July 01, 2018

மொஹமட் பின் சல்மான், சவூதியை என்ன செய்யப் போகிறார்..?

சல்மான் பின் அப்துல் அஸீஸ் அல்-­சவுத் 2015ல் சவுதி அரி­யணை ஏறி­யது முதல்;, உள்­நாட்டு மற்றும் பிராந்­தியக் கொள்­கைகள் தொடர்­பாக ரியாத்தின் நட­வ­டிக்­கைகள் மற்றும் தீர்­மா­னங்கள் என்­ப­வற்றில் ஒரு தெளி­வற்ற தன்­மை­யையே காணக்­கூ­டி­ய­தாக உள்­ளது. வேறு வார்த்­தை­களில் கூறு­வ­தானால், கடந்த மூன்று ஆண்­டு­களில் அரசு ஒரு அமை­தி­யான சூழலை அனு­ப­விப்­பதில் தோல்­வி­க­ளையே சந்­தித்­துள்­ளது.

சவூதி அரே­பி­யாவின் முடிக்­கு­ரிய இள­வ­ரசர் முகம்­மது பின் சல்மான், இராச்­சி­யத்­திற்­கான ஒரு பிர­கா­ச­மான எதிர்­கால வடி­வ­மைப்­பா­ள­ராகத் தன்னை அறி­மு­கப்­ப­டுத்­திக்­கொள்­வ­தற்­காக சர்ச்­சைக்­கு­ரிய பல நட­வ­டிக்­கை­களை எடுத்­துள்ளார்.

வெவ்­வேறு கோணங்­களில் ஆய்­வுக்­குட்­ப­டுத்த வேண்­டிய பல சமூக, பண்­பாட்டு, பொரு­ளா­தார மற்றும் அர­சியல் சீர்­தி­ருத்­தங்­களை பின் சல்மான் பர­வ­லான முறையில் நடை­மு­றைப்­ப­டுத்தி வரு­கிறார்.

பின் சல்மான் முடிக்­கு­ரிய இள­வ­ர­ச­ராக அறி­விக்­கப்­பட்ட நாள் முதல் சவுதி அரே­பி­யாவின் அர­சியல் மற்றும் கலா­சார அணு­கு­முறை மாற்­றங்­க­ளுக்­குள்­ளா­யின. அவ­ரது சீர்­தி­ருத்­தங்கள் வஹா­பிய மத­கு­ரு­மாரின் வலு­வான விமர்­ச­னங்­களை எதிர்­நோக்­கி­யது. ஆனால் நாட்டின் பிர­தான அர­சியல் விவ­கா­ரங்­களில் நாட்டு அர­சரின் முடிவே இறு­தி­யா­னது என்­பதால் அவர்கள் பின்­வாங்க நேர்ந்­தது.

சவுதி அரே­பியா பெண்­க­ளுக்கு வழங்­கி­யுள்ள சுதந்­தி­ரங்­களுள் வாகனம் ஓட்­டுதல், அரங்­கங்­களில் நுழைதல், கண­வ­னு­டைய அனு­ம­தி­யின்றி வெளி­நாட்டுப் பிர­யா­ணங்­களை மேற்­கொள்தல்; போன்­றவை சர்­வ­தேச சமூ­கத்தால் வெகு­வாக வர­வேற்­கப்­பட்­டது.
இந்த சீர்­தி­ருத்­தங்­களைப் பொறுத்­த­வ­ரையில் இரண்டு அடிப்­படை பிரச்­சி­னைகள் உள்­ளன: முத­லா­வ­தாக, இவை உண்­மை­யான சீர்­தி­ருத்­தங்கள் அல்ல. யேம­னியப் படு­கொ­லைகள் மற்றும் பயங்­க­ர­வா­தத்­துக்குத் துணை­போதல் என்­ப­வற்­றினால் ஏற்­பட்­டுள்ள களங்­கத்­தையும் கருத்­து­வே­று­பா­டு­க­ளையும் கலைந்­தெ­றிந்து இராச்­சி­யத்தின் பிர­தி­மையை மீட்­டெ­டுப்­ப­தற்­கான ஒரு உபா­யமே, இந்த அதி­ரடி மாற்­றங்கள் என்றே கரு­தப்­ப­டு­கின்­றது.  இரண்­டா­வ­தாக, அடிப்­ப­டையில் அங்கு சீர்­தி­ருத்­தங்கள் தேவைப்­பட்­டாலும், அந்த சீர்­தி­ருத்­தங்கள், ஏற்­க­னவே இல்­லா­தொ­ழிக்­கப்­பட்­டுள்ள மிக முக்­கி­ய­மான அடிப்­படை சீர்­தி­ருத்­தங்­களை அடிப்­ப­டை­யாகக் கொண்­டவை அல்ல.

பின் சல்மான், இந்த சீர்­தி­ருத்­தங்கள் மூலம் இராச்­சி­யத்தின் பழ­மை­வாதப் போக்கை மாற்­றி­ய­மைக்­கப்­போகும் ஒரு லட்­சிய புரு­ஷ­ராகத் தன்னைக் காட்­டிக்­கொள்­ளவே முற்­பட்­டுள்ளார்.

என்­றாலும், அவ­ரு­டைய சீர்­தி­ருத்­தங்கள் யதார்த்­தத்­துக்குப் பொருத்­த­மில்­லாத அவ­சர நட­வ­டிக்­கை­யா­கவே பார்க்­கப்­ப­டு­வ­தோடு, இவை சவுதி அரே­பி­யாவின் சமூக நிலைப்­பாட்­டுக்கு எவ்­வி­தத்­திலும் பொருத்­த­மற்­றவை என்றும் கரு­தப்­ப­டு­கின்­றது.

அதே­நேரம், இந்த சீர்­தி­ருத்­தங்­க­ளுக்­கான அர­சியல், சமூக மற்றும் பொரு­ளா­தார நிலை­மைகள் சரி­யாக வடி­வ­மைக்­கப்­ப­ட­வில்லை என்றும் தெரி­கி­றது.
இப்­போது, சவுதி அரே­பியா ஒரு பெரிய நிலை­மாற்­றத்தின் விளிம்பில் உள்­ளது. பின் சல்மான் தனது சீர்­தி­ருத்­தங்­க­ளுடன் முன்­னோக்கி செல்லும் சாத்­தியம் இருப்­ப­து­போல, கடும்­போக்­கா­ளர்கள் அவ­ரது நட­வ­டிக்­கை­களைத் தடுத்து நிறுத்தி அவரை வெளி­யேற்­றி­வி­டு­வ­தற்­கான சாத்­தி­யமும் இல்­லா­ம­லில்லை.

அங்கு சீர்­தி­ருத்­தங்­களை ஆத­ரிப்­பதில் அல்­லது எதிர்ப்­பதில் சாதா­ரண மக்கள் முக்­கிய பங்கை வகிக்க முடி­யாது. முதலில், சவூதி அரே­பி­யாவில் எந்­த­வொரு ஒத்­தி­சை­வான அர­சியல் கட்­சியும் இல்லை என்­பது ஒரு முக்­கிய காரணம். இரண்­டா­வ­தாக, நாட்டில் போது­மான சமூக மற்றும் கலா­சார அடிப்­ப­டைகள் இல்லை. ஆட்சி முறைமை, ஒவ்­வொரு குழு­வையும் அதன் நோக்­கங்­களை அடைந்­து­கொள்­வ­தற்­காக மற்­றொரு குழுவை அடக்கி ஒடுக்­கு­வ­தற்கு வழி சமைக்­கி­றது.

தவிர, சல்­மானின் சீர்­தி­ருத்­தங்கள் எண்ணெய் வருவாய் வீழ்ச்­சி­யி­லி­ருந்து உரு­வான சமூக இடை­வெ­ளிகள்;, குறிப்­பாக வேலை வாய்பை நாடும் இளை­ஞர்­க­ளி­டையே காணப்­படும் சமூக அதி­ருப்தி, ஆளும் முறைமை மற்றும் பின்­தங்­கிய பொரு­ளா­தார நிலை­மைகள் ஆகி­ய­வற்­றுக்­கி­டை­யி­லான பிரி­வி­னைகள் கார­ண­மாக ஒரு பின்­ன­டைவை எதிர்­நோக்­கலாம்.
முடிக்­கு­ரிய இள­வ­ர­சரின் சீர்­தி­ருத்­தங்­களின்

 விளை­வுகள்:

பின் சல்­மானின் சீர்­தி­ருத்­தங்கள் நேர­டி­யாக மேற்­கத்­திய நாடு­களின், குறிப்­பாக அமெ­ரிக்­காவின் செல்­வாக்கு படிந்­த­வை­யாகும். பல வரு­டங்­க­ளாக அவர் அமெ­ரிக்­காவில் வசித்து வந்­ததால், மத மற்றும் சமூக விவ­கா­ரங்கள் தொடர்­பான அவ­ரது கருத்­துக்­களில் அது தாக்­கத்தை செலுத்­தி­யுள்­ளது. அவ்­வாறே, அமெ­ரிக்­காவும்; மேற்கு நாடு­களால் செல்­வாக்கு செலுத்­தப்­பட்­டவை  என்­பதை எடுத்­துக்­காட்டும் அவ­ரு­டைய சீர்­தி­ருத்­தங்­களை முன்­னெ­டுக்க முடிக்­கு­ரிய இள­வ­ர­சரின் மீது அழுத்­தத்தைப் பிர­யோ­கித்து வரு­கின்­றது.

பின் சல்­மானின் சீர்­தி­ருத்­தங்கள் சவூதி அரே­பி­யா­விற்கு ஒரு நெருக்­க­டியை ஏற்­ப­டுத்­தலாம். மத்­திய கிழக்கில் ஆட்சி முறை­மை­களால்; உத்­த­ர­வி­டப்­பட்ட சீர்­தி­ருத்­தங்கள் பொது­மக்கள் எதிர்ப்பை எதிர்­நோக்­கின. இந்த சீர்­தி­ருத்­தங்கள் இறு­தியில் ஒரு கிளர்ச்­சிக்கே வழி­வ­குத்­தன.

 சவூதி அரே­பி­யாவில் சீர்­தி­ருத்­தங்கள் மதச்­சார்­பின்­மைக்கு வழி­வ­குக்கும் என்­ப­தோடு மேற்­கத்­திய விழு­மி­யங்­களை மேம்­ப­டுத்தும் செயல்­பா­டுகள், பெரு­ம­ளவில்; பழ­மை­வா­தத்தில் ஊறித் திழைத்த சவூதி சமு­தா­யத்தில் அதிக வர­வேற்­பையும் பெறாது.

ழூ கடந்த மாதங்­களில், சவுதி மக்கள், சீர்­தி­ருத்­தங்­க­ளுக்கு எதிர்ப்பு தெரி­வித்து வந்­தாலும் பின் சல்மான் தொடர்ந்தும் பல­வந்­தத்தின் மூலம் தனது நட­வ­டிக்­கையை செயல்­ப­டுத்தி வந்­துள்ளார்.

ழூ முடிக்குரிய சவுதி இளவரசரின் சீர்திருத்தங்கள் பாலஸ்தீனிய மக்களின் நலன்களைக் குழிதோன்டிப் புதைத்துவரும்; இஸ்ரேலுடன் நெருக்கமான உறவுகளை நிறுவும் நோக்கினையும் கொண்டுள்ளது.

சுருக்கமாக சொல்வதானால், சவுதி அரேபிய சமுதாயத்தில் பல சவால்களை உருவாக்கிய, பின் சல்மான் முடிக்குரிய இளவரசராக  நியமனம் பெற்ற நாள் தொட்டு, பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார சீர்திருத்தங்களைச் செயல்படுத்த சவுதி அரேபியா தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. சந்தேகத்திற்கு இடமின்றி, இது சவுதி அரேபியாவின் அரசியல் உறுதிப்பாட்டுக்கு அச்சுறுத்தலாக அமைவதோடு, உள்நாட்டில் ஒரு குழப்பநிலையை உருவாக்கும் அபாயமும் உள்ளது.

-அப்­ஸானே ரெஷாத்
தமிழில்: முஹம்மத் றஸீன்-

5 கருத்துரைகள்:

Fool, idiot, crazy Saud king family be members. Kingdom will fallen after arrival of imaam Mahdi.

இப்போ அமேரிக்காவின் முயற்சியால், சவுதியில் பெண் அடிமைதனம் ஒழிக்கப்பட்டு வருகின்றது. மனித உரிமைகள். கல்வியறிவு ஆகியன வளர்கின்றன.
சவுதியின் முன்மாதிரியை பாக்கிஸ்தான், ஈரான் போன்றன பின்பற்றி முன்னேறலாம் தானே.

ஐயோ,அந்தோணி ஒரு அறிவு கொழுந்து ..............

Ajan Antoneyraj, i m very proud of your enlightened knowledge on Islam and Muslim.

We Muslims will never exhibited our mother and sister in the public like you and your asshole westerner doing.

Western talk of women’s liberalization is nothing but a disguised form of exploitation of her body, degradation of her soul, and deprivation of her honour. Western society claims to have ‘uplifted’ women. On the contrary it has actually degraded them to the status of concubines, mistresses and society butterflies who are mere tools in the hands of pleasure seekers and sex marketeers, hidden behind the colourful screen of ‘art’ and ‘culture’.

United States of America is supposed to be one of the most advanced countries of the world. It also has one of the highest rates of rape in any country in the world. According to a FBI report, in the year 1990, every day on an average 1756 cases of rape were committed in U.S.A alone. Later another report said that on an average everyday 1900 cases of rapes are committed in USA. The year was not mentioned. May be it was 1992 or 1993. May be the Americans got ‘bolder’ in the following years.

Consider a scenario where the Islamic hijab is followed in America. Whenever a man looks at a woman and any brazen or unashamed thought comes to his mind, he lowers his gaze. Every woman wears the Islamic hijab, that is the complete body is covered except the face and the hands upto the wrist. After this if any man commits rape he is given capital punishment. I ask you, in such a scenario, will the rate of rape in America increase, will it remain the same, or will it decrease?


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹ

இந்தக் கட்டுரையை எழுதியவரும் அதை பெரிதாக நினைத்து மொழி பெயர்த்து மற்றவர்களுக்கும் பகிர வேண்டும் என்று முயற்சித்தவரும் எந்த நோக்கமும் அற்றவர்கள் என்று நினைக்கிறேன் அல்லது குறித்த நாட்டுக்கு எதிரான பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட வேண்டியவர்களாக இருக்கலாம் அல்லது எல்லா நாடுகளிலும் ஸவுதிக்கு எதிரான உணர்வுகளை உருவாக்குவதன் மூலம் லிபியா, ஸிரியா, யெமன், ஈராக், போன்ற நாடுகளைப் போன்ற ஒரு நிலை இந்நாட்டுக்கும் ஏற்பட வேண்டும் என்று பிரார்த்திப்பவராக இருக்கலாம். எதற்கும் பத்திரை தர்மம் என்ற பெயரில் வரும் கட்டுரைகள் எல்லாவற்றையும் பரப்புவதை நோக்கமாகக் கொண்டிராமல் கட்டுரையின் கருத்து அதன் நோக்கம் விளைவுகள் என்பவற்றை அவதானித்து பரப்புவது சமூக ரீதியான கருத்தோட்டடங்களில் மாற்றங்களை ஏற்படுத்தும் ஊடகங்களுக்கு அவசியமானதாகும்.

Post a Comment