Header Ads



கற்பிட்டியில் கரையொதுங்கிய 35 அடி நீளமான திமிங்கிலம்


கற்பிட்டி ஆலங்குடா கடற்கரைப் பிரதேசத்தில் திமிங்கிலம் ஒன்று இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது.

குறித்த திமிங்கிலம் நேற்று திங்கட்கிழமை (16) காலை கரையொதுங்கிய கடற்படையினர் தெரிவித்தனர்.

சுமார் 35 அடி நீளமும், 8 அடி அகலமும் கொண்ட திமிங்கிலம் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு முன் இறந்திருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், குறித்த திமிங்கிலம் கடுமையாக சேதமடைந்து காணப்படுவதுடன், துர்நாற்றம் வீசுவதாகவும் குறித்த திமிங்கிலம் இறந்தமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

இவ்வாறு இறந்த நிலையில் கரையொதுங்கிய குறித்த திமிங்கிலத்தை பார்வையிட வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்திருந்தனர்.

இதேவேளை, கற்பிட்டி பிரதேச செயலகம், வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட குழு குறித்த கடற்பிரதேசத்திற்கு விஜயம் செய்து இறந்த நிலையில் கரையொதுங்கிய திமிங்கிலத்தை பார்வையிட்டதுடன், அதனை அந்த இடத்திலேயே புதைப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளனர் எனவும் கடற்படையினர் குறிப்பிட்டனர்.

No comments

Powered by Blogger.