Header Ads



யாழ்ப்பாணத்தில் குள்ள மனிதர்கள் - வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு முறைப்பாடு

யாழ்ப்பாணம் - அராலி பகுதிகளில் மரத்திற்கு மரம் தாவி திரிந்து மக்களை பயமுறுத்தும் குள்ள மனிதர்கள் தொடர்பில் தகவல்கள் வெளிவந்துள்ளன.

அராலி - ஐயனார் ஆலயத்தை சூழவுள்ள பகுதிகளில் கடந்த சில வாரங்களாக இந்த குள்ளர்களின் நடமாட்டம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த குள்ள மனிதர்கள் மரத்திற்கு மரம் தாவி திரிந்து பெண்கள், குழந்தைகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்துவதுடன், வீடுகள் மீது கல் வீச்சு தாக்குதலிலும் ஈடுபடுவதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த குள்ளர்கள் வீட்டு கூரைகள் மீது தாவி திரிவதுடன், மக்கள் பயத்தில் கத்தும் சத்தம் கேட்டதும், கூரையில் இருந்து மதிலுக்கு பாய்ந்து மரங்களுக்கு மரங்கள் தாவி பாய்ந்து அராலித்துறை நோக்கி ஓடுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், குள்ளர்களின் கைகளில் கைக் கோடரி காணப்படுவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இந்த சம்பவங்கள் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, அண்மைக்காலமாக இலங்கையின் பல பகுதிகளில் கிறீஸ் பூதத்தின் அச்சுறுத்தல் காரணமாக பெண்கள் பெரிதும் அச்சமடைந்துள்ளனர்.

வாதுவ, பொஹந்தரமுல்ல, பொத்துபிட்டிய, கம்மனயாவத்தை மற்றும் கொலபத ஆகிய பிரதேசங்களில், கறுப்பு கட்டை காற்சட்டை மாத்திரம் அணிந்து இளம் பெண்களை கட்டிப்பிடிக்கும் சம்பவங்கள் இடம்பெறுகின்றது.

அந்த வகையில் தற்போது யாழ். அராலி பகுதியில் குள்ள மனிதர்கள் தொடர்பில் தகவல்கள் வெளிவந்து மக்களை மேலும் பீதியடையச் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.