July 18, 2018

மரண தண்டனையை அமுல்படுத்த முடியாது - பேரா­சி­ரியர் பீரிஸ்

இலங்­கையில் மரண தண்­ட­னையை அமுல்­ப­டுத்த முடி­யாது. மரண தண்­டனை தொடர்பில்  சர்­வ­தேச உடன்­ப­டிக்­கை­களில் குறிப்­பிட்­டுள்ள விட­யங்கள் குறித்து  அர­சாங்கம் கவனம் செலுத்த வேண்டும். அத்­துடன்  விசேட நீதி­மன்­றத்தின் மூலம் நியாயம் நிலை­நாட்­டப்­ப­டப்­போ­வ­தில்லை. நீதி­மன்ற நட­வ­டிக்­கை­களை அர­சி­யல்­ம­யப்­ப­டுத்­து­வ­தற்கே இவ்­வா­றான நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தாக ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவின் தலை­வரும் முன்னாள் வெளி­வி­வ­கார அமைச்­ச­ரு­மான பேரா­சி­ரியர் ஜீ.எல். பீரிஸ் தெரி­வித்தார்.

கூட்டு எதிர்க்­கட்சி ஏற்­பா­டு­செய்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பு  கொழும்பு ஸ்ரீவ­ஜி­ரா­ஷர்ம பெளத்த நிலை­யத்தில் நடை­பெற்­றது. அதில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்தார். அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

மக்கள், வாழ்­வா­தா­ரத்தை கொண்டு நடத்த முடி­யாத நிலைக்குத் தள்­ளப்­பட்­டுள்­ளனர். அதனால் அர­சாங்­கத்­திற்கு மக்கள் கடும் எதிர்ப்­பினைத் தெரி­வித்து வரு­கின்­றனர். ஆகவே அதி­லி­ருந்து மக்­களின் கவ­னத்தை திசை­தி­ருப்­பு­வ­தற்குப் பல்­வேறு உபா­யங்­களை அர­சாங்கம் பிர­யோ­கித்து வரு­கி­றது. அதற்­காக ஒவ்­வொரு வாரமும் ஒவ்­வொரு விவ­கா­ரத்தை வெளிக்­கி­ளப்பி விடு­கி­றது. அதன் பின்னர் ஊட­கங்­களும் அதன்பால் ஈர்க்­கப்­பட்டு விடு­கின்­றன.

அதற்­கி­ணங்க தற்­போது போதைப்­பொருள் வர்த்­த­கத்தில் ஈடு­பட்ட குற்றம் நிரூ­பிக்­கப்­பட்டு மரண தண்­டணை விதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு தண்­ட­னையை அமுல்­ப­டுத்­து­வது குறித்து கவனம் திருப்­பப்­பட்­டுள்­ளது. எனினும் அத்­தண்­ட­னையை அமுல்­ப­டுத்த முடி­யாது. ஏனெனில் தண்­டனை விதிக்­கப்­பட்­ட­வர்கள் மேன்­மு­றை­யீடு செய்­துள்­ளனர். அத்­தீர்ப்பு வரும் வரையில் தண்­ட­னையை நிறை­வேற்ற முடி­யாது.  மரண தண்­டனை தொடர்பில் இலங்கை, சர்­வ­தேச உடன்­ப­டிக்­கை­களில் குறிப்­பிட்­டுள்ள விட­யங்கள் தொடர்­பிலும் அர­சாங்கம் கவனம் செலுத்த வேண்டும்.

பெற்றோல், டீசல் விலை அதி­க­ரிப்பு விட­யத்­திலும் அர­சாங்கம் மக்­களை ஏமாற்றும் வகையில் நட­வ­டிக்கை எடுக்­கி­றது. அமைச்­சர்கள் ஒவ்­வொரு கருத்தை தெரி­விக்­கின்­றனர். இரவில் விலையை அதி­க­ரித்­து­விட்டு காலையில் விலை குறைக்­கின்­றனர். அதன்­பின்னர் அமைச்­ச­ர­வையில் மீண்டும் விலை அதி­க­ரிப்­ப­தற்குத் தீர்­மா­னிக்­கின்­றனர்.


ஆகவே, அர­சாங்­கத்­திடம் திட்­ட­மி­டப்­பட்ட கொள்­கைத்­திட்­டமோ ஒழுங்­க­மைக்­கப்­பட்ட வேலைத்­திட்­டமோ இல்லை. இதனால் மக்கள் பாதிக்­கப்­ப­டு­கின்­றனர். இவ்­வா­றான  நிலையில் தற்­போது பேக்­கரி உற்­பத்­திகள், பஸ் கட்­டணம், ரயில்வே கட்­டணம், முச்­சக்­கர வண்டி கட்­டணம் என்­பன அதி­க­ரிக்­கப்­ப­ட­வுள்­ளன. இவை தொடர்பில் பேச்­சு­வார்த்தை நடத்­தாது வேறு விட­யங்கள் சம்­பந்­த­மா­கவே பேச்­சு­வார்த்தை நடத்­து­கின்­றனர்.

இவ்­வார பாரா­ளு­மன்ற அமர்வில் விசேட நீதி­மன்றம் குறித்து பேச்­சு­வார்த்தை நடத்­தலாம். இந்த நாட்­டி­லுள்ள நீதி­ப­திகள் தமது கட­மை­களை உரிய முறையில் மேற்­கொள்­கின்­றனர். அவர்கள் மனச்­சாட்­சிக்கு எதி­ராகப் பணி­யாற்­று­ப­வர்கள் அல்ல. அவ்­வா­றெனின் எதற்­காக விசேட நீதி­மன்றம் அமைக்க வேண்டும்?

உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் முடி­வு­களைப் பார்த்து அர­சாங்கம் அச்­சப்­பட்­டுள்­ளது. அதனால் எவ்­வா­றா­வது எதிர்த்­த­ரப்­பி­ன­ரையும் ராஜ­பக் ஷ குடும்­பத்­தையும் கட்­டுப்­ப­டுத்த வேண்டும். அவர்­களை சிறையில் அடைக்க வேண்டும். அதற்­கா­கவே விசேட நீதி­மன்­றத்தை அமைக்க முற்­ப­டுன்­றனர். அதனை அடைந்து கொள்­வ­தற்கு நிதிக்­குற்றப் புல­னாய்வுப் பிரிவை அர­சாங்கம் இயந்­தி­ர­மாகப் பயன்­ப­டுத்திக் கொள்­கி­றது. நிதிக் குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரிவு சட்­ட­வி­ரோ­த­மான நிறு­வ­ன­மாகும்.

இவ்­வா­றான வேலைத்­திட்­டங்­க­ளுக்கு எமது நீதி­ப­திகள் விருப்பம் இல்லை. ஆகவே விசேட நீதி­மன்­ற­மா­னது, நீதி­மன்றம் தொடர்பில் மக்கள் மத்­தியில் உள்ள நம்­பிக்­கையை சீர்­கு­லைக்கும் வேலைத்­திட்­ட­மாகும். நீதி­மன்ற நட­வ­டிக்­கை­களை அர­சி­யல்­ம­யப்­டுத்­து­வ­தற்கே இவ்­வா­றா­ன­வற்றை அர­சாங்கம் மேற்­கொள்­கி­றது.

விசேட நீதி­மன்­றத்தின் மூலம் நியாயம் நிலை­நாட்­டப்­படப் போவ­தில்லை. விசேட நீதி­மன்றம் மற்றும் விசேட ஆணைக்­கு­ழுக்கள் மூலம் அர­சியல் பழி­வாங்­க­லுக்கே வழி­கோலும். இதனை வர­லாறு நெடு­கிலும் அவ­தா­னிக்க முடியும். அத்­துடன் குறித்த விசேட நீதி­மன்­றத்தில் முதலில் எதனை விசா­ரணை செய்ய வேண்டும் என மக்­க­ளிடம் கேட்டால் 99 சத­வீ­தத்­தினர், மத்­திய வங்கி பிணை­முறி மோச­டியை விசா­ரிக்க வேண்டும் எனக்­கு­றிப்­பி­டுவர்.

பத­விக்­காலம் நிறை­வ­டைந்­துள்ள மாகாண சபைத் தேர்­தலை நடத்த வேண்டும். அத­லி­ருந்து அர­சாங்­கத்தால் விடு­பட முடி­யாது. தேர்தல் நடை­பெற்றால் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் கிடைத்த வெற்­றி­யையும் விட விசே­ட­மான வெற்றி ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­ன­விற்கு கிடைக்கும். மாகாண சபைத் தேர்தல் தொடர்­பான எல்லை நிர்­ணயக் குழுவின் அறிக்­கையை அமைச்சர் பைஸர் முஸ்தபா கடந்த மார்ச் மாதம் முதல் வாரத்தில் பாராளுமன்றத்திற்கு முன்வைத்தார்.

எனினும் அவ்வறிக்கை மீது இன்னும் விவாதம் நடத்தப்படவில்லை. பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டு ஒரு மாத காலத்திற்குள் அவ்வறிக்கை மீது விவாதம் நடத்தப்பட வேண்டும்  என சட்டமுள்ளது. எனினும் அதற்கான நடவடிக்கையை சபாநாயகர் எடுக்கவில்லை. இதேவேளை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 17ஆம் திகதி மாகாண சபைத் தேர்தலை நடத்தக்கோரி கூட்டு எதிர்க்கட்சி பாரிய பேரணி ஒன்று நடத்தவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

1 கருத்துரைகள்:

trying to protect drug dealers and ready to spoil the life of school children....

Post a Comment