Header Ads



யாழ்ப்பாணம் கோட்டையில் அரேபிய வணிகம், இடம்பெற்ற ஆதாரங்கள் கண்டுபிடிப்பு

16 ஆம் நூற்றாண்டில் போர்த்துக்கேயர் இலங்கைக்கு வருகை தருவதற்கு முன்னர் யாழ்ப்பாண கோட்டைப் பகுதியில் மக்கள் வாழ்ந்தமைக்கான ஆதாரங்கள் உள்ளதாக தொல்லியல்  பேராசிரியர் புஸ்பரெட்ணம் தெரிவித்தார்.

யாழ்ப்பாண கோட்டைப் பகுதியில் அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் தொல்பொருள் ஆய்வு நடவடிக்கையின் போதே மக்கள் அங்கு குடியிருந்து, வாணிக நடவடிக்கை இடம்பெற்றிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

யாழ்.மாவட்டத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சின்னங்கள் மற்றும் தொல்பொருள் ஆய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.

இதில் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு தொல்பொருள் ஆய்வாளர்கள் ஈடுபட்டனர். 

இந் நிலையில் இதற்கான ஊடகவியலாளர் மாநாடு இன்று யாழ்.பல்கலைக்கழக தொல்லியல் திணைக்கள விரிவுரை மண்டபத்தில் இடம்பெற்றது. 

இதன்‍போது கருத்து தெரிவிக்கையிலேயே பேராசிரியிர் புஸ்பரெட்ணம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணம் கோட்டைப் பகுதியில் 1800 அதாவது போர்த்துக்கீசர் இலங்கைக்கு வருகை தருவதற்கு முன்னரே யாழ்ப்பாணத்தில் மக்கள் குடியிருப்புக்கள் இருந்துள்ளன.

அதற்கான ஆதாரங்களை யாழ்.நகர ஆய்வு, யாழ்.நகரின் தோற்றம் போன்ற தொல்பொருள் ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. 

இருப்பினும் அங்கு கிடைக்கப்பெற்ற தொல்லியல் புராதான சின்னங்கள் என்பன போர்த்துக்கீசர் வருகையின் முன்னர் யாழ். கோட்டைப் பகுதியல் மக்கள் வாழந்துள்ளனர். 

அங்கு தமிழக நாணயங்கள் மீட்கப்பட்டுள்ளன. அரோபிய சீன வர்த்தக வணிகம் இடம்பெற்றமைக்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மேலும் சிதைவடைந்த கத்தோலிக்க தேவாலயாம், சிதைவடைந்த இந்து தேவாலயங்களுக்கான ஆதாரங்கள் சோழர் கால கட்டட ஆய்வு சிதைவுகள் என்பனவும் மீட்க்கப்பட்டுள்ளன. 

அக்காலத்தில் யாழ்ப்பாண கோட்டை அமைந்துள்ள பகுதி 'ஐந்துசார் வளவு' என்று அழைக்கப்பட்டுள்ளது.

யாழ். கோட்டை அமைந்துள்ள பகுதியில் கடல் மார்க்கமாக வணிகங்கள் மற்றும் மக்கள் குடியிருந்து வாழ்ந்தமையையடுத்தே போர்த்துக்கீசர் அப் பகுதியில் கோட்டை அமைப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. 

யாழ்ப்பாண நகரத்தின் தோற்றம் என்ற தொல்லியல் ஆய்வுக்குட்பட்டு யாழ்ப்பாண கோட்டைப் பகுதியில் 62 ஏக்கர் நிலப்பரப்பில் தொல்லியல் ஆய்வு நடவடிக்கைகளை முன்னெடுத்தோம். 

இதன்போது நாம்ப முடியாத ஆச்சரியமான வகையில் தொல்லியல் புராதான சின்னங்கள் மீட்கப்பட்டுள்ளன. 

இதில் உள்நாட்டு வெளிநாட்டு நாணயக் குற்றிகள், மட்பாண்டங்கள், இந்து ஆலய அழிவுகள், கல்வெட்டுக்கள் என்பன மீட்ககப்பட்டுள்ளது என்றார்.

4 comments:

  1. Well done ..
    Trish should prevail ..
    Many more research needed to say that arbs used slik tout to come to Sri Lanka long before colonial times

    ReplyDelete
  2. This is an important evidence for the history of Muslims in Sri Lanka. Several researches done into the history of Sri Lanka have proven beyond doubt that Muslims are one of the formost ethnic groups to have been living in Sri Lanka. World histories prove that muslim sailors had reached serveral parts of the World and discovered many countries. They not only reached the lands but also introduced and taught Medical Science, Philosaphy, Commerce, Methematics etc. to the World. This knowledge later led to many of key inventions which we enjoy today. At the same time, if we look at the hisyory of Sri Lanka, it's very obvious that the then kings had been medically served by many of muslim indeginous medical experts all over the period. The relationship the muslims had maintained with the then kings and rulers was very steady and close. The muslims in Sri Lanka have been loyal to the nation across the history.

    ReplyDelete
  3. அனுசாத் பொய் என்பார்

    ReplyDelete
  4. "....அவர்கள் பூமியில் பிரயாணம் செய்து (இவற்றைப்) பார்க்கவில்லையா?

    (அவ்வாறு பார்த்திருந்தால்) அவர்களுக்கு விளங்கிக் கொள்ளக்கூடிய உள்ளங்களும், (நல்லவற்றைச்) செவியேற்கும் காதுகளும் உண்டாகியிருக்கும்,

    நிச்சயமாக (புறக்) கண்கள் குருடாகவில்லை; எனினும், நெஞ்சுக்குள் இருக்கும் இதயங்கள் (அகக் கண்கள்) தாம் குருடாகின்றன...."

    (அல்குர்ஆன் : 22:46)
    www.tamililquran.com

    ReplyDelete

Powered by Blogger.