Header Ads



பகிடி வதைக்கு 10 வருட கடூழிய சிறை, ஞாபகமூட்டுகிறார் விஜயதாச

பகிடிவதைகளில் ஈடுபடும் சகல பல்கலைக்கழக மாணவர்களுக்கும் மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் பிணை வழங்குவதற்கு சட்டத்தில் இடம் வழங்கப்படவில்லையெனவும், குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட ஒருவருக்கு 10 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்க முடியும் எனவும் உயர்கல்வி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

பல்கலைக்கழகங்களில் பகிடிவதையில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பது தொடர்பில் சட்டத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் இவ்வாறான சம்பவங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் சகல பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவித்தல் விடுத்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

கல்வி நிறுவனங்களில் பகிடிவதைகள் மற்றும் ஏனைய வன்முறைகளிலிருந்து பாதுகாப்பது தொடர்பான 1998 ஆண்டு 20ஆம் இலக்க சட்டத்தின் கீழ் இந்த உத்தரவைப் பிறப்பித்திருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் நேற்றுய(30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் விஜயதாச ராஜபக்‌ஷ இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.

பகிடிவதைக்கு எதிரான சட்டம் இதுவரை முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. தற்பொழுது இதனை முழுமையாக நடைமுறைப்படுத்தியுள்ளோம். இந்தச் சட்டத்துக்கு எதிராக நடந்துகொள்ளும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, சகல பல்கலைக்கழக உபவேந்தர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆகியோருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் மேலும் கூறினார்.

1 comment:

  1. இந்த சட்டம் சரியாக நடைமுறை படுத்தினால் முதலில் மகிழ்ச்சி அடைபவர்கள் மாணவர்களின் பெற்றோராகத்தான் இருப்பார்கள் .

    ReplyDelete

Powered by Blogger.