையின் பிர­காரம் தேர்­தலை நடத்த இணக்கம் தெரி­வித்­துள்­ளது. ஆனால் அமைச்சர் பைசர் முஸ்­தபா பழைய முறை­மையை எதிர்க்­கின்றார். தற்­போது விளை­யாட்டு அமைச்சர் என்­ப­தனால் அவர் எம்­முடன் விளை­யா­டு­கின்றார். விளை­யாட்டு அமைச்சர் எம்­முடன் விளை­யா­டலாம் என எத்­த­னிக்க கூடாது. நாம் புல்லட் ஏந்­துவோர் அல்ல. நாம் பெல்லட் பேப்பர் ஏந்­து­ப­வர்கள். ஆகவே எமது உரி­மைக்கு மதிப்­ப­ளிக்க வேண்டும்.

புதிய முறை­மையின் பிர­காரம் தேர்­தலை நடத்­தினால் உறுப்­பி­னர்­களின் எண்­ணிக்கை அதி­க­ரிக்கும். உள்­ளூ­ராட்சி மன்­றங்­களில் கூட நான்­கா­யி­ர­மாக இருந்த உறுப்­பினர் எண்­ணிக்கை எட்­டா­யிரம் வரை அதி­க­ரித்­துள்­ளது. இது மக்­களின் மீது இன்னும் பாரத்தை சுமத்­து­வ­தாக உள்­ளது. இதன்­படி புதிய முறை­மையின் பிர­காரம் தேர்­தலை நடத்­து­வ­தாயின் மாகாண சபை­யிலும் அதே நிலை­மைதான் ஏற்­படும். ஆகவே தற்­போ­தைக்கு மாகாண சபை தேர்­தலை பழைய முறை­மையில் நடத்தி விட்டு தேர்­தலின் பின்னர் காலம் எடுத்து புதிய முறை­மையை நிறை­வேற்­றுவோம் என்றார்.

4 comments:

  1. சரியான பதிலடி.

    ReplyDelete
  2. UNP & SLFP, unity government is only interested in increasing the expenditure and thereby provide perks and benefits for those elected. They don't think of common men.

    ReplyDelete
  3. Mr Faizer Musthafa is not a good politician.

    He was not elected by people.

    ReplyDelete
  4. Faizer Mustafa is a Minister of Sports. He knows to how to play.....

    ReplyDelete

Powered by Blogger.