Header Ads



அர்தோகனின் வெற்றி, முஸ்லிம் உம்மாவின் வெற்றியா...?

எஸ்.எம்.மஸாஹிம் (இஸ்லாஹி)

துருக்கியில் இடப்பெற்ற ஜனாதிபதித்துவ மற்றும் பாராளுமன்ற தேர்தல்களில் ரஜப் தையூப் அர்தோகன் மற்றும் அவர் தலைமை தாங்கும் கட்சியான நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சியின்  கூட்டணி பெற்றுக்கொணட வெற்றி  உள்நாட்டில் அதன் எதிர்கட்சிகளுக்கு எதிராக பெற்றுக்கொண்ட மகத்தான வெற்றியாக மட்டுமல்லாமல் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பிராந்திய மற்றும் பூகோள அரசியல் தளங்களில் பெற்றுக்கொண்ட இரட்டை வரலாற்று வெற்றியாக வர்ணிக்கப்படுகின்றது .

துருக்கியில் இடப்பெற்ற ஜனாதிபதித்துவ  தேர்தலில் ரஜப் தையூப் அர்தோகன் 52.3 வீத வாக்குகளை பெற்று  துருக்கியின் முதல் உத்தியோகபூர்வ நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பெரும்பான்மை மக்களினால் தேர்வு செய்யப்பட்டுள்ளார் இதேவேளை அர்தோகனை தலைவராக கொண்ட நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சி மற்றும் அதன் கூட்டணி  600 ஆசனங்களை கொண்ட பாராளுமன்றத்தில் 344 இடங்களை கைப்பற்றியுள்ளது இதன் மூலம் AK கட்சி துருக்கியில் பாரிய வரலாற்று வெற்றியை ஈட்டியுள்ளது என வர்ணிக்கப்படுகின்றது .

கடந்த ஏப்ரல் மாதம் 2017 ஆம் ஆண்டு துருக்கியின் யாப்பை மாற்றுவதற்கான மக்களின் அனுமதியை கோரும் மக்கள் கருத்துக்கணிப்பில் அர்தோகன்  வெற்றிபெற்றதை தொடர்ந்து துருக்கியின் பாராளுமன்ற நிர்வாக முறைக்கு பதிலாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதித்துவ நிர்வாக  முறை யாப்பில் அறிமுகப்படுத்தப்பட்டது   அதை தொடர்ந்து இம்மாதம் கடந்த 24 ஆம் திகதி துருக்கியில் முதல் முறையாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபத்திக்கான தேர்தல் இடம்பெற்றது இந்த தேர்தலில் எதிராணிகளின் ஐந்து வேட்பாளர்களையும் படுதோல்வியடைய செய்த அர்தோகான்  சுமார் 52.3 வீத வாக்குகளை பெற்று மகத்தான  வெற்றி பெற்றார் 

இதன் மூலமாக பிரதமரை தலைவராக கொண்ட பாராளுமன்ற நிர்வாக முறைக்கு பதிலாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தலைவராக கொண்ட அமைச்சரவை நாட்டின் அரசியல் நிர்வாகத்தை பொறுப்பேற்கும் , உருவாகும் இந்த புதிய அரசாங்கத்தினதும் ,அரசினதும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட தலைவராக அர்தோகான்  உருவெடுப்பார் இவரே துருக்கியின்  முப்படையை  தனது முழு கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருப்பவராகவும் , நாட்டின் வரவு செலவு திட்டத்தை கட்டுப்படுத்துபவராகவும்  நாட்டின் உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரம் கொண்டவராகவும் , பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் பெற்றவராகவும் , விளங்குவார்  , இதேவேளை துருக்கியின் உள்நாட்டு ,வெளிநாட்டு கொள்கை வரைபும் இவரின் செறிவான செல்வாகிற்கு உட்பட்டதாகவே விளங்கும் பாராளுமன்றத்திலும் இவரின் கட்சி மற்றும் கூட்டணி பெரும்பான்மையை பெற்றுக்கொண்டதன் மூலமாக அங்கும்  இவரின் செல்வாக்கு செறிவு மிக்கதாகவே இருக்கப்போகிறது , முஸ்தபான கமால் அதாதுர்க் உருவாக்கிய மொடன் துருக்கி 1923 க்கு பின்னர் சந்திக்கப்போகும் அதிகூடிய அதிகாரம் கொண்ட அரச தலைவராக இவர் இருக்கப்போகிறார் என இவர் பெறப்போகும் அதிகூடிய அதிகாரத்துக்கு சாதகமாகவும் ,பாதகமாகவும் கருத்துக்கள்   முன்வைக்கப்பட்டுவருகின்றது, ஒரு சாரார் அர்தோகான்  துருக்கியை சர்வாதிகாரம் நோக்கி உறுதியாக நகர்த்திச்செல்கிறார் என்று கூற மற்றுமொரு சாரார் இவர்  துருக்கியின் அரசியல் ,பொருளாதார ,சமூக மற்றும் பாதுகாப்பு மீதான   ''நிச்சயமற்றதன்மையை'' வெற்றிகொள்ள போராடிவருகிறார் என கூறுகின்றனர்  

மறுபுறத்தில் இஸ்லாமிய உலகு பெற்றுக்கொண்ட வெற்றியாக இவரின் வெற்றி வர்ணிக்கப்படுகின்றது பல்வேறு இஸ்லாமிய அறிஞர்களும், அமைப்புக்களும்  வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதுடன் அவரின் வெற்றியை துருக்கியின் வெற்றியாக மட்டும் பார்க்காமல் ஒட்டுமொத்த முஸ்லிம் உம்மாவின் வெற்றியாகவும் வர்ணித்துள்ளன குறிப்பாக யூஸுப் அல் கர்ழாவி  தலைமையிலான சர்வதேச இஸ்லாமிய அறிஞர்களுக்கான ஒன்றியம் துருக்கியின் வெற்றி எமது  இஸ்லாமிய உம்மாவின்  ஒரு வெற்றியாகும் என வர்ணித்துள்ளது . 

இதேவேளை மலேஷியாவில் முன்னாள் துணை பிரதமரும் தற்போதைய  அரசாங்கத்தின் முக்கிய அரசியல் பிரமுகருமான   அன்வர் இப்ராஹிம் அர்தோகானின் வெற்றியை இஸ்லாமிய உலகின் வெற்றி என வர்ணித்துள்ளார்  , 


இதேவேளை இடம்பெற்ற தேர்தல்களில் நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சிக்கு எதிராக உள்நாட்டு சக்திகளுக்கு மேலதிகமாக பிராந்திய மற்றும் சர்வதேச சக்திகளினால் வலுவூட்டப்பட்டதாக நம்பப்படும் எதிர்க்கட்சிகள் களத்தில் கடுமையாக உழைத்தபோதும் அந்த எதிர்கட்சிகளினால் அர்தோகானை அல்லது நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சியை அல்லது அதன் கூட்டணியை தேற்கடிக்க முடியாது போயுள்ளது . அர்தோகானும் அவரின்  கட்சியும் இம்முறை தோல்வியை சந்திப்பர் ,  இந்த தேர்தல்களில் துருக்கி  இளம் வாக்காளர்களின் ஆதரவை அர்தோகான்  இழந்துவிடுவார்போன்ற  பிரசாரம் தீவிரமாக முடுக்கிவிடப்பட்டிருந்த நிலையில்  அர்தோகானும்  அவரின் கட்சியும் மகத்தான வெற்றியை பெற்றுள்ளன . இது பற்றி பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றது 
ஒரு சாரார்  எதிர்கட்சிகளுக்கு துருக்கி ஊடகங்களில் போதுமான இடம் வழங்கப்படவில்லை குர்திஸ் தேசியவாத பின்புலம் கொண்ட கட்சிகளும் இன்னும் சில எதிர்கட்சிகளும் ஊடக அடக்குமுறையையும் ,அரசாங்க பாதுகாப்பு தரப்பினரின் நெருக்கடிகளை எதிர்கொண்டனர் மறுபுறத்தில் அரச ஊடகங்கள் முழுவதும் அர்தோகனுக்கும் அவரின் கட்சிக்கும் சார்பாக செயல்பட்டன மேலும்  அர்தோகானும் அவரின் கட்சியினரும் மக்களிடம் இஸ்லாமிய உணவையும் ,உஸ்மானிய சாம்ராஜிய கனவையும்   தூண்டி நலன்சார் அரசியல் சிந்தனைக்கு எதிராக அவர்களை சிந்திக்க தூண்டினர்,  போன்ற குற்றச்சாட்டுக்கள்  எதிர்க்கட்சியின் தேல்விக்கு காரணங்களாக சொல்லப்படுகிறது ஆனால் அவை அரசியல் கோணத்தில் அர்தோகனின் சாதனைகளுக்கு முன்னாள்   மிக சிறிய தாக்கம் கொண்டதாகவே பொதுவாக பல அரசியல் ஆய்வாளர்களால் பார்க்கப்படுகின்றது.

இந்த வெற்றியை பற்றி கூறும் பைசல் காஸிம் போன்ற  அரபுலக அரசியல் ஊடகவியலாளர்கள் இது அர்தோகனின் அரசியல் சாணக்கியத்துக்கும் அவரின் அரசியல், பொருளாதார சாதனைகளுக்கு  கிடைத்த வெற்றி என வர்ணிக்கின்றனர். 

மற்றும் சிலர் இந்த வெற்றி எதிர்கட்சியினரின் பலவீனத்தால் ஏட்பட்டுள்ளது , துருக்கி எதிர்க்கட்சியினர் 16 ஆண்டுகள் துருக்கி அரசியலில் அதிகாரம்  செலுத்தும் அர்தோகனை வீழ்த்துவதில் கருத்தியல் ரீதியாக ஒன்றுபட்டாலும்    நடத்தை  ரீதியாக தமக்குள் முறையாக ஒன்றிணைய வில்லை,  கவர்ச்சிகரமான ஒரு அரசியல் ஆளுமையை  வேட்பாளராக முன்வைக்க தவறியுள்ளனர் என தெரிவிக்கின்றனர் ஆனால் இதற்கு பதிலளிக்கும் பலரும் சிறந்த ஆளுமைகளை அவர்களின்  சாதனைகளும் , சாணக்கியமுமே உருவாக்க முடியும் அப்படியான அரசியல் ஆளுமை கொண்டவர்தான் அர்தோகன் என கூறுகின்றனர் .

அர்தோகனின்  வெற்றி பற்றியும் அவரின் எதிர்கால அரசியல் நகர்வுகள் பற்றியும் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றபோதிலும்  , 90 வீதமான துருக்கிய வாக்காளர்களுக்கும் அதிகமானவர்கள் வாக்களித்துள்ள இந்த தேர்தலில்   பெரும்பாலானவர்கள் அர்தோகனையும் AK கட்சியையும் தமது பெரும்பான்மை வாக்குகளினால் மீண்டும் தெரிவு செய்துள்ளதன் மூலமாக துருக்கி மக்கள் அரசியல் அதிகாரத்தை அவரிடம் வழங்குவதையே விருப்புகின்றார்கள் என்பதுதான் இன்றைய அரசியல் யதார்த்தமாகும்.
அரசியல் கோணத்தில் இவரின் வெற்றிக்கு பல்வேறு காரணிகள் தாக்கம் செலுத்துவதை மறுக்க முடியாது அந்த தாக்கம் செலுத்தும் காரணிகளை அர்தோகன்    சரியாக விளங்கிக்கொண்டவராக துருக்கியை வழிநடத்துவதில்தான்  அவரினதும், கட்சியினதும் தொடர் வெற்றி தங்கியிருக்கின்றது , அதிலும் குறிப்பாக இஸ்லாமிய அடைப்படை விழிமியங்களை விட்டுக்கொடுக்காத மாற்றங்களையும்  பொருளாதார அபிவிருத்தியையும் சுமந்து செல்லவும், சவால்களை துணிவாக எதிர்கொள்ளவும் இளம் முஸ்லிம் சமூகத்திடம் இருக்கும் எதிர்பார்ப்பு முக்கிய ஒன்றாக அடையாளப்படுத்த முடியும் சில முக்கிய  துருக்கி செயல்பாட்டாளர்களுடன்  பேசும்போது அர்தோகன்  தொடர்பில் அவர்கள் கொண்டிருக்கும் எதிர்பார்ப்பு இதை தெளிவாக உணர்த்துவதாக உள்ளது. 

இறுதியாக மலேஷியாவில் முக்கிய அரசியல் பிரமுகரும் கல்வியாளருமான அன்வர் இப்ராஹிம் அர்தோகனுக்கு எழுதியுள்ள வெற்றி வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ள கருத்துக்கள் துருக்கிய மக்களிடம் மட்டுமல்ல  பொதுவாக முஸ்லிம் உம்மா மத்தியில் அர்தோகன்  பற்றி இருக்கும் எதிர்பார்ப்பை தெளிவாக காட்டுவதாக  உள்ளது "I am also convinced that your victory is also a victory for the Islamic world in portraying a modern and progressive face of Islam that embraces change while not compromising on the values of our faith and the fundamental teachings of the Holy Prophet," 

மறுபுறத்தில் இந்த  வெற்றி  மத்திய கிழக்கு பிராந்தியத்தில் சில முஸ்லிம்  அரசியல்  தலைவர்களுக்கு மீண்டும்  பெரும் தலைவழியை  ஏற்றபடுத்தியுள்ளது  , மேற்குநாடுகளின் தலைவர்கள் பலருக்கு  இந்த வெற்றி தமது நலன்சார் எதிர்பார்ப்புக்கள்  மீதான தடைகளை அதிகரிக்கும் ஒன்றாக இருக்கும் என கருதுவதாக கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றது  இந்த விடயங்களை உண்மையானதாக, யதார்தமானதாக எடுத்துக்கொண்டால்  அர்தோகான்  இலட்சியத்துக்கும் , நடைமுறைக்கும்  மத்தியில்   பயணிக்க வேண்டிய தூரம் நெடுந்தூரமாகத்தான் இருக்கும் என எதிர்பார்க்கலாம் 

13 comments:

  1. Dear sampthan tna and Gtx, இந்த பயங்கரவாதி துருக்கியில் துப்பாக்கி காட்டி வெற்றி பெற்று விட்டானே?

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அலைக்கும் மஷாஹிம் அவர்களே!
    துருக்கி ரோமர்களிடம் பறிபோகும் என்று ஹதீஸ் மூலம் ஒரு தெளிவு எனக்கு கிடைத்துள்ளது, ஆகவே எர்துகானின் வெற்றி முஸ்லிம்களுக்கான வெற்றியாக இருக்காது என்று நினைக்கிறேன் (ரசூலுல்லாஹ் கூறினார்கள் "மதீனாவில் இருந்து ஒரு படை சென்று இஸ்டாண்பூளை ரோமர்களிடமிருந்து மீட்டெடுக்கும்") என்று கட்டுரையாளர் இந்த ஹதீஸை முன்னிறுத்தி எனக்கு ஒரு தெளிவை தருவார் என்று நினைக்கிறேன்

    ReplyDelete
  3. A one and only great modren days Islamic leader.

    ReplyDelete
  4. Abu Zalha..
    Go and check validity of this fabrication of Hadith ..
    It is a wahabi trick....
    Do you take Qur'an or wahabi fabrication..
    غلبت الروم..
    What do you..
    QURAN GIVES A GOOD TIDING..
    WAHABI.
    SALAFI AGENTS..
    CREATED THIER ISLAM TO DIVIDE MUSLIM WORLD ..

    ReplyDelete
  5. ரஸூலுல்லாஹ்வின் முன் அறிவிப்பு இறுதி நாள் நெருங்கும்போது நடக்க இருப்பது பற்றிக் குறிப்பிடுகிறது.  அப்போது இஸ்தான்புல் ரோமரின் கைகளுக்குப் போய் இமாம் மஹ்தி (அலை) அவர்களின் படை அதனை அவர்களிடம் இருந்து மீட்டெடுக்கும்.

    அதற்கிடையில் ஏராளமானவைகள் நடக்க இருக்கின்றன.  பதின்மூன்று நூற்றாண்டுகள்  தொடர்ச்சியாக இருந்த இஸ்லாமிய கிலாபா, இறுதியாக 1922ல் துருக்கியின் இஸ்தான்புலைத் தலைநகரமாகக் கொண்டிருந்த காலத்திலேயே எதிரிகளின் சதியால் -இந்த ஒரு நூற்றாண்டு காலம் மாத்திரம்- இல்லாமலாக்கப்பட்டுள்ளது.

    அதனை மீள ஸ்தாபிப்பதிலேயே முஸ்லிம்களின் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி தங்கியுள்ளது.  அதற்கான  நடைமுறை நிபந்தனையாகிய இறை நம்பிக்கைக்கான -ஈமானுக்கான- உழைப்பு உலகின் அனைத்துக் பாகங்களிலும் அர்ப்பணத்தோடு நடந்துகொண்டிருக்கின்றது. 

    1979ல் ஈரானில் நடந்த இஸ்லாமியப் புரட்சி இந்த உழைப்பின் வேகத்துக்கு ஓர் பெரும் உந்துதலானது.

    அதற்கு அடுத்ததான ஓர் பெரும் எதிர்பார்ப்பையும் உற்சாகத்தையும், அண்மைய தேர்தலில் துருக்கி சகோதரர்கள் தம் தலைவர் தய்யிப் எர்துகானின் வெற்றியூடாக உலக முஸ்லிம்களுக்கு வழங்கி உள்ளார்கள்.
    இவ்வெற்றி உலக முஸ்லிம் உம்மாவின் வெற்றியாகவே பார்க்கப்படுகிறது.

    இதில் முஸ்லிம்களுக்கு மிக நம்பிக்கையூட்டும் நற்செய்தி என்னவென்றால், புரட்சிகரமான மக்களைக்கொண்ட ஈரான், துருக்கி ஆகிய இவ்விரு சகோதர நாடுகளும்  தம்மிடையே உள்ள அரசியல் வேறுபாடுகளை மறந்து ஒற்றுமையுடன் சிறந்த நட்பையும் பேணுவதாகும்.

    பெறுமதியான இவ்விணைவின் மூலம் ஏற்கனவே நாம் இழந்துள்ள இஸ்லாமிய கிலாபாவை மீண்டும் நம் காலத்திலேயே மீளப் பெறுவோம் என்ற நம்பிக்கையை  இது நமக்கு ஊட்டுகிறது.

    ReplyDelete
  6. எர்துகானின் வெற்றி, எதிர்பார்த்ததுதான்.

    அவரின் ஆட்சி காலத்தில், துருக்கியின் பொருளாதாரம் பாரிய வளர்ச்சி கண்டிருக்கிறது.

    துருக்கியின் இராணுவமும் வளர்ச்சி கண்டுள்ளது.

    முஸ்லீம் நாடுகளுக்கிடையில் நடைபெறும் எந்தவொரு பிரச்சனையிலும் மூக்கை நுழைக்காமல், நடுநிலையாக செயல்படும் நாடு, துருக்கி.

    எகிப்தில் முர்சிக்கு ஏற்பட்ட நிலை, எர்துவானுக்கும் ஏற்பட வேண்டும் என கிறிஸ்தவ பயங்கவாத நாடுகள் ஏக்கத்துடன் காத்திருக்கின்றன.

    ReplyDelete
  7. abu zalha.. நீங்கள் பார்த்த அந்த ஹதீஸ் பொய்யான ஒன்று .. துருக்கி நவீன இராணுவ வல்லமையில் உள்ளது அதன் விமானப்படை தரைப்படை கடற்ப்படைகளின் நவீன வல்லமை ரோமர்களின் பல தேசத்தை துருக்கியின் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் அளைவுக்கு உள்ளது .. இமாம் மஹ்தி வருகை என்பது எல்லாம் ஷியா காபிர்களின் பொய்யான இட்டுக் கட்டப்பட்ட நூல்களில் உள்ளவை அப்படி ஒரு இமாம் இந்த யுக முடியும் வரை வரமாட்டார் மேலும் கண்டவர்கள் எழுதிய போலி ஹதீஸ்கள் என்ற நூல்களை நம்பி மக்களை ஏமாற்ற வேண்டாம்

    ReplyDelete
  8. Hi Aja, you are suffering from islamophobia. There's a Tamil proverb (thinai vithaithavan thinai aruppaan {erdogan}, vinai vithaithavan vinai aruppaan {prabakaran, Osama bin Laden, Hitler, Mussolini, ISIS}).

    ReplyDelete
  9. குன்ஆன் சுன்னா அடிப்படையில் யாரு அதிகாரத்திற்கு வந்தாலும் நாம் அவர்களின் பின்னால் இருப்போம்.

    சுன்னா இன்றிய கிழாபமோ ...குர்ஆன் பின்பற்றப்படாத சாம்ராஜ்யமோ அமைவதில் எந்தப் பயனுமில்லை.

    இன்றைய நிலையில் தூய்மையான இஸ்லாமிய சிந்தனையுடய தலைமையே உலகின் தேவையாகவுள்ளது.

    அல்லாஹ் அருள் புரிவானாக
    ..

    ReplyDelete
  10. @Nazmi, 100% Agreed with you.

    Also, your list should include Saddam, Gaddafi, Edi ameen......

    ReplyDelete
  11. @ Brothers: Abu Zalha, Muhammad Jawzan and Atteeq Abu

    Narrated AbuSa'id al-Khudri:

    The Prophet (ﷺ) said: The Mahdi will be of my stock, and will have a broad forehead a prominent nose. He will fill the earth will equity and justice as it was filled with oppression and tyranny, and he will rule for seven years.

    حَدَّثَنَا سَهْلُ بْنُ تَمَّامِ بْنِ بَزِيعٍ، حَدَّثَنَا عِمْرَانُ الْقَطَّانُ، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي نَضْرَةَ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ الْمَهْدِيُّ مِنِّي أَجْلَى الْجَبْهَةِ أَقْنَى الأَنْفِ يَمْلأُ الأَرْضَ قِسْطًا وَعَدْلاً كَمَا مُلِئَتْ جَوْرًا وَظُلْمًا يَمْلِكُ سَبْعَ سِنِينَ ‏"‏ ‏.‏

    :  (Al-Albani)  حسن   (الألباني)     :

     : Sunan Abi Dawud 4285In-book reference : Book 38, Hadith 7English translation : Book 37, Hadith 4272

    Report Error | Share

    Narrated Umm Salamah, Ummul Mu'minin:

    The Prophet (ﷺ) said: Disagreement will occur at the death of a caliph and a man of the people of Medina will come flying forth to Mecca. Some of the people of Mecca will come to him, bring him out against his will and swear allegiance to him between the Corner and the Maqam. An expeditionary force will then be sent against him from Syria but will be swallowed up in the desert between Mecca and Medina. When the people see that, the eminent saints of Syria and the best people of Iraq will come to him and swear allegiance to him between the Corner and the Maqam.

    Then there will arise a man of Quraysh whose maternal uncles belong to Kalb and send against them an expeditionary force which will be overcome by them, and that is the expedition of Kalb. Disappointed will be the one who does not receive the booty of Kalb. He will divide the property, and will govern the people by the Sunnah of their Prophet (ﷺ) and establish Islam on Earth. He will remain seven years, then die, and the Muslims will pray over him.

    Abu Dawud said: Some transmitted from Hisham "nine years" and some "seven years".

    حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ، حَدَّثَنِي أَبِي، عَنْ قَتَادَةَ، عَنْ صَالِحٍ أَبِي الْخَلِيلِ، عَنْ صَاحِبٍ، لَهُ عَنْ أُمِّ سَلَمَةَ، زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏"‏ يَكُونُ اخْتِلاَفٌ عِنْدَ مَوْتِ خَلِيفَةٍ فَيَخْرُجُ رَجُلٌ مِنْ أَهْلِ الْمَدِينَةِ هَارِبًا إِلَى مَكَّةَ فَيَأْتِيهِ نَاسٌ مِنْ أَهْلِ مَكَّةَ فَيُخْرِجُونَهُ وَهُوَ كَارِهٌ فَيُبَايِعُونَهُ بَيْنَ الرُّكْنِ وَالْمَقَامِ وَيُبْعَثُ إِلَيْهِ بَعْثٌ مِنَ الشَّامِ فَيُخْسَفُ بِهِمْ بِالْبَيْدَاءِ بَيْنَ مَكَّةَ وَالْمَدِينَةِ فَإِذَا رَأَى النَّاسُ ذَلِكَ أَتَاهُ أَبْدَالُ الشَّامِ وَعَصَائِبُ أَهْلِ الْعِرَاقِ فَيُبَايِعُونَهُ بَيْنَ الرُّكْنِ وَالْمَقَامِ ثُمَّ يَنْشَأُ رَجُلٌ مِنْ قُرَيْشٍ أَخْوَالُهُ كَلْبٌ فَيَبْعَثُ إِلَيْهِمْ بَعْثًا فَيَظْهَرُونَ عَلَيْهِمْ وَذَلِكَ بَعْثُ كَلْبٍ وَالْخَيْبَةُ لِمَنْ لَمْ يَشْهَدْ غَنِيمَةَ كَلْبٍ فَيَقْسِمُ الْمَالَ وَيَعْمَلُ فِي النَّاسِ بِسُنَّةِ نَبِيِّهِمْ صلى الله عليه وسلم وَيُلْقِي الإِسْلاَمُ بِجِرَانِهِ إِلَى الأَرْضِ فَيَلْبَثُ سَبْعَ سِنِينَ ثُمَّ يُتَوَفَّى وَيُصَلِّي عَلَيْهِ الْمُسْلِمُونَ ‏"‏ ‏.‏ قَالَ أَبُو دَاوُدَ قَالَ بَعْضُهُمْ عَنْ هِشَامٍ ‏"‏ تِسْعَ سِنِينَ ‏"‏ ‏.‏ وَقَالَ بَعْضُهُمْ ‏"‏ سَبْعَ سِنِينَ ‏"‏ ‏.‏

    ReplyDelete
  12. This comment has been removed by the author.

    ReplyDelete

Powered by Blogger.