Header Ads



ஞானசாரரை வெள்ளிக்கிழமை, விடுவிக்க வேண்டும் - எச்சரிக்கிறான் டிலந்த

துமிந்த திஸாநாயக்காக்களுக்கு தமது அமைச்சுப் பதவியைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமாக இருந்தால், ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் தமது பதவிகளைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமாக இருந்தால் ஞானசார தேரரை விடுதலை செய்யுங்கள் என பொதுபல சேனாவின் நிறைவேற்று அதிகாரி டிலந்த விதானகே தெரிவித்தார்.

ஞானசார தேரரின் சுக துக்கங்களை விசாரிப்பதற்கு இன்று சிறைச்சாலைக்கு விஜயம் செய்த பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

இந்த நாட்டில் நீதித்துறைக்கு கொஞ்சமாவது மதிப்பு உள்ளதாக காண்பிக்க வேண்டுமாக இருந்தால், நாளைக்கு (22) ஞானசார தேரருக்கு பிணை வழங்கப்பட வேண்டும் எனவும் டிலந்த விதானகே மேலும் குறிப்பிட்டார்.

ஞானசார தேரரை நாளை விடுவிக்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என அமைச்சர் துமிந்த திஸாநாயக்க  நேற்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

1 comment:

  1. இந்த நாட்டில் 1% வீதத்துக்கும் குறைவாக உள்ள இனத்துவேசிகள் இந்த நாட்டில் உள்ள அரசாங்கத்தையும், இந்த நாட்டில் நீதியையும் நியாயத்தையும் மதிக்கும் பெரும்பான்மையாக வாழும் மக்களுக்கும் எச்சரிக்கை விடுப்பதை எல்லோரும் பார்த்துக் கொண்டு மௌனமாக இருக்கும் காலம் இது. அதாவது பெரும்பான்மையினர் அநியாயத்துக்கும் அக்கிரமத்துக்கும் அநீதிக்கும் துணைபோகின்றது போன்று தெரிகிறது. இந்த நிலைமை இந்த நாட்டு மக்களுக்கும் நாட்டுக்கும் மிகவும் மோசமான ஒரு நிலைமையாகும் என்பதைச் சொல்லிவைக்கின்றோம்.

    ReplyDelete

Powered by Blogger.