July 22, 2018

வடக்கில் 20.000 பேருக்கு தொழில் வாய்ப்புக்களை உருவாக்க, அமைச்சரவைக்கு பத்திரம் சமர்ப்பிப்பு

யுத்தத்தினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட வடக்கிலே ஆகக்குறைந்தது 20000 பேருக்கு தொழில்வாய்ப்புக்களை வழங்கக்கூடியவாறு கைத்தொழிற்பேட்டைகளை அமைப்பதற்கான அமைச்சரவைப் பத்திரமொன்றை தமது அமைச்சு சமர்ப்பித்துள்ளதாகவும் அதற்கான இடங்களையும் அடையாளப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சும் கைத்தொழில் அபிவிருத்தி சபையும் இணைந்து நடாத்தும் தொழில் முயற்சியாளர்களுக்கான மாபெரும் எழுச்சி விழா யாழ் மாநகர சபை மைதானத்தில் இடம் பெற்ற போது பிரதம அதிதியாக பிரதமதர் ரணில் விக்ரமசிங்க கலந்துகொண்டார். முதமைச்சர் விக்னேஸ்வரன் , பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன் சரவணபவன், விஜயகலா மகேஸ்வரன் மாகாண எதிர்க்கட்சித் தலைவர் தவராசா மற்றும் கைத்தொழில் அமைச்சின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

பிரதமர் தலைமையில் தமிழ்க்கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான மாவைசேனாதிராஜா, சுமந்திரன், சிறீதரன் உட்பட அரசியல் பிரதிநிதிகள் கலந்துகொண்ட கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவையடுத்து, மாகாண முதலமைச்சரினதும் மாகாண அமைச்சரவையினதும் விருப்பத்துடனும் ஒத்துழைப்புடனும் இந்த பாரிய தொழில் முயற்சித்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

யுத்த காலத்தில் நமது மண்ணில் வாழ முடியாத சூழ்நிலையால் அச்சம் காரணமாக  வெளியேறி வெளிநாடுகளில்  வாழும் வியாபார சிந்தனையும் அக்கறையும் கொண்டோரை இந்த திட்டத்தில் உள்ளீர்த்து அவர்களை முதலீட்டு முயற்சிகளில் ஈடுபடச்செய்து இது வலுப்படுத்தப்படுமென்றும் மேலும்  அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் கூறியதாவது,
வடக்கில் தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தும் குறிப்பிட்ட கைத்தொழில் துறைத் திட்டம் தொடர்பில் இன்று (22) காலை முதலமைச்சருடனும் பேசி இருக்கின்றேன். விரைவில் அவரைச்; சந்தித்து இது தொடர்பில் மேற்கொண்டு எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து தீர்க்கமான முடிவெடுப்போம்.

ஏனைய மாகாணங்களைப் போலன்றி இந்த மாவட்டத்தில் வி;த்தியாசமான முறையில் குறைந்த வரிச்சலுகையுடன் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த எண்ணியுள்ளோம்.

இந்த அரசும் விசேடமாக ஜனாதிபதியும் பிரதமரும் சிறுபான்மைச் சமூகங்களான தமிழ் முஸ்லிம் மலையக மக்களின் 100 சதவீதமான வாக்குகளினால் உருவாக்கப்பட்டவர்கள். எனவே எஞ்சியுள்ள ஆட்சிக் காலங்களில் அவர்களைப் பயன்படுத்தி நமது உச்ச அளவிலான தேவைகளை பெற்றுக்கொள்ளவேண்டியது அந்த மக்களின் பிரதிநிதிகளையே சார்கின்றது.  

எல்லாவற்றையும் இழந்து, அழிந்த இந்தப் பூமியை வளமுள்ளதாக்க வேண்டியதன் கடப்பாடு நமக்குண்டு. பல்வேறு கட்சிகளிலும் வெ.வ்வேறு சின்னங்களிலும் நாம் அரசியல் செய்து கொண்டிருந்தாலும் மக்களின் வாழ்வு என்று வரும் போது பேதங்களையும் வேறுபாடுகளையும் மறந்து, ஒன்றுபட்டு உயிரோட்டமுள்ள சமுதாயத்தை கட்டியெழுப்பவும் அவர்களின் வாழ்வாதாரத்தை பெருக்கவும் அனைத்து அரசியல்வாதிக்கும் தர்மீகப்பொறுப்பும் கடப்பாடும் உண்டு.

எனது அமைச்சின் கீழ் இயங்கும் கைத்தொழில் அபிவிருத்தி சபை, நெடா ஆகியன கைத்தொழில் துறையில் ஈடுபட விரும்புவோருக்கும் சிறிய வியாபாரங்களில் ஆர்வமுள்ளோருக்கும் உதவியளிக்கின்றது. அந்த வகையில் இவர்களுக்கான பயிற்சி, இயந்திராதிகளை வழங்கி வியாபார முயற்சிகளை பெருக்குவதற்கு நடவடிக்கை எடுக்கின்றது. அவ்வாறான ஒரு நிகழ்வாகவே இன்றைய நாள் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களின் வேண்டுகோளை ஏற்றே கைத்தொழில் வர்த்தக அமைச்சு இதை நடைமுறைப்படுத்துகின்றது. இத்திட்டத்தை எதிர்காலத்தில் விரிவுபடுத்தி அனைவரது ஆலோசனைகளையும் ஒத்துழைப்பையும் நாம் கோரி நிற்கின்றோம்.

9 கருத்துரைகள்:

இவரின் தொல்லை பெரும் தொல்லை

நடுக்கடலுக்கு போனாலும் நாய்க்கு நக்கி குடித்தால் தான் திருப்தி என்பது நியதி.
அது போல றிசாட் அமைச்சர் 20000 பேருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி கெளரவமா தொழில் செய்து வாழ வழி ஏற்படுத்துறது நக்கித் திண்டு திரியும் அஜன் போன்றவர்களுக்கு தொல்லையாத்தான் தெரியும்.

அஜன், உன்னைப்போன்ற பைத்தியங்களுக்கு என்ன தேவை இருக்கிறது முஸ்லிம்கள் பற்றி பேச
உங்களின் எந்த பிரச்சினையிலும் நாங்கள் தலையிடாமல்தான் இருக்கிறோம் உன்னுடைய புத்திமதிகளை உன் சாதியோடு நிறுத்திக்கொள்.முஸ்லிம்களையும் முஸ்லிம் நாடுகளையும் குறை கூறும் நீ முஸ்லிம் நாடுகளில்தான் உம்மவர்கள் அதிகம் வயிற்றுபிழைப்புக்காக அலைகிறீர்கள் என்பதை நினைவில் வைத்துக்கொள்.

கௌரவ அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களே,

உங்களின் சேவை எப்போதும் மக்களுக்குத் தேவை.

வேலையற்றோர் வட மாகாணத்தில் மட்டுமல்ல இருக்கிறார்கள்.

எல்லா மாகாணங்களிலும் இருக்கிறார்கள்.

வேலை வாய்ப்புக்களை எல்லா மாகாணங்களுக்கும் விரிவுபடுத்துங்கள்.

Ajan Antonyraj அவர்களே, வடபகுதியில் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் கெளரவ அமைச்சர் றிஷாட் பதியுதின் அவர்களது முயற்ச்சி வரவேற்க்கப் படவேண்டியதல்லவா? வடமாகாண சபையும் கூட்டமைப்பு தலைவர்களும் இத்திட்டத்தை வரவேற்றுள்ளார்கள் அல்லவா? அமைச்சர் மன்னாரில் இருந்து அநீதியாக வெளியேற்றப் பட்ட முஸ்லிம்களில் ஒருவர். அவர்களின் பிரதி நிதி. முதலில் நாம் நம் தரப்பால் பாதிக்கப்பட வடபதி முஸ்லிம்களின் அவர்களது தலைவர்களின் கோபங்களை புரிந்து கொள்ள வேண்டும். யாரும் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்களில்லை. ஆனால் கருத்துக்களை ஆதார பூர்வமாக விமர்சனம் + சுயவிமர்சனம் அடிப்படையிலால்லா நாம் முன் வைக்க வேண்டும். விமர்சிக்க வே

ஜெயபாலன் அவர்களே.
2009 இட்கு பின்னர் ரிஷாட் படியூடியூன் அவர்கள் எத்தனை சட்டவிரோத முஸ்லீம் குடியிருப்புகளை உருவாக்கினார் தெரியுமா. இன்று மன்னாருக்கு போய் பாருங்கள் தெரியும். முசலி மற்றும் மன்னார் நகர பகுதிகள் எங்கு பார்த்தாலும் தொப்பிகளும் முக்காடுகளுமாய் தான் இருக்கு. இவர் காலஞ்சென்ற மஹிந்தவுடன் அடித்த கூத்துகளும் கும்மாளங்களும் கொஞ்ச நெஞ்சமில்லை. இன்று அந்த வேலை வாய்ப்புகளும் முஸ்லிம்களுக்கு மாத்திரம் ஒரு இன துவேஷ ரீதியாக வழங்கத்தான் இவன் முடிவு செய்திருப்பான். இவரின் அட்டகாசங்கள் வடக்கில் வடமாகாண சபை அமைந்த பின்னரே சற்று குறைந்தது. இவர் இனியும் வடக்கில் அரபு காலனிகளை அமைக்க இடம் வழங்கப்படாது. இனியும் இவரின் இந்த செயட்பாடு தொடர்ந்தால் தேவை இல்லாமல் வடக்கில் மீள் குடியேறிய மிஸ்லிம் மக்களே பாதிக்க படுவார்கள் என்பதை கூறி கொள்ள விரும்புகின்றேன். கிழக்கிலே குறிப்பாக அம்பாறையில் முஸ்லிம்களால் இந சுத்திகரிப்பு செய்யப்பட்ட தமிழர்களை இங்கே யாரும் பேசுவதில்லை. 1990ஆம் ஆண்டில் முஸ்லிம்கள் வட மாகாணத்தில் இருந்து வெளியேறியதால் தான் அவர்களின் பெரும்வாலான தலைகள் தப்பியது. இதட்கு இலங்கை முஸ்லிம்கள் வாழ்நாள் முழுதும் விடுதலை புலிகளுக்கு நன்றி கடன் படவர்களாகவே உள்ளார்கள். இலங்கையில் வந்து மன்னார் மற்றும் திருகோணமலை போன்ற இடங்களை பாருங்கள். எவ்வாறு சட்டவிரோதமான முறையில் இந்த தொப்பிகள் வாழுகின்றார்கள் என புரியும். சும்மா இந்தயாவில் இருந்து கொண்டு comments அடிப்பதால் ஒன்றும் நடந்தறிவிடப்போவதில்லை.

ஜெயபாலன் சார், உங்கள் கருத்தும் சரி தான்

தம்பி சட்டவிரோத குடியேற்றம் என்றால் ஏன் உங்கள் உச்ச நீதிமன்ற நீதியரசரால் எந்த ஒரு சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.பிரபாகரனாலும் அவனின் பயங்கரவாத அமைப்பாலும் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் இன்னும் புத்தளம் போன்ற பகுதிகளில் அகதி முகாம்களில்தான் வாழ்கிறார்கள் யாரும் பயங்கரவாதிகளுக்கு நன்றி செலுத்தவில்லை சாபம்தான்விட்டார்கள்,அம்பாறையில் எங்கு தம்பி முஸ்லிம்களால் இன சுத்திகரிப்பு நடந்தது,யார் குண்டு வைத்தது யார் தற்கொலை தாக்குதல் நடத்தியது,யார் உயிர் உடமைகளுக்கு சேதம் ஏற்படுத்தியது என்று தெரியாதுபோல.சும்மா சின்னபுள்ளமாதிரி comment பண்றதால ஒன்றும் நடந்திடாது பொய்யும் உண்மையாகாது

கௌரவ அமைச்சர் ரிஷாட் அவர்களின் சேவைகளினால், அகதியாகியுள்ள மூவினத்தினரும் பயன் அடைந்துள்ளனர்.

வட மாகாணம், தமிழனுக்கு சொந்தமானது அல்ல.

அது எல்லா இனத்தவருக்கும் சொந்தமானது.

விரும்பியவர் குடியேறலாம்.

இலங்கையில் வாழும் எந்த இனமும், இலங்கையில் எந்த மாகாணத்திலும் குடியேறலாம்.

குடியேற்றங்களை அமைக்கலாம். அதற்கு, அரசு ஆதரிக்கிறது.

Post a Comment