Header Ads



தர்மப்பிரியவை படுகொலை செய்வதற்கு 50 லட்சம் ரூபாய் - மாகந்துரே மதுஸ் அறிவிப்பு

புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரியும், பாதாள உலகக்குழுக்களை கட்டுப்படுத்தும் விசேட அதிரடிப்படையின் அதிகாரி ஈ.எஸ். தர்மப்பிரியவை படுகொலை செய்வதற்கு ஐம்பது லட்சம் ரூபாய் பணம் வழங்குவதாக பாதாள உலகக்குழுத் தலைவர் மாகந்துரே மதுஸ் தெரிவித்துள்ளார்.

புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரியின் சாரதியுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ஐம்பது லட்சம் ரூபாய் வழங்குவதாகவும், தர்மப்பிரியவை கொலை செய்யுமாறும் கோரியுள்ளார்.

டுபாயில் தற்பொழுது வசித்து வரும் மதுஸ் இவ்வாறு புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரியை படுகொலை செய்ய அண்மையில் முயற்சித்துள்ளார் என சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பொறுப்பதிகாரியை கொலை செய்தால் 50 லட்சம் ரூபாய் வழங்குவதாகவும், அவ்வாறு செய்யத் தவறினால் சாரதியின் சகோதரரை கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரியின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பாதாள உலகக்குழு செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை முடக்கும் நோக்கில் இந்த படுகொலை முயற்சி மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கு முன்னரும் புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரியை கொலை செய்ய முயற்சிக்கப்பட்டுள்ளதாக குறித்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

No comments

Powered by Blogger.