Header Ads



பொலிஸார் என்றால் சும்மாவா...? மனதை உருக்கும் சம்பவம்

பொலிஸார் ஒன்றிணைந்து அபராதம் செலுத்தி சந்தேக நபரொருவரை விடுதலை செய்த சம்பவம் காலி மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

காலி வந்துரம்ப பொலிஸ் அதிகாரிகளால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபர்களை கைது செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது குறித்த சந்தேக நபரை கைது செய்யும் பொருட்டு, அவர் கூலி வேலை செய்யுமிடத்திற்குச் சென்ற பொலிஸாரின் கண்ட சம்பவம் அவர்களை திகைக்க வைத்துள்ளது.

எனினும் குறித்த நபரின் குழந்தையும், கூலி வேலை செய்யுமிடத்தில் அமர்ந்திருப்பதை பொலிஸார் கண்டுள்ளனர்.

குறித்த நபரின் மனைவி புற்றுநோயால் இறந்து விட்டதால், குழந்தையை அவரது அம்மா பராமரித்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் அவரது தாயும் சுகவீனமுற்ற நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் குழந்தையைப் பராமரிக்க யாருமில்லாத நிலையில் குழந்தையுடன் கூலி வேலையில் ஈடுபட்டுள்ளார்.

இதனையடுத்து பொலிஸ் நிலையத்திற்கு குழந்தையுடன் குறித்த சந்தேக நபரும் சென்றுள்ளார்.

குறித்த நபர் பொலிஸாரிடம், சேர் எனக்கு அம்மா மட்டும்தான் இருக்கிறாங்க. அவங்களும் சுகவீனமுற்று மருத்துவமனையில் உள்ளார்கள். என்னிடம் அபராதம் செலுத்த பணம் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து வந்துரம்ப பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஒன்றிணைந்து, சேகரித்த 7500 ரூபா பணத்தை அபராதத்தொகையை செலுத்தியுள்ளனர்.

இதனையடுத்து, குறித்த நபர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

பல்வேறு குற்றச்சாட்டுக்களில் ஈடுபடும் பொலிஸ் அதிகாரிகளின் மத்தியில் வந்துரம்ப பொலிஸ் அதிகாரிகளின்செயல் அனைவரையும் வியக்க வைத்துள்ளது.

6 comments:

  1. Congratulations police officer

    ReplyDelete
  2. wow really great m proud off you all

    ReplyDelete
  3. So glad to hear some good news.

    ReplyDelete
  4. இலங்கையில் அதிகம் மனிதாபிமான செயல்களில் ஈடுபடுபவர்கள் சிங்கள, முஸ்லீம், மலையக தமிழர்கள் மட்டுமே!

    ReplyDelete
  5. இப்படி நல்ல மனித நேயமுள்ள அதிகாரிகள் எமது நாட்டுக்கு மேலும் கிடைக்க வேண்டும்

    இவ்வுலகத்தில் எவர்கள் நற்காரியங்களை அதிகப்படுத்தி கொள்கிறார்களோ அவர்களுக்கு இறைவனிடத்தில் நிச்சயம் மறுமையில் இவ்வுலக வாழ்க்கையின் செல்வத்தைவிட அழகிய செல்வங்கள் உண்டு ��

    ReplyDelete

Powered by Blogger.