Header Ads



கோத்தபாயவின் அமைப்பில் பாசிசவாதம் - தமிழ், முஸ்லிம் வாக்குகளை பெறாமல் வெற்றி பெற முடியாது.

கோத்தபாய ராஜபக்ச தலைமையிலான வியத் மக அமைப்பு, பாசிசவாத கருத்துக்களை வெளியிடுவோரின் மேடை என அரசாங்கத்தில் இருந்து விலகிய ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 16 பேர் அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

வியத் மக மேடையில் உரையாற்றும் முன்னாள் இராணுவ அதிகாரிகளிடம் கவனமாக இருக்குமாறும் கோத்தபாய ராஜபக்சவுக்கு, டிலான் பெரேரா ஆலோசனை வழங்கியுள்ளார்.

ரியர் அத்மிரல் சரத் வீரசேகர, மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன போன்றோர் மேடையில் வெளியிடும் பாசிசவாத ரீதியிலான கருத்துக்கள் மூலம், தமிழ், முஸ்லிம் மக்களை கவர முடியாது.

கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டால், தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகளை பெறாமல் வெற்றி பெற முடியாது.

அத்துடன் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிடம் இருக்கும் வாக்கு வங்கி போதுமானதல்ல எனவும் டிலான் பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் டிலான் பெரேரா இதனை குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.