June 12, 2018

விக்னேஷ்வரனின் கன்னத்தில், விழுந்த அடி

சிவில் பாதுகாப்புப் படையின் கேர்ணல் ரத்னபிரிய பந்துவுக்கு விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் கண்ணீருடன் வழஙகிய பிரியாவிடை வழங்கி, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் மற்றும் மாகாண சபை உறுப்பினர் எம்,கே.சிவாஜிலிங்கம் ஆகியோரை கன்னத்தில் அறைந்துள்ளதாக ரியல் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்துக்கு தலைவணங்கி அவர்கள் இருவரும் தமது பதவியை இராஜினாமா செய்ய வேண்டுமெனவும் அவர் இன்று (12) எளிய அமைப்பின் ஏற்பாட்டில் கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பங்கேற்று கருத்து வெளியிடுகையில் குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து கருத்து வெளியிடுகையில் "தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த காலத்திலிருந்து நாட்டை மீட்ட இராணுவத்தை சர்வதேசத்துக்கு காட்டிக்கொடுத்து அவர்களை தண்டிக்கும் நோக்கத்துடன் செயற்பட்டு வருகின்றது. நாட்டு இராணுவம் இழைக்காத யுத்தக் குற்றவிடயங்களை அடியொட்டி உருவாக்கப்பட்ட 30/1 பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளை ஒவ்வொன்றாக செயற்படுத்தும் பணிகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது." எனக் குறிப்பிட்டார்.

"வலிந்து காணாமல் ஆக்கப்படுதலை தடுப்பதற்கான பிரகடனத்தை அடிப்படையாகக் கொண்டு அரசாங்கம் காணாமற்போனோர் தொடர்பிலான அலுவலகத்தை உருவாக்கியுள்ளது. எமது நாட்டின் இராணுவத்தை சிறையில் அடைக்கின்றார்கள். அதேபோல் எமது இராணுவத்தை சர்வதேசத்திடம் காட்டிக்கொடுக்கும் அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் மக்கள் மௌமான இருப்பது ஏன் என புரியவில்லை." எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

8 கருத்துரைகள்:

@Sarath Weerrasekara,

தமிழரில் ஒரு பிரிவினர் அந்த நல்லுள்ளம் கொண்ட மகானை ஆதரிக்கின்றனள் அதை நீங்கள் ஒத்து கொள்ளுகிறீர்கள். அதே மறு பிரிவினர் நியாயம் தேடி சர்வதேச விசாரணை தேவை என கோருகின்றனர் அதனை ஏன் உங்களால் ஏற்று கொள்ள முடியவில்லை. மக்களின் ஆணையை ஏட்பாவராயின் உங்களுடைய தலைவருக்கு சாதகமான கோரிக்கையை மட்டும் ஏற்றுக்கொள்ளாமல் பாதகமான உண்மையான கோரிக்கைகளையும் ஏற்று கொள்ளுங்கள். சும்மா ஐந்தாம் ஆண்டு பிள்ளைக்கு கதை சொல்லுற மாதிரி சும்மா ரீலா விடாதீங்கோ.

Ajan.... Don't talk like a Nursery child. U r still living in a dream world like pre 2009. What u and ur goon has done to Tamils. Nothing. Let this Sinhalese gentleman do his human kind. Do not talk 'Thuvesam'

Tamil racist Vicky does not know anything about Tamils plights.

SL Army is far better than Tamil racist Vicky.

Mahinda Rajapaksa is regarded as a hero by many people. He made Sri Lanka a peaceful place for everyone. Though there are some who hate him.

குண்டன் (Kundan) ராசா, நான் வேற, அனுசாந் வேற, பெயருகளை குழப்பாதிங்கோ. முக்கியமாக exercise பண்ணி கொஞ்சம் மெலியுங்கோ.

(1) யாராக இருந்தால் என்ன?, பிரதியுபகாரம் எதிர்பாக்காமல் மக்களுக்கு நன்மைகள் செய்தவரை, போற்றி, நன்றி செலுத்தவேண்டியது அந்த மக்களின் முதல்கடமை.
(2) பணம்/பதவி/freeபிரியாணி களுக்கு சோடை போகாமல், மக்களின் உரிமைகளுக்காக போராடவேண்டியது அரசியல் தலைவர்களின் கடமை (basic qualification).

இங்கே, ஊர் மக்கள், விக்கி/சம்பந்தன் எல்லாரும் தங்கள்-தங்கள் கடமைகளை சரியாக செய்துள்ளனர். Please Keep it up forever!.

எனவே இந்த செய்தி “தலைப்பு” பொறுத்தமற்றது. தமிழ் நீதிபதி ஒருவர் தனது உயிரை காப்பாற்றி உயிரிழந்த சிங்கள bodyguards யின் மனைவியின் காலில் விழுந்ததை மறந்துவிட்டீர்களா. எல்லாத்திற்கும் லாப-நட்ட கணக்கு பார்ப்பவர்களுக்கு இது விளங்காது தான்.

Vivki is a Educated Fool. Sivagi is a Emotional Idiot. Nothing to be considered about these two fellows statements and activities.

வடக்கில் சட்டவிரோத குடியேற்றங்கள் விக்கி தடுப்பதால், இங்கு பலர் கடுப்பில் உள்ளார்கள்.

2013இலெ கை விடப்பட்டிருந்த மீள் குடியேற்ற செயலணி மீண்டும் செயட்பட தொடங்கியுள்ளது. அதை மிகவும் ராஜதந்திரமாக விகினேஸ்வரன் அவர்கள் கையாள வேண்டும். தேவைப்படின் இந்தியாவின் சட்ட உதவிகளையும் பெற்று கொள்ளவேண்டும். இந்திய இலங்கை உடன்படிக்கையின் பிரகாரம் மாகாண சபை ஒப்புதல் இன்றி ஒரு பிடி மண்ணையும் பெற முடியாது. எனவே ஏற்கனவே கைச்சாத்திடப்படட ஒப்பந்தத்தின் பிரகாரம் மீள் குடியேற்ற பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும். சட்டவிரோத குடியேற்றங்களை தடுக்கும் பொறுப்பு முதலமைச்சர் என்ற ரீதியில் உங்களுக்கு உள்ளது. இங்கே பல கழுகுகள் வட்டமிட்டுக்கொண்டு இருக்கின்றன.

Post a Comment