Header Ads



19 பேருக்கான தூக்குத் தண்டனை உறுதியாகிறது, பௌத்த பீடங்களும் ஆதரவு

மரணதண்டனை விதிக்கப்பட்ட போதைப்பொருள் குற்றவாளிகளை தூக்கிலிடும் நடைமுறையை மீண்டும் கொண்டு வர, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன எடுத்துள்ள முடிவுக்கு கத்தோலிக்கத் திருச்சபை ஆதரவு தெரிவித்துள்ளது.

கத்தோலிக்கத் திருச்சபையின் கர்தினால் மல்கம் ரஞ்சித், கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில், சிறிலங்கா அதிபரின் முடிவுக்கு வரவேற்புத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், சிறைகளில் இருந்தவாறு குற்றங்களை ஒருங்கிணைக்கும் நடவடிக்கைகளை தடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

சிறைச்சாலைகளில் இருந்து கொண்டு, போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றச் செயல்களை ஒருங்கிணைக்கும் நடவடிக்கைகளுக்கு சிறைச்சாலை அதிகாரிகள் சிலரும் ஒத்துழைப்பு அளிப்பதாகவும், கர்தினால் மல்கம் ரஞ்சித் குற்றம்சாட்டியுள்ளார்.

இதற்கிடையே, போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு மரணதண்டனை விதிப்பதற்கு பௌத்த பீடங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன.

No comments

Powered by Blogger.