Header Ads



பாகிஸ்தான் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு 125 பேர் மரணம்


தென் மேற்கு பாகிஸ்தானில் தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் நடந்த தற்கொலை குண்டு தாக்குதலில் மாகாண சபை வேட்பாளர் ஒருவர் உள்பட 125 பேர் கொல்லப்பட்டதாகவும் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் அந்த மாகாண சுகாதார அமைச்சர் ஃபைசல் காக்கத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஓராண்டில் பாகிஸ்தானில் நடத்தப்பட்டதிலேயே மோசமான தாக்குதல் இது.

பிபிசி செய்தியாளர் குடாய் நூர் நாசிரிடம் பேசிய அவர் புதிதாகத் தொடங்கப்பட்ட பலுசிஸ்தான் அவாமி கட்சி வேட்பாளர் நவாப்ஜாதா சிராஜ் ரைசானியின் தேர்தல் கூட்டத்தைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அவர் கூறினார்.

சிராஜ் ரைசானியின் சகோதரர் லஷ்காரி ரைசானி தமது சகோதரர் கொல்லப்பட்டதை பிபிசியிடம் உறுதி செய்தார்.

மாஸ்துங் மாவட்டத்தில் நடந்த இந்த தாக்குதல் குவெட்டா என்ற இடத்தில் இருந்து 35 கி.மீ. தொலைவில் நடந்ததாக அந்த மாவட்ட துணை கமிஷனர் குவெய்ம் கான் லஷ்ஷாரி பிபிசி செய்தியாளர் முகம்மது காசிமிடம் தெரிவித்தார்.

1 comment:

  1. உலகில் பாக்கிஸ்தானில் மட்டுமே பயங்கரவாதை ஒரு தொழில்துறையாக அரசாங்கமே ஊக்குவிக்கின்றது.
    அங்கு வேறு என்ன நடக்கும். இதனால் தான் அங்கு ஒருவரும் போவதில்லை.

    ReplyDelete

Powered by Blogger.