Header Ads



முதல் ஹஜ் குழு 24 ஆம் திகதி புறப்படுகிறது - இலவச சிம் வழங்கப்படும்,

இவ்­வ­ருடம் ஹஜ் கட­மையை மேற்­கொள்­ள­வுள்ள 3000 யாத்­தி­ரி­கர்­களில் முத­லா­வது குழு­வினர் எதிர்­வரும் 24 ஆம் திகதி சவூதி அரே­பி­யா­வுக்குப் பய­ணிக்­க­வுள்ளனர். இக் குழுவில் 58 பேர் அடங்­கி­யுள்­ளனர்.

இரண்­டா­வது தொகுதி ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் எதிர்­வரும் 26 ஆம் திகதி சவூதி அரே­பி­யா­வுக்குப் பய­ணிக்­க­வுள்­ளனர். இக் குழுவில் 300 பய­ணிகள் அடங்­கி­யுள்­ள­தாக முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் அஷ்ஷெய்க் எம்.ஆர்.எம். மலிக் தெரி­வித்தார்.

எதிர்­வரும் 26 ஆம் திகதி கட்­டு­நா­யக்க பண்­டா­ர­நா­யக்க சர்­வ­தேச விமான நிலை­யத்தில் ஹஜ் யாத்­தி­ரி­கர்­களை அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவ­கார அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம், முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­கள பணிப்­பாளர் அஷ்ஷெய்க் எம்.ஆர்.எம். மலிக், அரச ஹஜ் குழுவின் தலைவர் கலா­நிதி எம்.ரி. சியாத் உட்­பட குழு­வினர் வழி­ய­னுப்பி வைக்­க­வுள்­ளனர்.

இதே­வேளை ஜித்­தா­வி­லுள்ள இலங்கை கவுன்­சி­யுலர் ஜெனரல் ஏ.டபிள்யூ.ஏ. சலாம் இலங்கை ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் சவூதி அரே­பி­யாவில் பயன்­ப­டுத்­து­வ­தற்­காக 3000 சிம் அட்­டை­களை அனுப்பி வைத்­துள்ளார். இச் சிம் அட்­டைகள் ஹஜ் முக­வர்கள் ஊடாக ஹஜ் யாத்­தி­ரி­கர்­க­ளுக்குப் பகிர்ந்­த­ளிக்­கப்­ப­ட­வுள்­ளன.

சவூதி அரே­பி­யாவில் தடை செய்­யப்­பட்­டுள்ள மருந்து வகை­களை ஹஜ் யாத்திரிகர்கள் தம்முடன் எடுத்துச்செல்ல வேண்டாமென முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

No comments

Powered by Blogger.