Header Ads



கொழும்பு பெரிய பள்­ளி­வா­சலின் அசமந்தம் - மாளிகாவத்தை மையவாடி காணி பறிபோகுமா..?

காணியை அப­க­ரித்து சட்­ட­வி­ரோ­த­மாக மாடிக்­கட்­டிடம் ஒன்று நிர்­மா­ணிக்­கப்­பட்டு வருவ­தற்கு ஜய­சிங்க என்­ப­வ­ருக்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதி­மன்றில் தாக்கல் செய்யப்­பட்­டுள்ள வழக்கில் நீதி­மன்றம் மைய­வா­டிக்குச் சொந்தமான காணியை நில­அ­ள­வீடு செய்துள்ளது.

நீதி­மன்றின் உத்தரவுக்கமைய  நில­ அள­வையாளர் ராசப்பா­வினால் கடந்த புதன்­கி­ழ­மையும், சனிக்­கி­ழ­மையும் காணி நில அள­வீடு செய்­யப்­பட்­டது. இந்த வழக்­கினை 2012 ஆம் ஆண்டு முஸ்லிம் மத உரி­மை­களைப் பாது­காக்கும் அமைப்பு தாக்கல் செய்­தி­ருந்­துள்­ளமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

மாளி­கா­வத்தை முஸ்லிம் மைய­வாடி காணி அப­க­ரிப்­புக்கு எதி­ராக 2004 ஆம் ஆண்டு வழக்­கொன்று தாக்கல் செய்­யப்­பட்­டி­ருந்­ததும் பெரி­ய­பள்­ளி­வாசல் நிர்­வா­கிகள் வழக்கில் ஆஜ­ரா­காத கார­ணத்­தினால் 2008 ஆம் ஆண்டு வழக்கு நிறுத்­தப்­பட்­டது.

இத­னை­ய­டுத்து 2012 ஆம் ஆண்டு முஸ்லிம் மத உரி­மை­களைப் பாதுகாக்கும் அமைப்பு வழக்கினைத் தாக்கல் செய்ததாக அவ் அமைப்பின் தலைவர் அஸ்லம் ஒத்மான் தெரிவித்தார்.

முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபயவின் அனுமதியுடனே கொழும்பு பெரிய பள்­ளி­வா­சலின் நிர்­வா­கத்தின் கீழ் இருக்கும் மாளி­கா­வத்தை மைய­வாடி காணியில் சட்டவிரோத கட்டிடத்தை ஜய­சிங்க என்பவர் நிர்மாணித்ததாக ஏற்கனவே தகவல்கள் வெளியானைமை  இங்கு குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.