July 13, 2018

தூக்கு த‌ண்ட‌னை நிறைவேற்றுவ‌தை, நாம் வ‌ர‌வேற்க‌வில்லை

இறைவ‌ன் ஒருவ‌னை ப‌ய‌ந்த‌, த‌ம‌து ஒவ்வொரு செய‌லுக்கும் இறைவ‌னிட‌ம் ப‌தில் சொல்ல‌ வேண்டும் என்ற‌ ப‌க்தியுண‌ர்வு கொண்ட‌ பொலிசாரும், நீதிப‌திமாரும், ஆட்சியாள‌ரும் உருவாகாம‌ல் தூக்குத்தண்ட‌னையை நிறைவேற்றுவ‌தை அமுல்ப‌டுத்துவ‌து அர‌சிய‌ல் ரீதியிலும் இன‌வாத‌ ரீதியிலும் துஷ்பிர‌யோக‌த்துக்கு வ‌ழி வ‌குக்கும் என‌ உல‌மா க‌ட்சி தெரிவித்துள்ள‌து.

இது ப‌ற்றி அக்க‌ட்சி இன்று (13) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ள‌தாவ‌து, 

ப‌ல‌ குற்ற‌வாளிக‌ள் த‌ப்பித்தாலும் ஒரு நிர‌ப‌ராதி த‌ண்டிக்க‌ப்ப‌ட‌க்கூடாது என்ப‌து நீதியின் அடிப்ப‌டை.

ந‌ம‌து நாட்டை பொறுத்த‌வ‌ரை நீதி அர‌சிய‌ல்வாதிக‌ளால் துஷ்பிர‌யோக‌ம் செய்ய‌ப்ப‌டுகிற‌து என்ப‌து நாட‌றிந்த‌ உண்மை.  ஒருவ‌ர் குற்ற‌ம் இழைத்த‌வ‌ர் என்றால் அவ‌ர் சிறைக்கு அனுப்ப‌ப்ப‌டும் அதேவேளை இன்னொருவ‌ர் குற்ற்வாளி என‌ தீர்ப்பு கூற‌ப்ப‌ட்ட‌ பின்  சிறைக்கு அனுப்ப‌ப்ப‌ட்டு அவ‌ர் அர‌சுக்கு அறிமுக‌மான‌வ‌ராக‌ இருந்தால் ஒரே வார‌த்தில் பிணை வ‌ழ‌ங்க‌ப்ப‌டும் நாட்டில் நாம் வாழ்கிறோம்.

அத்துட‌ன் நீதிம‌ன்ற‌ங்க‌ள் பெரும்பாலும் பொலிசாரின் வாக்குமூல‌த்துக்கே ம‌திப்ப‌ளிப்ப‌தால் ப‌ல‌ நிர‌ப‌ராதிக‌ள் உள்ளேயும் ப‌ல‌ குற்ற‌வாளிக‌ள் உள்ளேயும் உள்ள‌ன‌ர்.

விடுத‌லைப்புலிக‌ளுக்கு எதிரான‌ கிழ‌க்கு முஸ்லிம்க‌ள் சில‌ர் "புலிக‌ள்" என்ற‌ பொய் குற்ற‌ச்சாட்டில் ப‌ய‌ங்க‌ர‌வாத‌ த‌டுப்பு ச‌ட்ட‌த்தின் கீழ் சிறையில் அடைக்க‌ப்ப‌ட்ட‌தையும் க‌ண்டுள்ளோம்.

புலிக‌ளோடு தொட‌ர்பு வைத்த‌த‌ற்காய் ப‌ல‌ வ‌ருட‌ங்க‌ளாக‌ சிறையில் ப‌ல‌ த‌மிழ் இளைஞ‌ர்க‌ள் வாடும் போது புலிக‌ளின் போர்த்த‌ள‌ப‌திக‌ளாக‌ இருந்தோர் பிர‌தேச‌ ச‌பை, மாகாண‌ ச‌பை, ஏன் பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர்க‌ளாக‌வும் இருக்கும் நாட்டில் இருக்கிறோம்.

பெரும்பான்மையின‌ர் இன‌வாத‌ம் பேசினால் அவ‌ர்க‌ள் ப‌ற்றி க‌ண‌க்கெடுக்காம‌ல் அவ‌ர்க‌ளை எதிர்த்து ஒரு முஸ்லிம் இன‌வாத‌ம் பேசினால் அவ‌னை சிறையில் த‌ள்ளும் நாட்டில் வாழ்கிறோம்.

நீதிம‌ன்ற‌த்தின் அறிக்கையை ஒரு சாதார‌ண‌ குடிம‌க‌ன் கிழித்தால் அவ‌னுக்கு த‌ண்ட‌னை அதையே ஒரு பெரும்பான்மை ச‌ம‌ய‌த்த‌லைவ‌ர் செய்தால் அவ‌ருகெதிராக‌ எந்த‌ ச‌ட்ட‌ ந‌ட‌வ‌டிக்கையும் இல்லாத‌ நாட்டில் வாழ்கிறோம்.

போதைப்பொருள் க‌ட‌த்த‌ல், பாவித்த‌லுக்கெதிராக‌ க‌டுமையான‌ த‌ண்ட‌னை வேண்டும் என்ப‌தில் எம்மிட‌ம் மாற்று க‌ருத்து கிடையாது. ஆனால் தூக்குத்த‌ண்ட‌னை ச‌ட்ட‌ம் இந்த‌ நாடு போன்ற‌ நாடுக‌ளில் நிறைவேற்ற‌ப்ப‌டுவ‌தை அர‌சிய‌ல் துஷ்பிர‌யோக‌த்துக்கு வ‌ழி வ‌குக்கும். ஆட்சியாள‌ருக்கெதிரான‌ ஒருவ‌ரின் வீட்டில் இர‌வோடிர‌வாக‌ ஒரு கிலோ போதைப்பொருளை வைத்து விட்டு அவ‌ர் கைது செய்ய‌ப்ப‌ட்டு தூக்கிலிட‌ப்ப‌ட‌மாட்டார் என்ப‌த‌ற்கு யாராவ‌து உத்த‌ர‌வாத‌ம் த‌ருவாரா?

முஸ்லிம் த‌மிழ் ப‌குதிக‌ளில் இர‌வோடிர‌வாக‌ சிலைக‌ளை புதைத்து விட்டு விடிந்த‌தும் தொல் பொருள் கிடைத்த‌து என‌ வேலியிடும் அர‌ச‌ அதிகாரிக‌ள் உள்ள‌ன‌ர் என்ப‌தை யாரும் ம‌றுக்க‌ முடியுமா?

ஆக‌வே ந‌ம‌து நாட்டின் அர‌சிய‌ல், பொலிஸ், நீதி நிர்வாக‌ம் ஓரிறைவ‌னை ஏற்று அவ‌ன‌து நீதிக்கு க‌ட்டுப்ப‌டும் வ‌ரை தூக்கு த‌ண்ட‌னையை நிறைவேற்றுவ‌தை நாம் வ‌ர‌வேற்க‌வில்லை என‌ உல‌மா க‌ட்சி த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் தெரிவித்துள்ளார்.

7 கருத்துரைகள்:

தூக்கு தண்டணையை நாங்கள் வரவேற்க்கிறோம்

தூக்குத் தண்டனை பெறுவோர் பட்டியலில், அதிகமானோர் தமிழ், முஸ்லிம்கள்தான் இடம் பெறுவார்கள்.

சிங்களவர்கள் பெரும்பாலும் தப்பி விடுவார்கள்.

பெரும்பாலும் துஷ்பிரயோகம்தான்.

அப்படிப்பட்ட நீதிதான், இலங்கையில் இருக்கிறது.

பிற மதத்தினருக்கு தூக்குத் தண்டனை வழங்காவிட்டாலும் பரவாயில்லை.

இதில் ஈடுபடும், முஸ்லிம்களுக்கு தூக்குத் தண்டனை வழங்கினால், நிச்சயமாக முஸ்லீம் சமூகம் இதனை வரவேற்க வேண்டும்.

Welcome for this punishment

இன்னும்: அவர்கள் தவ்ராத்தையும், இன்ஜீலையும், இன்னும் தம் இறைவனிடத்திலிருந்து தங்களுக்கு இறக்கப்பட்டதையும், நிலைநாட்டியிருந்தால் அவர்கள் மேலே - (வானத்தில்) இருந்தும், தம் பாதங்களுக்கு அடியில் (பூமியில்) இருந்தும் (இன்பத்தைப்) புசித்திருப்பார்கள்; அவர்களில் சிலர்(தாம்) நேர்வழியுள்ள சமுதாயத்தினராய் இருக்கின்றனர், அவர்களில் பெரும்பாலோர் செய்யும் காரியங்கள் மிகக் கெட்டவையாகும்.
(அல்குர்ஆன் : 5:66)
www.tamililquran com

​வெற்றுப்பானையில் சுரண்டும் நண்டுக்கு எந்த இலக்கோ, இலட்சியமோ இல்லை. அதே போல்தான் உங்கள் போக்கு இருக்கின்றது. முன்பு பாராளுமன்றத்தில் உங்களைப்போன்று ஒருசில மூனுசிலிம்கள் இருந்தார்கள் வெற்றுப்பானையில் நண்டு சுரண்டுவது போல் தனக்குத் தெரிந்த பெரும்பாலும் தெரியாக விடயங்களில் வாய்போட்டு இறுதியில் வாங்கிக்கட்டுவது அவருடையசுபாவம். அவரைத்தான் இந்த உலமாக்கட்சியின் ஏக தலைவரும் செயல்படுகிறார்.உங்கள் சோலியைப்பார்த்துக்கொண்டு இருந்தால்அது முஸ்லிம் உம்மாவுக்குச் செய்யும் பெரும் சேவையாக இருக்கும்.

மிகத்தெளிவான ஆதாரங்களுடன், பல ஆண்டுகள் விசாரிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தல் மன்னர்களை தூக்கிலிடுவதற்கும் மௌலவி கொடுக்கும் வியாக்கியானங்களை சம்பந்தமில்லை, ஆதலால் தூக்கு தண்டனையை நிறைவேற்ற முடியும்.

ungada ariwo ariwthaan moulavi.....

Post a Comment