Header Ads



உலகமே எதிர்த்தாலும், தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவோம்

ஐரோப்­பிய ஒன்­றியம் அல்ல முழு உல­கமே எதிர்த்­தாலும் மரண தண்­ட­னையை நிறை­வேற்­றுவோம். இவ்­வி­ட­யத்தில் ஒரு போதும்  அர­சாங்கம் பின்­வாங்­கா­தென    விவ­சா­யத்­துறை அமைச்சர் மஹிந்த அம­ர­வீர  தெரி­வித்தார். 

மரண தண்­ட­னையை நிறை­வேற்ற வேண்­டா­மென மேற்­கு­லக நாடுகள் சில விட­யங்­களை மாத்­திரம் குறிப்­பிட்டு கருத்­துக்­களை தெரி­விப்­பது ஏற்­றுக்­கொள்ள முடி­யா­தது. அர­சாங்­கத்தின் தீர்­மா­னத்­திற்­கான கார­ணங்­களை  எடுத்­து­ரைப்போம் எனவும் அவர்  குறிப்­பிட்டார்

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

போதைப்­பொருள் குற்­றங்­க­ளுக்­காக   மர­ண­தண்­டனை விதிப்­பது தொடர்பில் இலங்கை அர­சாங்­கத்தின் தீர்­மா­னத்­திற்கு ஐரோப்­பிய ஒன்­றியம் உள்­ளிட்ட மேற்­கு­லக நாடுகள் எதிர்ப்­பினை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளன.  இவ்­வி­டயம் தொடர்பில் ஜனா­தி­ப­திக்கு கூட்­டாக கடி­தங்­களை அனுப்பி வைத்­துள்­ளன .  எமது நாட்டு நீதித்­துறை விவ­கா­ரங்­களில் மேற்­கு­லக நாடுகள் ஒரு வரை­ய­றை­க­ளுக்­குட்­பட்டே  செயற்­பட வேண்டும்.

 இலங்­கையில் மரண தண்­டனை  அமுல்­ப­டுத்­தாமல் பெய­ர­ள­விலே காணப்­பட்­டது.  இதன் கார­ண­மா­கவே   போதைப் பொருட்­களின் பாவனை மற்றும்  போதை வியா­பாரம்  அதி­க­ரித்­துள்­ளது என்றும் கரு­த­மு­டியும். சிறைக்­குள்­ளி­ருந்து கொண்டு பாரிய போதைப்­பொ­ருட்கள் வியா­பா­ரங்­களில் ஈடுபடு­வது என்­பது  பாரிய வியா­பார வலைப்­பின்­ன­லா­கவே காணப்­ப­டு­கின்­றது.  அர­சாங்கம் புதி­தாக   மரண தண்­டனை விதித்து அவர்­களை தூக்­கி­லிட முயற்­சி­களை மேற்­கொள்­ள­வில்லை என்ற விட­யத்­தினை மேற்­கு­லக நாடுகள் புரிந்­துக்­கொள்ள வேண்டும்.

அர­சாங்கம்  போதைப்­பொ­ருட்­களின் பாவ­னையை முற்­றாக அழிப்­ப­தற்கு கடந்த காலங்­களில் பாரிய முயற்­சி­களை மேற்­கொண்­டன. இதில் ஒரு கட்­ட­மா­கவே இந்த மரண தண்­டனை காணப்­ப­டு­கின்­றது. நீதித்­து­றை­யினால் குற்­ற­வா­ளி­க­ளாகக் கரு­தப்­பட்டு மரண தண்­டனை அனு­ப­வித்து வரும் கைதி­க­ளுக்கு  மரண தண்­ட­னை­யினை  வழங்­கு­வது எவ்­வித மனித உரிமை மீறல்­களும் கிடை­யாது.

எமது நாட்டில் தற்­போது காணப்­ப­டு­கின்ற பிரச்­சி­னைகள் தொடர்பில் மேற்­கு­லக நாடு­க­ளுக்கு எவ்­வித அக்­க­றையும் கிடை­யாது.  முக்­கிய சட்­டங்­களை நடை­மு­றைப்­ப­டுத்­தும்­போது அதற்கு எதி­ராக அழுத்­தங்­களை பிர­யோ­கிப்­பது ஏற்­றுக்­கொள்ள முடி­யாத விடயம் .  ஜனா­தி­ப­தியின் இத்­தீர்­மானம் தொடர்பில் நாட்டு மக்கள் பெரு­ம­ளவு  எதிர்­பார்ப்­புக்­க­ளுடன் காணப்­ப­டு­கின்­றனர்.

பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் முக்­கி­ய­மாக பௌத்த மத குரு­மார்­களும்  மரண தண்­ட­னை­யினை வழங்க வேண்­டு­மென்ற தீர்மானத்திற்கு  ஆதரவு வழங்கியுள்ளமை வரவேற்கத்தக்கது.  ஆகவே,  நாட்டு மக்களின் விருப்பங்களுக்கு  அமைய அரசாங்கம் செயற்பட வேண்டுமே தவிர சர்வதேச சமூகத்தின் விருப்பத்திற்கல்ல. இவ்விடயம் தொடர்பில் விரைவில் அரசாங்க தரப்பினருடன்  பேச்சுவார்ததைகளை  மேற்கொள்வதாக தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.