Header Ads



விஜ­ய­க­லாவை விசா­ரிக்கும், பொறுப்பு லத்­தீ­பிடம்

புலி­களை மீண்டும் உரு­வாக்க வேண்­டு­மென்­பதே தமது முக்­கிய நோக்கம் என்று இரா­ஜாங்க அமைச்சர் விஜ­ய­கலா மகேஸ்­வரன்  தெரி­வித்த சர்ச்­சைக்­கு­ரிய கருத்து தொடர்பில் விசா­ரணை செய்யும் பொறுப்பு பொலிஸ் விஷேட அதி­ர­டிப்­ப­டையின் கட்­டளைத் தள­ப­தியும், போதைப்­பொருள் தடுப்புப் பிரிவு,  திட்­ட­மிட்ட குற்­றங்கள் மற்றும் குற்­ற­வியல் விவ­கா­ரங்கள் தொடர்­பி­லான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம்.ஆர். லத்­தீ­பிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளது. இந்த விடயம் தொடர்பில் பொலிஸ் தலை­மை­ய­கத்­துக்கு கிடைக்கப் பெற்ற முறைப்­பா­டு­களைக் கருத்­திற்­கொண்டு அவற்றை பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜய­சுந்­தர நேற்று இவ்­வாறு குற்­ற­வியல் விவ­கா­ரங்­க­ளுக்கு பொறுப்­பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதி­ப­ரிடம் கைய­ளித்­த­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்சகர் ருவன் குண­சே­கர தெரி­வித்தார்.

 சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம்.ஆர். லத்­தீ­பிடம் ஒப்­ப­டைக்­கப்பட்­டுள்­ளன. இது குறித்த விசா­ர­ணைகள் குற்­ற­வியல் விவ­கா­ரங்­களைக் கையாளும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் கமல் சில்­வாவின் கீழ், பொலிஸ் தலை­மை­ய­கத்தில் உள்ள சிறப்புக் குற்­றத்­த­டுப்புப் பிரி­வூ­டாக செய்­யப்­ப­ட­வுள்­ளன. இதற்­கான ஆரம்­ப­கட்ட விசா­ரணை நட­வ­டிக்­கைகள் நேற்று ஆரம்­பிக்­கப்பட்­ட­தாக பொலிஸ் தலை­மை­ய­கத்தின் தக­வல்கள் தெரி­வித்­தன.

 இந்­நி­லையில் இரா­ஜாங்க அமைச்சர் விஜ­ய­கலா மகேஸ்­வ­ரனின் குறித்த உரை தொடர்பில், முதல் கட்­ட­மாக எவ்­வித மாற்­றங்­க­ளையும் செய்­யாத காணொ­லி­களைப் பெற விசா­ர­ணை­யா­ளர்கள் தீர்­மா­னித்­துள்­ள­தா­கவும் இத­னை­விட அவர் குறித்த உரையை ஆற்றும் போது அங்­கி­ருந்­த­வர்கள் தொடர்பில் அவ­தானம் செலுத்தி சாட்­சி­க­ளையும் பதிவு செய்­ய­வுள்­ள­தா­கவும் பொலிஸ் தலை­மை­ய­கத்தின் உய­ர­தி­காரி ஒருவர் தெரி­வித்தார்.

முன்­ன­தாக தேசிய பாது­காப்­புக்கு அச்­சு­றுத்தல் விடுக்கும் வண்ணம் சிறுவர் மற்றும் மகளிர் விவ­கார இரா­ஜாங்க அமைச்சர் விஜ­ய­கலா மகேஸ்­வரன் நடந்­து­கொண்­டுள்­ளதால் அவரை உடன் கைது செய்­யு­மாறு சிங்­ஹல ராவய முறைப்­பாடு ஊடாக பொலிஸ் மா அதி­பரைக் கோரி­யி­ருந்­தது.

அத்­துடன் அர­சி­ய­ல­மைப்பை மீறும், பயங்­க­ர­வாத தடைச் சட்டம், தண்­டனை சட்டக் கோவை, சிவில் மற்றும் அர­சியல் உரி­மைகள் தொடர்­பி­லான சர்­வ­தேச இணக்­கப்­பாட்டு சட்­டத்தின் கீழ் தண்­ட­னைக்­கு­ரிய குற்­றத்தை இரா­ஜாங்க அமைச்சர் விஜ­ய­கலா மகேஸ்­வரன் புரிந்­துள்­ள­தாகக் கூறி அவரை உடன் கைது செய்து நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு வலி­யு­றுத்தி உண்­மையை கண்­ட­றியும் அமைப்பு சார்பில் சட்­டத்­த­ரணி பிரே­மநாத் சி தொல­வத்­தவும் பொலிஸ் மா அதி­ப­ருக்கு முறைப்­பா­ட­ளித்­தி­ருந்தார். இத­னை­விட பிவி­துரு ஹெல உரு­ம­யவும் விஜய கலா மகேஸ்வரனுக்கு எதிராக முறைப்பாடளித்திருந்தது. இந்த அனைத்து முறைப்பாடுகளையுமே பொலிஸ் மா அதிபர் நேற்று குற்றவியல் விவகாரங்களுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம்.ஆர். லத்தீபிடம் ஒப்படைத்து விசாரணைகளை நடாத்த உத்தரவிட்டுள்ளார்.
-Vidivelli

3 comments:

  1. நாட்டிலே எவ்வளவோ முக்கிய பிரச்சிணைகளுண்டு, அவைகளில் கவணம் செலுத்தாமல் ஒன்றுக்கும் பயனில்லாத ஒருவரின் கருத்துக்கு முழு நாடும் கவணம் செலுத்துவதானது மிக கேவலமானது.வேரொரு பிரச்சிணைகளுமில்லாதவனுகளே இவ்வாரான பிரயோசனமற்ற விடயங்க்களில் கவணம் செலுத்துவர்.
    இது தவிர நாட்டை முண்ணேற்றி, அதன் மக்களை பிச்சைக்கார தனத்திலிருந்தும் வாழ்க்கையிலிருந்தும் முன்னேற்றிவைக்க பாடுபடலாம்.
    மொத்தத்தில், இதெல்லாம் ஒரு அரசியல் நாடகமென்பதையும் நாமெல்லோரும் விளங்கவேண்டும். நாட்டிலுள்ள தற்கால பிரச்சினைகளை திசைதிருப்ப ஒவ்வொரு அரசாங்கமும் அப்பப்ப செய்யும் கிழப்பிவிடும் கிறீஸ் மனிதரைப்போன்ற பூதங்க்களே இவைகள்.
    மகிந்த செய்தால் ரனிலும், ரனில் செய்தால் மகிந்தவும் ஆலுக்கு ஆல் மாறிமாறி குறைசொல்லி காலத்தை கடத்தி இருதியில் மக்களை ஏமாற்றும் வித்தைகளே இவைகள்.நாட்டில் குப்பை சேறும், அகற்றும் கொழும்பு நகர மூயூனிசிபல் கவுன்சிலுக்கே அடிப்படை பிரச்சினைகள் கொண்டதை, தீர்க்க வழிதேடாமலும், யோசிக்க ஆக்களுமில்லாத பிரச்சினைகள் கொண்ட நாடே இலங்கை. அப்போ, மற்ற பிரச்சினைகளை இங்கு ஒவ்வொன்றாகா சொல்லவா வேண்டும்?

    ReplyDelete
  2. ஏற்கனவே ஜிந்தோட்டை திகன வில் நடந்தேறி இவருடைய பட்டாளத்தின் அத்துமீறல்களை விசாரித்து கலைப்படைந்து விட்டார். இப்போது இது வேற

    ReplyDelete
  3. லத்தீப் பாய்,

    திகன, அம்பாறை கலவரங்களை விசாரியுங்கோ.

    எங்கேயோ போகிற, விஜயகலாவை விசாரித்து, என்ன சாதிக்கப் போகிறீர்கள்?

    விஜயகலாவை, சிங்களவனை பாதுகாப்பான்.

    நீங்கள் ஒன்றும் செய்யத் தேவை இல்லை.

    ReplyDelete

Powered by Blogger.