Header Ads



ஈரானில் மழைபொழியாமலிருக்க, இஸ்ரேல் மேகக்கூட்டங்களை திருடுகிறாதம்


ஈரானில் மழைபொழிய கூடாது என்பதற்காகவே மேகக்கூட்டங்கள் திருடப்படுகின்றன என சிவில் பாதுகாப்பு அமைப்பின் தலைவரான பிரிகேடியர் ஜெனரல் ஹோலம் ராஜா அதிர்ச்சியளிக்கும் புகார் ஒன்றினை கூறியுள்ளார்.

ஈரானில் வறட்சி நிலையை உருவாக்கும் விதத்தில் சில நாடுகள் செயல்படுவதாக சிவில் பாதுகாப்பு அமைப்பின் தலைவரான பிரிகேடியர் ஜெனரல் ஹோலம் ராஜா கூறியுள்ளார். இதுகுறித்து ஈரானிய தலைநகர் தெஹ்ரானில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் பேசிய அவர், காலநிலை மற்றும் பருவநிலை மாற்றங்களில் வெளிநாடுகளின் பங்கு இருக்குமோ என்ற சந்தேகம் எழுகின்றது.

ஈரானில் மழை பொழிவதை தடுக்கும் வகையில், இஸ்ரேலின் கூட்டுக்குழுக்கள் அயல்நாடுகளுடன் இணைந்து மேகம் மற்றும் பனிக்கூட்டங்களை திருடி வருகின்றன என கூறினார். மேலும் தன்னுடைய வாதத்தை உறுதிப்படுத்தும் விதமாக, கடந்த 4 ஆண்டுகளில் ஆப்கன் முதல் மெடிடர்ரனியன் கடல் வரை 2,200 மீட்டர் அளவிற்கு பனிக்கூட்டங்கள் சூழ்ந்திருப்பதாகவும், அதில் ஈரானை மட்டும் தவிர்த்திருப்பதாகவும் தெரிவித்தார்.

அவருடைய கருத்திற்கு முற்றிலும் மறுப்பு தெரிவிக்கும் விதமாக, ஈரான் வானிலை ஆராய்ச்சி மையத்தின் தலைவர் Ahad Vazife கூறுகையில், ஒரு நாடு பனி அல்லது மேகக்கூட்டங்களை திருடுவது என்பது சாத்தியமில்லாத ஒன்று. ஈரான் நீண்ட வருடங்களாகவே வறட்சியை சந்தித்து வருகிறது. இது ஒரு உலகளாவிய போக்கு என தெரிவித்தார்.

மேலும் பேசுகையில், ஜெனரல் இதுபோன்ற கேள்விகளை எழுப்புவது, பிரச்சனைகளை தீர்க்க முடியாதது மட்டுமின்றி, தீர்வினை கண்டுபிடிப்பதற்கான வழிகளையும் தடுக்கிறது என அவர் கூறியுள்ளார்.


முன்னதாக கடந்த 2011-ம் ஆண்டு ஈரானின் முன்னாள் பிரதமர் Mahmoud Ahmadinejad, மேற்கு நாடுகள் வறட்சியை ஏற்படுத்தும் விதத்தில் செயல்பட்டு வருவதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.