July 27, 2018

முஸ்லிம் பெண்ணிடம் அப்பம் வாங்கிச் சாப்பிட்ட பிரேமதாசா, நன்றிக்கடனாக என்ன செய்தார் தெரியுமா..?

பத்தரமுல்லையில் உள்ள செத்திரிபாயவில் உள்ள வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சில் எனது முதல் அரச நியமனம் கிடைத்து அந்த அமைச்சில் கடமையாற்றிக் கொண்டிருந்தேன். அப்போது வீடமைப்பு அமைச்சராக சிறிசேன குரேயும், பிரதியமைச்சராக இம்தியாஸ் பாக்கீா்மாா்க்காரும் அந்த அமைச்சில் பதவி வகித்தாா்கள். . அப்போது ஜானாதிபதியாக ஆர். பிரேமதாச அவா்களே பதவியில் இருந்தாா். 

ஒரு நாள் காலை செத்திரிபாய முன்றலில் காலை கடமைக்குச் செல்லும்போது ஒரு வயது முதிா்ந்த முஸ்லிம் பெண் நின்று கொண்டு பாதுகாப்பு ஊழியர்களுடன் கடிந்து கொள்வதையும் அவா்களுடன் வாக்குவாதப்படுவதையும் கண்டேன். உடனே நான் அவவை சமாதனப்படுத்தி விடயத்தினை விசாரித்தேன் 

”மகன் நான் நேற்று சுபஹ்க வேலையில் குணசிங்கபுரவில் உள்ள சுச்சரித்தவையில் ஜனாதிபதி ஆர் பிரேமதாசாவைச் சந்தித்தேன். அவருக்கு சிறுபிராயத்திலேயே என்னைத் தெரியும். அவா் கொழும்பு மாநகர சபை உறுப்பிணராக இருக்கும் காலத்தில் விடியற்கலை குணசிங்க புரவைச் சுற்றி உடற்பயிற்சி ஜொக்கிங் செய்து விட்டு என்னிடம் வருவாா். நான் சுபஹ்குக்கு அப்பம் சுட்டு விற்பது . என்னிடம் வந்து அருகில் இருந்து அப்பம் சாப்பிட்டுவிட்டு அதற்குரிய பணமும் தந்து விட்டுப்போவாா். 

எனது குடும்ப நிலைமை அவருக்கு எனக்கு 2 பெண்கள் இருப்பதையும் அவருக்குத் தெரியும். அதன் பின் அவர் பிரதமராகி ஜனாதிபதியாகிவிட்டாா். அவரைச் சந்திக்கும் வாய்ப்பே எனக்குக் கிடைக்கவில்லை. எனது பிள்ளைகளும் திருமணம்முடித்து பேரப்பிள்ளைகளும் அந்த முடுக்கு வீட்டிலேயே கஸ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றேன்.

 நேற்று இரவு தான் நான் எனது போ்த்தி மாா் 2வரையும் அழைத்துக் கொண்டு வீடொன்றைக் தருமாறு ஒரு மனுவொன்றை எழுதி அவர் விடியட்காலை சுபஹ்லேயே மக்களை சந்திக்கும் போது நானும் சென்றேன். என்னைக் கண்டதும் அவா் மிகவும்் சந்தோசப்பட்டா். 

ஏன் இவ்வளவு காலமும் என்னை நீங்க சந்திக்க வரவில்லை எனக் கேட்டாா். 

இந்தக் கடித்தில் ஏதோ எழுதியிருக்கிறாா். இந்தக் கடிதத்தை எடுத்துக் கொண்டு செத்திரிபாயவில் உள்ள வீடமைப்பு அமைச்சின் செயலாளா் அயிலப் பெரும அவரிடம் கொடுத்துவிட்டு மறு நாள் காலை சுபஹ்குக்கு அவா் என்ன சொன்னாா் என அடுத்தநாள் சபஹுக்கு வந்து சொல்லச் சொன்னாா் . ஆனால் இந்த அமைச்சின் உள்ள இந்த பாதுகாப்பு அதிகாரிகள் என்னை விடுகிறாா்கள் இல்லை இந்தக் கடித்தைக் இவா்களுகளுக்கு காட்டச் சொல்கின்றாா்கள். எப்படி இக் கடிதத்தினை இவா்களுக்கு காட்டுவது , என்றாா் அந்தப் பெண். 

உடன் நான் பாதுகாப்பு அதிகாரிகளிடம் விடயத்தைச் சொல்லி உடன் அமைச்சின் செயலாளரின் அலுவலகத்திற்குச் அந்தப் பெண்னை அழைத்துச் சென்று சோ் ”ஜனாதிபதித்துமா மேயாட்ட லீவ்ம் தீலாத்தியனவா ஒபத்துமாட்ட தென்ட கியலா ” என அவரிடம் சொன்னேன். ” அந்த கடித்தினை அவா் பிரித்து பாா்த்தாா் அந்த மனுவில் பச்சை நிற பெரிய பெல் பேனா எழுத்துக்களால் எழுதப்பட்டிருந்தது ”அயிலா. வாகம அதம மேயாட்ட கெயக் தென்ட நே கியலா ஆப்பகு அறின்ட ஏபா ” என ஆர் பிரேம் என ஒப்பம் மிட்டிருந்தாா். 

இந்தக கடித்தினை ஒரு முஸ்லிம் பெண் வருகிறாா் என ஏற்கனவே பிரேமதாசாவின் தணிப்பட்ட உதவியாளா் முகைதீன் அவருக்கு தொலைபேசியிலும் சொல்லியிருந்தாா். 

செயலாளா் உடன் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைத் தலைவா் குணதிலக்கவுக்கு தொலைபேசி எடுத்து ” கொயிகரி கெயாக் தியன்னவதா , நே சோ் ஒக்கம இவரை நே நே அதம எக்க கெயக் யத்துர அரக்யகென என்ட “ சோ் குணசிங்கபுர கெயாக் 2 தியன்னவா அபே செக்குரிட்டிட்ட வென்கரப்பு எக்க கே யத்துர வாகாம அரக் கென என்ட” எங்கயாவது வீடு இருக்குதா ? என வீடமைப்பு அதிகார சபைத் தலைவர் குணதிலக்கவிடம் செயலாளா் கேட்கின்றாா் அவா் இல்லை ஆனால் குணசிங்கபுரவில் பாதுகாப்பு ஊழியா்கள் தங்குவதற்கு 2 வீடுகள் உள்ளது என்கிறாா். அதில் 1 வீட்டுக்கான திறப்பினையும் வீட்டுக்கான விண்ணப்பம் தஜ்தாவேஜூகளையும் அனுப்பும் படி செயலாளா் தலைவரைப் பணித்தாா். அதுவரையும் இந்த பெண்னை அவரது பிறமுகா்கள் சந்திக்கும் அறையில் உட்காரும்படியும் பணித்தாா். உடன் திறப்பு தஜ்தாவேஜூகளுடன் முகாமையாளா் (தயானாந்தா) இரு மணித்தியாலயங்களுக்குள் வந்தாா் .என்னை அழைத்து 50ஆயிரம் ருபா செலுத்த முடியுமா என அந்தப் பெண்னிடம் கேட்கச் சொன்னாா் .அவவோ செத்சிரிபாயவுக்கு வருவதற்கும் பிரேமதாசாவிட பொடிகாட் முகைதீன் தான் 100 ருபா தந்தாா் எனச் சொன்னாா். உடன் விண்ணபத்தில் கையடையாளத்தினை இட்டு உடன் செயலாளரினால் வீட்டுக்கான திறப்பும் அந்தப் பெண்னிடம் வழங்கப்பட்டது.அது மட்டுமல்லாமல் முகாமையளார் வந்த வாகணத்தில் ்இந்த பெண்னை அழைத்து அங்கு வீட்டை திறந்தும் இப் பெண்னின் சகல பொருட்களையும் ஏற்றி அங்கு கொண்டு கொடுக்கவும் செயலாளா் முகாமையாளரைப் பணித்தாா். அந்தப் பெண் அடுத்த நாள் சுச்சரித்தவுக்கு சென்று ஜனாதிபதியிடம் சென்று செயலாளா் அயிலப்பெரும மாத்தயா வீடும் தந்து என்னை அங்கேயே எனது பொருட்களையும் ஏற்றி இறக்குவதற்கும் வாகணங்களயும் தந்தாா். சுது மாத்தயா கரி கொந்தாய் சோ் எனக் கூறியதாகவும் அந்தப் பெண் சொன்னாா். ஆனால் இப்போதெல்லாம் ஜனாதிபதிகளின் ஆயிரக்கணக்க்கான கடிதங்கள் அலுவலகங்கில் தேங்கிக் கிடக்கின்றன. மக்கள் அனுப்பும மனுக்களுக்கெல்லாம் கடிதம் கிடைத்தது உரிய அமைச்சருக்கு அனுப்பப்ட்டுள்ளது என்று மட்டுமே பதில் வருகின்றது ஏதாவது ஒரு கடிதததிற்கு நடவடிக்கை எடுத்து அதனால் பொது மக்கள் பிரயோசனம் அடைந்ததாக நான் கண்டதில்லை. பிரேமதாசாவுக்கு பிறகு வந்த எந்தவொரு ஜனாதிபதியினது அனுப்புகின்ற கடிதங்களுக்கும் மக்கள் பிரயோசனம் அடைந்தாதாக நான் கேள்விப்படவும்மில்லை. 

(அஷ்ரப் ஏ சமத்)

9 கருத்துரைகள்:

President Ranasinghe Premadasa is fondly remembered as "Peoples President" due to this. People of this country is missing a true Sri Lankan.

மிக உன்மை எனது கடிதம் ஒன்றுக்கும் இவ்வாறான நன்மை கிடைத்துள்ளது.

Premadasa is a Symbol of Dynamism!

Hon. Premadasa is a great leader of Country..

100& True & my Farther sent a letter to him for water problem & he got a very good response & the water board Engineer walked all the way from Peradiniya to Kadugannawa to study the cause of problem and finally that end up with a big project with japan aid - Great leader never ever we will get a president like this.

If you post this in proper languages that would be great to read without struggle unlike what you did here with Sinhala in Tamil even with odd spelling

ஒரு சிறந்த தலைவனை துரோகி புலி பயங்கரவாதிகள் அநியாயமாக கொன்றுவிட்டனர்

if you write this article for Tamil reading ppl y the hell dont you translate it.. Singlish you moron

Post a Comment