Header Ads



கோத்தபாய ஏன் நடுங்குகிறார்...?

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, ஊழல், மோசடிகளை செய்யவில்லை என்றால், அவருக்கு எதிராக முன்னெடுக்கப்படும் நீதிமன்ற நடவடிக்கைகளை அச்சமின்றி எதிர்கொள்ள ஏன் தயங்குகிறார் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரான அமைச்சர் துமிந்த திஸாநாயக்க கேள்வி எழுப்பியுள்ளார்.

தம்புள்ளையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அதிகார சபைக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள விசேட மேல் நீதிமன்றத்தில் முதலாவதாக தனக்கு எதிரான வழக்கை விசாரணைக்கு எடுக்குமாறு கூறும் கோத்தபாய மறுபுறம் தான் கைது செய்யப்படுவதை தடுக்க உயர் நீதிமன்றத்தின் உதவியை நாடுகிறார்.

நாட்டின் தலைமைத்துவத்தை பொறுபேற்க கனவு காணும் நபர்கள் நீதிமன்றம், சட்டம் ஆகியவற்றுக்கு அஞ்சி, அதில் இருந்து தப்பிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ராஜபக்சவினர் ஆட்சியில் இருக்கும் போது சட்டத்தை தாம் விரும்பிய வகையில் கையாண்டனர். சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் நீதிமன்றங்களுக்கு பல்வேறு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன.

அப்படி நடந்து கொண்ட ராஜபக்சவினர், அதிகாரம் தமது கையை விட்டு சென்ற பின்னர், சட்டம் மற்றும் நீதிமன்றத்தின் நியாயங்கள் பற்றி உபதேசம் செய்கின்றனர்.

இவ்வாறு உபதேசம் செய்யும் ராஜபக்சவினர் தமக்கு எதிராக செயற்படுத்தப்படும் நீதிமன்ற நடவடிக்கைகளில் இருந்து தப்ப முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.

இதேவேளை, கொள்ளையிடவில்லை, மோசடிகளில் ஈடுபடவில்லை என்றால், அச்சப்பட தேவையில்லை. தன்னை கைது செய்ய போகிறனர் என்று உயர் நீதிமன்றத்தின் உதவியை நாட தேவையில்லை.

அச்சமில்லாமல் நீதிமன்றத்திற்கு சென்று தன்னை நிராபராதி என்று நிரூபிக்க வேண்டும் எனவும் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

Powered by Blogger.