Header Ads



தூக்குத் தண்டனை, நிறைவேற்றப்படுவதை எதிர்க்கிறேன் - மங்கள

போதைப்பொருள் விற்பனை செய்வோருக்கு எதிராக மரண தண்டனையை அமுல்படுத்துவது தொடர்பிலான அமைச்சரவையின் தீர்மானத்துக்கு நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிப்பதற்கு பதிலாக ஆயுள் தண்டனை விதிக்கமுடியும் எனவும், மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு, கொள்கை அளவில் தன்னால் உடன்பட முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறெனினும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், நேற்று முன்தினம் (10) கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் போதைப்பொருள் விற்பனை செய்வோருக்கு எதிராக மரண தண்டனையை அமுல்படுத்துவது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

நீதியமைச்சர் தலதா அத்துகோரல சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்துக்கு அமைச்சரவை அங்கிகாரமளித்திருந்தது.

அமைச்சரவைக்  கூட்டத்தின் பின் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா, இந்தத் தீர்மானத்துக்கு அமைச்சரவை ஏகமனதாக அங்கிகாரமளித்ததாகத் தெரிவித்திருந்தார்.

மேலும் அமைச்சரவையில் கொண்டுவரப்பட்ட ஒரு தீர்மானத்துக்கு அனைத்து அமைச்சர்களும் அங்கிகாரமளித்த முதலாவது சந்தர்ப்பம் இதுவெனவும் அவர் குறிபிட்டார்.

4 comments:

  1. what is the problem for you...?

    ReplyDelete
  2. ஏன் நீங்கள் இந்த பூமியில் விசத்தை பரப்பும் இந்த நாசகார சக்கிகளை அழிக்க விரும்பவில்லை நீங்கள் கூறுவதுபோன்று சிறையில் அவ்ரகளுகு 3 நேரமும் உணவு கொடுத்து வைத்துக்கொண்டிருந்தால் அவர்கள் சில உயர் அதிகாரிகளின் உதவியுடன் சிறையிலிருந்து கொண்டு போதைபொருட்களை விற்பனை செய்யும் செய்திகளையும் பார்கின்றோம் அந்த உயர்அதிகாரிகளில் நீங்களும் ஒருவ்ரோ!?

    ReplyDelete
  3. Stna, this shows that you not prepared to listen to others opinion. We are not saying he is correct. But it is his opinion and it is up to you accept or reject. Do not attack people personally.

    ReplyDelete
  4. Hi stranger cruso, you also indirectly supporting for mangala to increase drugs smuggling business

    ReplyDelete

Powered by Blogger.