Header Ads



வடகிழக்கில் புலிகளின், கை ஓங்கவேண்டும் - விஜயகலாவின் ஆபத்தான பேச்சு

வடகிழக்கு மாகாணங்களில் தமிழீழ விடுதலை புலிகளின் கைகள் ஓங்கினால்தான் தமிழ் மக்கள் நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் வழ முடியும் என்று இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதியின் மக்கள் சேவை திட்டத்தின் 8 ஆவது தேசிய நிகழ்ச்சி திட்டம் இன்று யாழ்ப்பாணத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதேபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

தலையால் நடந்தே ஜனாதிபதியை நாங்கள் தேர்வு செய்தோம். ஆனால் ஜனாதிபதி எங்களுக்கு என்ன செய்தார்? தமிழீழ விடுதலை புலிகள் காலத்தில் நாங்கள் எப்படியான வாழ்க்கை வாழ்ந்தோம் என்பது எங்கள் அனைவருக்குமே தெரியும். 

எனவே வடகிழக்கு மாகாணங்களில் மக்கள் நிம்மதியாக வாழவேண்டுமானால், எங்களுடைய பிள்ளைகள் நிம்மதியாக வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பவேண்டுமாக இருந்தால் தமிழீழ விடுதலை புலிகளின் கைகள் வடகிழக்கு மாகாணங்களில் ஓங்கவேண்டும். தமிழீழ விடுதலை புலிகளை வடகிழக்கு மாகாணங்களில் உருவாக்கவேண்டும். 

யாழ்ப்பாணம் சுழிபுரத்தில் பாடசாலை சிறுமி கொடூரமாக படுகொலை செய்யப்பட்டிருக்கின்றார். இதனை தடுப்பதற்கு இந்த அரசாங்கம் என்ன நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது? ஒன்றுமில்லை. சில காணிகளை மக்களிடம் மீளவும் கொடுத்ததை தவிர இந்த அரசாங்கம் ஒன்றுமே செய்யவில்லை. 

உள்நாட்டலுவல்கள் அமைச்சின் தகவலின் படி யாழ்.மாவட்டத்தில் மட்டும் சுமார் 30 ஆயிரம் பெண் தலமைத்துவ குடும்பங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. அவர்களுக்கு இந்த அரசாங்கம் என்ன செய்திருக்கிறது? 

வடகிழக்கில் 12 ஆயிரம் முன்னாள் போராளிகள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு கிடைக்கவேண்டிய உதவிகளையும் கூட வழங்கவேண்டாம் என ஜனாதிபதி தடுக்கிறார். மண்ணின் விடுதலைக்காக ஆயுதங்களை ஏந்தி போராடியதற்காக முன்னாள் போராளிகள் மனிதர்கள் இல்லையா? எதற்காக அவர் களுக்கு கிடைக்கவேண்டிய உதவிகளை கிடைக்கவிடாது ஜனாதிபதி தடுக்கிறார் என்றால் அவர் தெற்கில் வெற்றி பெறவேண்டும் என்பதற்காக மட்டுமே. 

அதேபோல் முன்னய ஆட்சியாளர்கள் வடகிழக்கு மக்களுக்கு என்ன செய்தார்களோ அதனயே ஒரு மாற்றமும் இல்லாமல் இந்த ஆட்சியாளர்களும் செய்து கொண்டிருக்கின்றார்கள் என்றார்.

13 comments:

  1. இராஜாங்க அமைச்சர் விஜயகலா பதவியேற்க முன்பு இலங்கை அரசியமைப்பின் யாப்புக்கு இணங்க நடந்து கொள்வதாகவும் அதனை என்ன காரணம் கொண்டும் மீறமாட்டேன் என சத்தியம் செய்துதான் பதவிக்கு நியமனம் செய்யப்பட்டு்ள்ளார். எனவே அந்த இலங்கை சட்டயாப்புக்கு இணங்க அரசாங்கம் இந்த இராஜாங்க அமைச்சர் விடயத்தில் சரியாக நடந்து கொள்ள வேண்டும்.

    ReplyDelete
  2. Very good speech made by you ever. Keep it up the good work. Government is the one supplying the drugs to NP by allowing the drug dealers.
    People aready realized the need of our warriors.

    ReplyDelete
  3. Wijeyakala - In future, you never get any Minister portfolio.

    ReplyDelete
  4. தானும் ஒரு சாதாரண அரசியல்வாதி என்பதை தற்போதய அரசியல் சூழ் நிலையில் நிருபித்துள்ளார் வரவிருக்கும் வடமாகாண சபை தேர்தல் ஒரு களம்.

    ReplyDelete
  5. UNP யை இனி யாராலும் காப்பாற்ற முடியாது

    ReplyDelete
  6. Immediately Government need to arrest this Lady.

    ReplyDelete
  7. this is election talk idiots. more will follow and act more braver than this woman and all will be quit after elections.

    ReplyDelete
  8. சிங்கள அமைச்சர்கள், அதிகாரிகளும் கலந்துகொண்ட கூட்டம் இது. அவர்களே சும்மா இருக்கும் போது இந்த முஸ்லிம் அடிப்படைவாதிகள் ஏன் கத்துகிறார்களாம்?

    ReplyDelete
  9. ஐனாதிபதியே கூறிவிட்டார் உடனடியாக இராஜாங்க அமைச்சர் மீது விசாரணையை ஆரம்பிக்குமாறு நீங்கள் ஏன் முஸ்லிம்கள் மீது திசை திருப்ப முயற்சிக்கின்றிர்கள் mr அஜன் அந்தோனிராஜ்

    ReplyDelete
  10. Mr Meera...you are right
    ..any way it’s Government’s internal matter. Who cares

    ReplyDelete
  11. இந்துத்துவ பாசிச புலி தமிழ் பயங்கரவாதம் இலங்கையின் தலை தூக்குகிறது உடனடியாக
    இவர்களை பயங்கரவாத சட்டத்தின் கீழ் கைது செய்து உடனடியாக விசாரணை செய்ய வேண்டும் ...
    Anusath போன்ற புலிச்சாயம் பாசிச அடிப்படைவாதிகளுக்கு இது கொஞ்சம் கசப்பாகத்தான் இருக்கும்..
    Anusath & ajan போன்ற அடிப்படைவாதிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும்...

    ReplyDelete
  12. Ifham போன்ற இலங்கையில் உள்ள ISIS முஸ்லிம் பயங்கரவாதிகளையும் உடனடியாக கைது செய்ய வேண்டும்....

    ReplyDelete

Powered by Blogger.