July 14, 2018

கண்டி வன்­முறையில் 95 அப்பாவிகள் கைது - ஞான­சார

கண்டி, தெல்­தெ­னிய வன்­முறைச் சம்­ப­வங்­க­ளுடன் தொடர்­பு­பட்­ட­வர்கள் என்ற சந்­தே­கத்தின் பேரில் 95 இளை­ஞர்கள் கைது செய்­யப்­பட்டு 3 மாதங்­க­ளுக்கும் மேலாக சிறை­வைக்­கப்­பட்­டுள்­ளார்கள். அவர்கள் அப்­பாவி இளை­ஞர்கள். இந்த வன்­முறை சம்­ப­வங்­களைத் தடுக்கத் தவ­றிய பொலி­ஸாரே கைது செய்­யப்­பட்டு சிறை­வைக்கப்பட்­டி­ருக்க வேண்டும் என பொது­பல சேனாவின் ராஜ­கி­ரி­ய­வி­லுள்ள தலை­மைக்­கா­ரி­யா­ல­யத்தில் இடம்­பெற்ற ஊடக மாநாட்டில் கலந்­து­கொண்டு ஊட­க­வி­ய­லா­ளர்­களின் கேள்­வி­க­ளுக்குப் பதி­ல­ளித்த பொது­பல சேனாவின் பொதுச்­செ­ய­லாளர் ஞான­சார தேரர் தெரி­வித்தார். 

அவர் தொடர்ந்தும் பதி­ல­ளிக்­கையில் தெரி­வித்­த­தா­வது,

கண்டி, தெல்­தெ­னிய வன்­மு­றை­களை பொலி­ஸா­ரினால் உடன் கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்­டு­வந்­தி­ருக்க முடியும். வன்­செ­யல்கள் ஆரம்­பித்த 2 கிலோ­மீட்டர் தூரத்­துக்குள் நிலை­மையை கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்டு வந்­தி­ருக்­கலாம். ஆனால் தெல்­தெ­னி­ய­வி­லி­ருந்து பல­கொல்ல வரை 12 கிலோ­மீற்­றர்கள் வன்­செ­யல்கள் பர­வும்­வரை பொலிஸ் என்ன செய்­தது? கடமை தவ­றிய பொலிஸ்­கா­ரர்­க­ளுக்கு என்ன நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டது. 

இப்­போது அப்­பாவி இளை­ஞர்­களே சிறைக்குள் இருக்­கி­றார்கள். அவர்­க­ளுக்குப் பிணை வழங்­கப்­படவில்லை. கடை­க­ளுக்குப் பொருட்கள் வாங்கச் சென்று கொண்­டி­ருந்­த­வர்­களும் கைது செய்­யப்­பட்­டி­ருக்­கி­றார்கள். கராம்பு பறிப்­ப­வர்­களும் கைது செய்­யப்­பட்­டி­ருக்­கி­றார்கள்.  தெல்­தெ­னிய சம்­பவம் தொடர்­பாக மாத்­தி­ர­மல்ல அம்­பாறை, பேரு­வளை, அளுத்­கம, கிந்­தோட்டை சம்­ப­வங்­களின் பின்­ன­ணியில் இருந்­த­வர்கள் யார் என்­பதைத் தேடிப்­பா­ருங்கள் என்றே நாம் தொட­ராகக் கோரிக்கை விடுக்­கிறோம். ஆனால் எமது கோரிக்­கைகள் அலட்­சியம் செய்­யப்­ப­டு­கின்­றன என்றார்.

8 கருத்துரைகள்:

Innocent people who damaged the millions worth of property living houses including leader of Mahason Balakaya still under custody cases proceedings but who did same in Alutgama area not arrested freed under previous government
INNOCENCE DIFFERENTIATED

ஏன் தலைவா நீர் அறியாத கள்வர்களா, கயவர்களா, வன்முறையார்களா? நீர் சம்பத்தப் படவில்லையாயின் நிலமை இன்னும் மோசமாகயிருக்கும் என நீரே குறிப்பிட்டிருந்தீர்.

நல்ல மனிதராட்டம் நீர் அந்த வன்முறையாளர்களை கைது செய்ய உதவுமன் விடயம் இலகுவாகிவிடும் அறிக்கை விடுவதை விட்டுவிட்டு.

Aluthgama incident? who will have to be in jail?

குற்றவாளிகளை தேடிப்பார்க்க எந்த தேவையும் இல்லை. இந்த மனித மிருகத்தை உள்ளே போட்டால் எல்லாம் சரியாகி விடும்.

நீங்களும் அவர்களோடு அரச விருந்தினராக இருக்க வேண்டியவர்தான், நாட்டின் நீதி உங்களைக் கண்டு கொள்வதில்லை!

இந்தப்பிசாசு கூறுவது உண்மைதான் அம்பை எய்தவன் இவன் தான் அம்புகள்தான் மாட்டுப்பட்டு கூண்டில் உள்ளது. மனித உருவில் உலவும் கொடூர மிருகம்.

அப்பாவிகளை அறிந்து கொண்ட இவரை வைத்து குற்றவாளிகளையும் கண்டுபிடிக்க முடியுமே.

இதன் பிறகு சப்னா முஸ்லிம் இவன்ட எந்தச் செய்தியையும் தயவு செய்து பிரசுரிக்க வேண்டாம்

Post a Comment