Header Ads



16 பேர் கொண்ட, குழுவிலும் லடாய்

அரசாங்கத்திலிருந்து விலகிய 16 பேர் கொண்ட குழுவும், கூட்டு எதிர்க் கட்சியிலுள்ள கட்சித் தலைவர்களும் இன்று (02) மாலை மஹிந்த ராஜபக்ஷவுடன் நடாத்திய விசேட கலந்துரையாடலில் தயாசிறி ஜயசேகர, எஸ்.பீ. திஸநாயாக்க ஆகியோர் கலந்துகொள்ளவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.

16 பேர் கொண்ட குழுவிலுள்ள இரண்டு பேர் தவிர ஏனைய சகலரும் இன்று மஹிந்த ராஜபக்ஷவுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கூட்டு எதிர்க் கட்சியிலுள்ள உறுப்பினர்கள் தொடர்ந்தும், 16 பேர் கொண்ட குழு தொடர்பில் முன்வைத்து வந்த கருத்துக் குறித்து  நேற்று(01) நடைபெற்ற நிகழ்வொன்றின் போது தயாசிறி ஜயசேகர கடுமையாக விமர்சித்திருந்தார்.

பொதுஜன பெரமுனவில் அங்கம் வகிப்பதற்கு தான் ஒருபோதும் தயாரில்லையெனவும் அவர் கூறியிருந்தார். கூட்டு எதிரணியில் செயற்படுவதற்கு பொதுஜன பெரமுனவில் இணைந்தால் தான் முடியும் என்றால், பாராளுமன்றத்தில் ஒதுங்கியிருந்து செயற்படுவதற்கு தன்னால் முடியும் எனவும் அவர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. இந்த மகா கள்ளப் பேர்வழிகள் 16 பேரையும் அல்லாஹ் திட்டமிட்டு அரசாங்கத்திலிருந்து தொலைத்துவிட்டான். இந்த கள்ளக்கூட்டம் இனி காபிர், முனாபிக் கூட்டங்களுடன் சேரும் போது ஏற்படும் விரிசல்கள்,பிளவுகள் ஆட்சிக்கோ மக்களுக்கு உதவிசெய்யும் தோரணையில் பதவி வகிக்கவோ இந்தக்கூட்டம் தகுதியில்லை என்பதை அல்லாஹ் மற்றவர்களுக்குக்காட்டிக் கொண்டிருக்கின்றான். அரை, கால் கள்வர்கள் இந்தக்கூட்டத்தின் கெடுபிடிகளிலிருந்து பாடம் படித்தால் சின்னக் கள்வர்கள் திருந்தும் வாய்ப்பு இருக்கலாம்.

    ReplyDelete

Powered by Blogger.