Header Ads



நாளைமுதல் 33 குற்றங்களுக்கு, உடனடி அபராதம் (வாசிக்கத் தவறாதீர்கள்) விபரம் இணைப்பு

புதிய உடனடி அபராத விதிப்பு (Spot fine) ஜூலை 15 முதல் அமுலாவதோடு, அது தொடர்பில் ஏற்கனவே இருந்த 23 விதி மீறல்களில் ஒரு சில நீக்கப்பட்டு மேலும் 14 விதி மீறல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடக பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட, 2017 ஆம் ஆண்டு 18 ஆம் இலக்க திருத்தத்திற்கு அமைய வெளியிடப்பட்டுள்ள, 2018 ஜனவரி 15 ஆம் திகதி 2054/09 எனும் அதி விசேட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளவாறான புதிய உடனடி அபராத விதிப்பு (Spot fine) தொடர்பிலான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதற்கமைய, பழைய உடனடி அபராத விதிப்பு (Spot fine), 23 விதி மீறல்கள் தொடர்பில், வழங்குமாறு பணிக்கப்பட்டுள்ளது.

ஆயினும், புதிய Spot fine ஆனது, 33 போக்குவரத்து விதி மீறல்கள் தொடர்பில் உரிய அபராத சீட்டை வழங்குவதற்கு பணிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி வாகனம் செலுத்துதல், 18 வயதுக்கு உட்பட்டோர் வாகனம் செலுத்துதல், சாரதி அனுமதிப்பத்திரம் அற்றவரை சேவைக்கு அமர்த்துதல் ஆகிய  மூன்று விதி மீறல்கள் புதிய திருத்தத்தில் நீக்கப்பட்டுள்ளதோடு அவை நீதிமன்றில் வழக்கு தொடருதல் அடிப்படையான குற்றத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடக பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

அது தவிர ஏற்கனவே இருந்த 23 விதி மீறல்களில், வாகன இலக்கத் தகடு மற்றும் வாகன இலக்கத்தகட்டின் வடிவம் ஆகிய இரு விதி மீறல்களும், ஒன்றாக்கப்பட்டு வாகன இலக்கத்தகடு எனும் ரூபா 1,000 Spot fine விதிக்கப்படும் புதிய விதி மீறலில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அதற்கமைய ஏற்கனவே இருந்த 23 விதி மீறல்கள் (3 நீக்கம், 2 விதி மீறல் ஒன்றாக்கப்பட்டுள்ளது) 19 ஆவதோடு, மேலும் 14 விதி மீறல்கள் அவற்றுடன் சேர்க்கப்பட்டுள்ளன.

மேலதிகமாக சேர்க்கப்பட்ட 14 விதிமீறல்களும் அதற்கான (Spot fine) அபராதங்களும்:

அனுமதிப்பத்திரமின்றி அவசர சேவை அல்லது பொது சேவை வாகனங்களை செலுத்துதல் - ரூ. 1,000
அனுமதிப்பத்திரமின்றி விசேட செயற்பாட்டு வாகனங்களை செலுத்துதல் - ரூ. 1,000
அனுமதிப்பத்திரமின்றி இரசாயனப் பொருட்கள் மற்றும் தாக்குதிறன் மிக்க மூலப்பொருட்கள் கொண்ட வாகனங்களை செலுத்துதல் - ரூ. 1,000
500 இற்குள் உள்ளடங்கும் வாகனத்தை செலுத்துவதற்கான அனுமதிப்பத்திரம் கொண்ருக்காமை - ரூ. 1,000
சாரதி அனுமதிப்பத்திரத்தை கொண்டு செல்லாமை - ரூ. 1,000
ஆலோசக அனுமதிப்பத்திரம் இன்மை - ரூ. 2,000
புகை உள்ளிட்டவை அதிக வெளிப்படுத்துகை - ரூ. 1,000
ஆசன பட்டி அணியாமை - ரூ. 1,000
வாகனத்திலிருந்து அதிக சத்தம் வெளிப்படுத்தல் - ரூ. 1,000
வீதி சமிக்ஞையை பின்பற்றாமை - ரூ. 1,000
பஸ்களில் அதிக பயணிகளை ஏற்றிச் செல்லல் - ரூ. 500
லொறிகளில் அல்லது முச்சக்கர மோட்டார் வேன்களில், கொள்ளக்கூடிய அதிகூடிய பாரத்திலும் பார்க்க அதிக பொருட்களை ஏற்றிச் செல்லல் - ரூ. 500
மோட்டார் வாகனம் தொடர்பான உத்தரவை மீறல் - ரூ. 1,000 (கண்ணாடியை மறைத்தல் -Tinted Glass, கையடக்க தொலைபேசி பாவனை உள்ளிட்டவை)
உமிழ்வு சான்றிதழ் (புகை பரிசோதனை) உள்ளிட்ட சான்றிதழ்களை உடன் கொண்டு செல்லாமை - ரூ. 500
அத்துடன், ஏற்கனவே உள்ள அபராத விதிப்பிற்கு அமைய, ஆகக் குறைந்த அபராதத் தொகை ரூபா. 20 ஆகவும், அதிகூடிய அபராதத் தொகை ரூபா 5,000 ஆகவும் காணப்பட்டது.

ஜூலை 15 முதல் அமுலாகும் Spot fine அபராத விதிப்பில், மிகக் குறைந்த அபராதத் தொகை ரூபா 500 ஆகவும் அதிகூடிய அபராதத் தொகையான ரூபா 3,000 அதிக வேகமாக வாகனத்தை செலுத்துவது தொடர்பிலான விதி மீறல் தொடர்பில் விதிக்கப்பட்டுள்ளதாக ருவன் குணசேகர தெரிவித்தார்.

குறித்த அபராதத் தொகையை செலுத்த, அபராத சீட்டு வழங்கப்பட்ட தினத்திலிருந்து 14 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படும் என்பதோடு, அதற்கு மேலதிக வழங்கப்படும் மேலதிக 14 நாட்களுக்குள் அபராதத் தொகை செலுத்தப்படும்போது, குறித்த அபராதத் தொகையை இரட்டிப்பாக செலுத்த வேண்டும் எனவம் பொலிஸ் ஊடக பேச்சாளர் சுட்டிக் காட்டினார்.

அத்துடன், குறித்த அபராதத் தொகையை, நாடு முழுவதிலுமுள்ள அஞ்சல் அலுவலகங்களிலும் பிரதேச செயலகங்களிலும் செலுத்தலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

5 comments:

  1. Before you enforce laws ..
    You need to educate people ..
    It is not good at all to do this as soon as possible ..
    It needs some time ..
    It needs some education and training.
    Secondly; who is going to benefits from this..
    Traffic police will make a lot out of it ..

    ReplyDelete
  2. Good if implemented properly and honesty by the police officers. This might decrease traffic accidents on the road.

    ReplyDelete
  3. It is time for Sri Lanka to implement the Online payment system. The system of confiscating the license must stop. This will avoid people bribing the police! The mere inconvenience of running around to pay the fine and going back to the Police station to recover the license pushes people to bribe the Policeman to avoid this trouble!

    ReplyDelete
  4. எதை எதை எல்லாம் TV களில் விளம்பரம் செய்யும் போது
    Atheeq கூறுவது போல் பொலிசார் இத்தண்டனைகள் நடைமுறைப்படுத்தப்படும் படியான விளம்பரங்களை மீடியாக்கள் மூலமாக மக்களுக்கு அறிவுறுத்துவது அரசின் முக்கிய கடமைகளில் ஒன்றாகும்.

    ReplyDelete
  5. Brother Irshad Wahab. You are right we need this system.

    ReplyDelete

Powered by Blogger.